Sunday, February 6, 2011

அரசனை நம்பி ……



ஜீவிதா வீட்டிலே எப்பவுமே அவ புருஷன் கைலாசம் தான் வருஷக் கணக்கிலே துணி துவைக்கிறது , என்னவோ வீட்டிலே டிவி வந்தப்புறம் ஜீவிதா பிடிவாதமா புருஷனை தொந்தரவு பண்ணிண்டே இருக்காள் .

டிவியிலே ஒரு சோப்பு விளம்பரம் வந்ததிலேயிருந்து, அவனை விடாம தொரத்தி ,இவளுடைய பிடுங்கல் தாங்காம ,வேறே வழி இல்லாம ஒரே ஒரு கண்டிஷன் போட்டு விட்டுட்டான்.


அவளும் நல்லதா போச்சுன்னு சந்தோஷமா , துணை துவைக்க கடைக்குப் போயி 'அரசன் 'சோப்பை வாங்கிண்டு வந்தாள்.

ரொம்ப சுறுசுறுப்பா துணியெல்லாம் நனைச்சு , பிறகு 'அரசனைக்' கொண்டு துவைத்த பின்னாடி பசங்கள் எல்லாம் ஒரே கூசல், கத்தல் தான் .



விஷயம் என்னன்னால் துணியிலே அழுக்கே போகலை . ஜீவிதா நினைச்சா அரசன் சோப்பு போட்டா, துணி வெளுக்கும்னு . ஆனால் நடந்தது என்னன்னா , அவ வெறும சோப்பை போட்டாளே தவிர துணிகளை ஊற வைக்காம துவைச்சா எப்படி அழுக்கு போகும்?


இப்ப என்ன பண்ண முடியும்? அவ புருஷன் சொன்னது இது தான் .

''இப்ப என்னை துணி துவைக்க வேண்டாம்ன்னு சொன்னாக்க , அப்பறம் எப்பவுமே நான் துணி துவைக்க மாட்டேன்''


இப்போ ஜீவிதா கதி ..... அரசனை நம்பி புருஷன கைவிட்ட கதி தான்!


No comments:

Post a Comment