Thursday, February 24, 2011

வேலைக்காரி


Thursday, February 24, 2011


வேலைக்காரி


Sunday, December 6, 2009


வேலைக்காரிகள் பல விதம். நான் சொல்லப்போவது எல்லா ரகமும் தான் .மனைவி கூட நல்ல தாக அமையும் ஆனால் ஒரு வேலைக்காரி நல்லவளாக அமைவது கஷ்டம் .

நான் சொல்ற எல்லா காரியமும் ஒழுங்காசெய்வாளா என்பதும் தெரியாது.
என்னுடைய ராசி அதிகமா நல்லா வே அமையும். முதலில் லக்ஷ்மி வந்தாள்அவள் பேர் எக்ஸ்பிரஸ் ஏன்னா வரும் போதே கதவுக்கு இரண்டு அடி முன்னாலேயே செருப்பை சரியாக விசிறி கடாசுவா.

எல்லா காரியமும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செஞ்சிடுவா .அவ வரதுக்கு முன்னாடியே நா தயாரா இருக்கணும் .


அடுத்தவ பெரிய வீடு மாறினதும் சம்பளம் மேலே கேட்டா .வீடு மாறினாலும் மனுஷா அதே தானே ! பெருக்கி மொழுக கூட கேட்டா பரவாயில்லை . பெரிய வீடுங்கரதினாலே அடிக்கடி ட்ரெஸ் மாற்ற போறோமா ? இல்லையே !


அடுத்தவ பெண்ணை அடிக்கடி அனுபிடுவோ .அவ கல்யாணம் ஆனா பிறகும் புருஷனை விட்டு வந்தவ . அவளுக்கு சல்மான் கான் மாதிரி புருஷன் வேணுமாம் . அவ வுயரம் ஐந்து அடி கூட கிடையாது . எதோ சினிமா பாத்துட்டு சினிமா ஹீரோ வோட தான் குடும்பம் நடத்துவேன் என்றால் எப்படி ?


அடுத்தவ தாழ்த்தப்பட்ட ஜாதி .எல்லோரும் அவளை நீ பிராமண குடும்பத்தில் எப்படி வேலைக்கு வைக்கலாம் என்று கேட்டார்கள் . எனக்கு வேண்டியது வேலை செய்ய ஒரு மனுஷி . அவ எந்த ஜாதியானாலும் பரவாயில்லை என்று கண்டுக்காம விட்டுவிட்டேன் . நான் வேலைக்கு போவதால் என்னால் ஜாதி பாத்து ஆளை வைக்க முடியாது.


ஹோட்டல் போனால் அங்கே எந்த ஜாதிக்காரன் வேலை செய்யறான் என்றா

பாத்து சாப்பிடுகிறோம்? எவன் செய்யறான் , எப்படி செய்யறான் , எப்போ செய்யறான் என்று யாருக்குமே தெரியாது . அப்படி இருக்க என்ன ஜாதி, வேலை ?

சில வேலைக்காரிகள் வந்தமா போனோமா என்று வேலை செஞ்சுட்டு போயிண்டேருப்பா .ஒரு சிலர் கொஞ்சம் நீள மூக்கு டைப். யார் வரா,யார் போறா என்று ரொம்பவே கண் குத்தி பாம்பு மாதிரி கவனிசின்டே இருப்பா.

வீட்டில் என்ன வாங்கினா,
எங்க வைக்கிறா என்று அதிக கவனம் செலுத்துவா.

மிஞ்சி போனால் என்ன கேட்டு சுருட்டிக்கலாம்னு மனக்கணக்கு போட்டுண்டு இருப்பா . விட்டா அவுத்துண்டே போயிடுவா .


சிலர் நல்ல கதை சொல்வா . அங்கிட்டு இங்கிட்டு வேலையும் நன்னா பண்ணுவா. எப்ப பாரு மற்ற வீடோட கம்ப்பர் பண்ணுவா .


தீவாளி, பொங்கல் பண்டிகை வந்தால் என்ன வேணுமோ அதை அதிகாரத்தோட கேட்டு வாங்குவா. நமக்கு என்ன கொடுக்கணுமோ அதை வாங்க மாட்டாள் .


இதெல்லாம் பார்த்தால் பேசாம நானே வேலைக்கு போயிடலாம் ! 
 

No comments:

Post a Comment