Thursday, February 24, 2011

இங்கே பிராமணன்.

Saturday, March 20, 2010



நம்முடைய முன்னோர்கள் பிரகாரம் பிறப்பினாலோ , ஜாதியினாலோ,குலம்,கோத்திரம் ,மதத்தினாலோ ஒருவன் பிராமணனாக ஆகிவிடுகிறான் . ஆனால், என்னை பொறுத்தவரை , பிராமணன் என்பவன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் .


எப்படி என்றால் மனத்தளவில் ஒருவன் பிறருக்கு கெடுதல் நினைக்காமலும் ,மனத்தூய்மை , வாய்மை ,அடுத்தவரை தன்னுடைய கொள்கைகளுக்கு அடிமைப் படுத்தாமலும் ,குற்றம் கண்டு பிடிக்காமலும், மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் எதிர்பார்க்காமலும் , தன்னுடைய பேச்சில் நம்பிக்கை வைத்து [Walk the Talk ] வாழ்க்கை வாழ்பவன் தான் பிராமணன்.


அந்த காலத்தில் மக்கள் தொகையே கம்மி , பிராமணர்கள் என்றால் சமுகத்தில் மதிப்பு இருந்தது , ஆனால் தற்பொழுதைய சமுகம் பிராமணர்களை ஒரு மாதிரி கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது. வைதிகம், கோவிலில் பூசாரி , மற்றும் எந்த ஒரு நல்ல, கெட்ட காரியத்திற்கும் பிராமணர்களை சமுகம் அண்டியது.


அவர்களும் கடவுளுக்கும் , மனசாட்சிக்கும், செய்யும் தொழிலுக்கும் பயந்து மரியாதையுடன் , நியம நிஷ்டியுடன் நடந்து வந்தார்கள் .மனதில் பட்ட நல்லது, கெட்டதை ஒளிவு மறைவின்றி ,எதற்கும் பயப்படாமல் உண்மையை பேசினார்கள் . அவர்களுக்கு சமுகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது . மூன்று தலைமுறைக்கு பேரும் புகழும் கிடைத்தது. மதிப்பை காப்பாற்றி கொள்ள தெரிந்து வாழ்ந்தார்கள்.


பிராமணன் பிறர் பார்க்கிறார்கள் என்றில்லாமல் எப்பொழுதுமே ஒரேமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ,எல்லோருடைய கண்ணிற்கும் பிராமணன் ஆவான் .நாம் சொல்வது நடை முறைக்கு சரிபட்டு வருமா என்று எல்லா கோணங்களில் இருந்தும் யோசிக்கணும் .


அந்த காலத்திற்கு ஏற்றாபோல் , அவர்கள் இருந்தார்கள், அதறகேற்றாபோல் சில வழி முறைகளும் இருந்தது. அதையே இந்த காலத்திற்கும் கடை பிடிக்க வேண்டும் என்றால் சில விஷயங்கள் சாத்தியம் இல்லை.


சாஸ்திரம் எழுதினவன் அவன் காலத்திற்கு எழுதினான். இப்பவும் இப்படிதான் செய்யணும் என்று பிடிவாதமாக ஒத்தை காலில் நின்றால், 'போயா போ' என்று வாழ்க்கை வெறுத்து போயி விடுவார்கள்.


நான் இன்னும் எழுதப் போவது எல்லாமே இந்த காலத்தில் எப்படி மாறி இருக்கிறார்கள் இந்த பிராமணர்கள் , எதனால் இப்படி , என்ன காரணத்தினால், நல்லதிற்கா, இல்லை கெட்ட காலமா, இங்கே பிராமணன் , எங்கே போகிறான் ?


கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

2 comments:


qusa said...
Better say nothing than nothing to the purpose. ........................................
full said...
Actions speak louder than words. ........................................

1 comment:

  1. இங்கே பிராமணன்
    http://www.indusladies.com/forums/showthread.php?t=131711#post2096889
    Posted by: malaswami
    On: 23rd January 2012 12:39 PM

    காலம் மாற, மாற, நாமும் மாறித்தானே ஆக வேண்டும்? அது ஒரு புறம் இருக்க, அந்தணர்கள் நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்களை விட்டது போதாதென்று, நம்முடைய பல அரிதான நற்பண்புகளையும் இன்று இழந்து விட்டார்கள். இதுவே அவர்கள் சமுதாயத்தில் தலை குனிந்து நிற்பதற்கான காரணம் ஆகும்.

    பொய் சொல்லாமை, தன்னலமில்லாமை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாமை, மறந்தும் இன்னொருவருக்கு தீங்கு நினையாமை, பகட்டாக வாழ முயலாமல், எளிமையான வாழ்க்கையே வாழுதல், பகைவரும் தலைவணங்கும் பொறுமை, அறிவின் உறைவிடமாகத் திகழ்ந்தும், சிறிதும் கர்வமின்றி நடத்தல், தனக்குத் தெரிந்த எதையும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க மறுக்காமை, ஏனைய பிற இனத்தவரோடும் பிணக்கின்றி, இணக்கமுடன் வாழுதல், நேர்மையால் கிடைத்த உள்ளத் துணிவு, கனிவான பேச்சு போன்ற நற்பண்புகளையே நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    இதனால் தான் பாரதியும் பல இடங்களில் பார்ப்பனர்கள் தமது குலப் பண்புகளையும், ஒழுக்கத்தையும் மறந்து நடந்து கொள்வதாகக் கோபத்துடனும், வருத்தத்துடனும் குறிப்பிடுகிறான்.

    ,,,,,,,,,,,,,,,,,,,,,
    Posted by: Sriniketan
    On: 23rd January 2012 09:27 AM

    Mathangi ma'am,
    பார்ப்பனன் என்பதில் இருந்துதான் Brahmin வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு அர்த்தம், யாரிடமும் பகை கொள்ளாமல், ஒற்றுமையாக வாழ்பவனே பார்ப்பனன். இந்த குணாதிசயம் யாரிடம் உள்ளதோ அவர்கள் எல்லோருமே, பார்ப்பனர்கள் Brahminsதான் என்பது என் கருத்து.

    உங்க கருத்துக்கள் சரிதான். காலத்திற்கு ஏற்றார் போல் நடைமுறைக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தால், பிரச்சனையே இல்லை..மேலும், பழைய பெருமைகளைப் பேசியும் புண்ணியம் இல்லை.

    Sriniketan

    ReplyDelete