Sunday, February 6, 2011

பெண்ணே உன் விலை என்ன?


சமீபத்தில் நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா?

ஒரு பக்கம் கணவன் மனைவியை நாற்பதாயிரத்திற்கு விற்று விட்டான்.

மறுபக்கம் அம்மா காரி சின்ன பொண்ணை ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணு கிறாள்.

பொண்கள் என்ன பண்டமா? இஷ்டப்படி விலை பேசுவதற்கும், அவர்கள் விருப்பு வெறுப்பை பற்றிய ஒரு சிந்தனையும் இல்லாமல் பரிமாறுவதற்கு?

ஆதி நாளில் இருந்து பெண்களை ஒரு உணர்ச்சி, விருப்பு வெறுப்பு இல்லாத ஜடமாக தான் சமுகம் பார்த்தது. இன்றும் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.

அவளை ராவணன் ஒரு மான் வேடத்தில் வந்து தூக்கிக் கொண்டு போனான்.

துரியோதனன் அவளை துகில் உரித்துப் பார்த்தான் .

மரியாதை புருஷன் ராமனோ எல்லாவற்றிகும் மேலாக, தன்னுடைய சுய நலத்திற்காக சீதையை தீக்குளிக்க செய்தான்.

பீஷ்மர் ஒரு பெண்ணை கல்யாணம் செய்யாததால் , அவளே திருநங்கையாக வந்து அவருடைய முடிவிற்கு காரணமானாள்.

இது எல்லாவற்றிலும் ஆணினுடைய செயலினால் ஒரு பெண் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . எல்லா இடத்திலுமே அவள் ஒரு silent spectator தான் .

இது எல்லாம் பழசே! old is gold!!!!!

வீட்டில் அவள் ஒரு கௌரவமான வேலைக்காரி , எல்லாருடைய தேவைகளையும் கவனித்து அனுசரித்து, குடும்ப பெயரை காப்பாற்ற பாடு படணும்.

இதைப் படிக்கும் ஆணோ, பெண்ணோ தங்கள் குடும்ப பொறுப்பை சுமக்கும் பெண்களுடைய பிடித்தது, பிடிக்காதது எது என்று தெரிந்து வைத்து இருக்கீர்களா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். அது மனைவியோ, கூட பிறந்த தங்கை, அக்காவோ,இல்லை பெரியம்மா, பாட்டி , மன்னி, அத்தை, சித்தி யாராக இருந்தாலும் சரி.

அதே அவர்களை போயி கேட்டு பாருங்கள் , பளிச்சென்று ஒரு பட்டியலே யார் யாருக்கு என்ன என்ன பிடிக்கும் என்று பட்டியலே போட்டு விடுவார்கள். அது கலரோ, சாப்பாடோ, பாட்டோ, சினிமாவோ , ஊரோ , ஹீரோ, ஹீரோயினோ எதுவாக இருந்தாலும் சரி, அது தான் தன்னை மிஞ்சிய பாசம் , எது ஒண்ணையும் எதிர் பார்க்காமல் செய்வது அவர்கள் தான் .

அப்படி தெரிந்திருந்தால் , நீங்கள் கொஞ்சம் பரவாயில்லை. அதே போல் அவர்களுக்கு பிடித்தமானதை வாங்கி தந்திருக்கீர்களா? இல்லை என்றால், உடனேவாங்கியோ, இல்லை வெளியே அழைத்து செல்லுங்கள்.
சின்ன சின்ன ஆசை களை பூர்த்தி செய்யுங்கள்.

ஒரு உலக சர்வே மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் வருடத்திற்கு கிட்ட தட்ட இரண்டு லட்சத்திற்கான வேலைகளை செய்வதாக சொல்கிறது.

எல்லோருக்கும் 'சண்டே' உண்டு, ஆனால் அவளுக்கு மட்டும் 'சண்டே' தனி. எல்லோருக்கும் பிடித்ததை மெனு போட்டு செய்யணும் . எல்லோருக்கும் ரெஸ்ட் உண்டு .அவளுக்கு அன்று 'ஓவர் டைம்' .

ஒரு ஆண் மனைவியை இழந்தால் அவனுக்கு மறுமணம், அவனுக்கு குழந்தை குட்டிகள் இருந்தால் உடனே இரண்டாம் கல்யாணம் . அவனுக்கு தேவை குழந்தைக்கு தாயா இல்லை மனைவியா?

அப்பவும் முடிந்தவரை கன்னி பெண்ணாகத்தான் பார்ப்பான். ஏன் அவனை போல் ஒரு விதவை, குழந்தையுடன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?
அதற்கு பெரிய மனது வேண்டும் அவனுக்கும் , அவனைச்சுற்றி இருக்கும் 'மனிதர்களுக்கும்! '


அதே ஒரு பெண் கணவனை இழந்தால் அவளுக்கு மறுமணம் தேவையா? இது தான் கேள்வி , நல்ல காலம் இப்போ கொஞ்சம் காலம் மாறியிருக்கு, thanks to the frequent divorces! [ die worses] .

படிப்பு அறிவும் , உலகக்கண்ணோட்டம் மாறியிருப்பதினாலும் ஆணும் பெண்ணும் எதற்காக மறுமணம் என்று தெரிந்து தான் திருமண உலகில் மறுபடி காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் நின்று standing ovation கொடுக்கிறேன்!

அடுத்ததாக வம்ச விருத்தி. ஒரு கல்யாணமான ஜோடிக்கு கல்யாணம் ஆகி ஒரு அஞ்சு வருஷத்திற்குள்ளே பிள்ளை பெறவில்லை என்றால், சமுக கண்ணோட்டம் வேறே ஆகி விடுகிறது. உடனே டாக்டரை போயி பார்க்கச் சொல்லும், ஏன் என்றால் பெண் மலடியோ என்று தான் நினைக்கதோன்றும், ஏன் அது ஆண் மலடாக இருக்கக் கூடாதா? ஆனால் அது கௌரவக் கொறைச்சல் .

அப்படியே பிறந்தாலும் அது பெண்ணாக இருந்து விட்டால் , குறை எல்லாம் அந்த பெண்ணின் மீது தான் . ஆணா பெண்ணா என்று முடிவு செய்வதே ஆணின் 'க்ரோமொசம்ஸ்' தான் , இது எத்தனை பேருக்கு தெரியும்?


பெண்ணை ஒரு பாரமாகப் பார்ப்பதை விடணும். சுமந்தவளும் ,பெற்றவளும் பெண்ணே!

பெண்ணே சக்தியின் ரூபம் தான் , எவன் ஒருவன் வீட்டில் பெண்ணை மதித்து, மரியாதை கொடுத்து ஒரு உணர்ச்சியுள்ள மனுஷியாக நடத்துகிறானோ அவனுக்கு தலை வணங்குகிறேன்!

No comments:

Post a Comment