Thursday, February 24, 2011

தலையிலே கட்டு

Thursday, January 28, 2010




என் அம்மா வுக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர் , என் வீட்டில் எல்லாரும் ஒன்னா சேர்ந்தாலே ரொம்பவே கடி தான். அப்படித்தான் நேற்று அம்மாவுடன் டெலிபோனில் பேசும்போது எப்பவும் போல் ,'எப்டி கீறே ' நு கேட்டதுக்கு
அம்மா 'ஒரு ரூவாக்கு ரெண்டு கட்டு 'நு சொன்னாள்.
'என்னமா ,அநியாயமா வெலை ஜாஸ்தியா சொல்றே'
'நான் என்னமா செய்யரது, ஒரே மழை பெஞ்சு கீரை எல்லாம் அழுகி போச்சு'

'அதுக்கு என்தலையிலே கட்டணுமா'? '
நான் கட்டி தாம்மா கொடுக்கறேன்'

இதை நான் என் மகன் ,மருமகளிடம் சொன்ன போது, என்னுடைய ப்ளாகில் போடச் சொன்னார்கள். .


9 comments:


Satish N said...
hahaha .... good one :) on similar lines ... I heard one ...
A guy goes to a veggie market and ask the vendor ... "எப்படி  பா  உருள  (potato) and he says ... "இது  உன்  மார்க்கெட்  சாமி  ... நீ  எப்படி  வேணும்னாலும்  உருளு  (roll)
;-))
nAradA said...
Your கடி  is கொசுக்கடி But Satish's கடி  is முதலைக்கடி !
mathangi said...
ரெண்டு  கடியும்  நான்  சாப்பிடுகிற  குஜராத்தி   கடியை  விட  நல்லாவே  இருக்கு .
Ramjee Nagarajan said...
எப்படிடா இந்த அம்மாவால மட்டு இப்டீலாம் கடிக்க முடியுதுன்னு இம்பூட்டு நாளா தலைய பிச்சுகினு இருந்த நம்பளுக்கு படு ஷோக்கா இந்த கதை மூலமா பதில் வந்திடுச்சு.
Ramjee Nagarajan said...
குஜ்ஜு கடி கூட உண்டா என்ன?
nAradA said...
Yes, Gujju kaDi is similar to what is known as "மோர்க்குழம்பு " in தமிழ் --not that delicious and spicy but has an "அசட்டு  தித்திப்பு " and passes as an appetizer.
mathangi said...
என்ன சாருங்களே என்னுடைய கடியே தேவலை போல இருக்கே .ராம்ஜி , குஜராத்தி கடி வேணும்னால் ஆத்துக்கு வாங்கோ 'மூங்' கூட சமைச்சு போடறேன் .இன்னும் எங்காத்துல குஜ்ஜு சமையல் தான். பழக்க தோஷம் விடலை . எங்க ஆத்துலே, நானு , என் அண்ணன் தான் கடியில் ரொம்ப பேர் வாங்குவோம் , ரெண்டு பெரும் ஒன்னா சேர்ந்தாலே , எல்லாரும் ஒடோமாஸ் தடவிண்டு வந்துடுவாள். ஆனால் நல்ல ரசிப்பாள் எல்லோரும். அர்ஜுன் கூட 'அய்யோ , அம்மா வும், பாட்டியும் ஜுகல் பந்தி போடறலேன்னு'தலையிலே கையை வச்சிண்டுடுவான்.
Ramjee Nagarajan said...
அந்த கன்றாவி சக்கரை போட்ட மோர்குழம்பை   இன்னமும் சமைக்கறீங்க   சிவ சிவா !
mathangi said...
என்ன ராம்ஜி ,இந்த 'கடி' கட்டு என் தலையை 'கடிக்காம' போகாது போல இருக்கே!

No comments:

Post a Comment