'என்னடி என்னை என்ன நினைச்சுண்டு இருக்கே' ? 'நான் ஒன்னும் கையாலாகதவான் இல்லை',
‘ எல்லாம் எடுத்து வச்சிட்டு போ , நானே போட்டுண்டு சாப்டுக்கிறேன் ’.
இதுகொஞ்சம் ஓவரா பட்டது புஷ்பாக்கு ,இருந்தாலும் மறு பேச்சு பேசாம எல்லாத்தையும் டைனிங் டேபிளில் எடுத்து வச்சிட்டு ஆபீசுக்கு கிளம்பினாள் .
இது ஒருவாரமாகவே நடப்பது தான் , ஒரு மாற்றமும் இல்லை .
சம்பத் போனவாரம் அவசரமாக வெளியே போகும் போது கால் தடுக்கி விழுந்து கால் எலும்பு முறிந்து கட்டு போட்டு படுக்கையில் இருப்பதால் ,இந்த கூத்து தினமும் .
தன்னால் முடிந்தவரை புஷ்பா எல்லா வேலையும் பண்ணி காலை டிபன் கொடுத்துட்டு , மருந்து மாத்திரையை எடுத்து டேபிள் பக்கத்திலே வச்சுட்டு , தண்ணி பாட்டில் , நொறுக்கு தின்னி , பிஸ்கட் , டிவி ரிமோட் , அவனுடைய லேப்டாப் , மொபைல் போன் எல்லாத்தையும் கைக்கு எட்டும் தூரத்திலேயே வச்சுட்டு , ஒன்னுக்கு பாஸ் பண்ண , பாட்டிலையும் பக்கத்தில் எடுத்து வச்சிட்டு , ஒரு முறை எல்லாம் இருக்காண்ணு சரி பார்த்துட்டு தான் கிளம்புவாள் .
ஒரு நாள் அப்படி தான் அவசரத்திலே டிவி ரிமோட் கட்டில் அடியில் கிடப்பதை பார்க்காமல் போயிட்டாள் , சாயங்காலம் வந்ததும் நல்ல செம டோஸ் , அர்ச்சனை வசை மாறியா கிடச்சது .
ஆபீஸ்லேயும் லீவ் கொடுக்க மாட்டேனுட்டான் , இம்பார்டன்ட் ப்ராஜெக்ட் முடிகிறவரைக்கும் முச்சு விடக் கூடாது .
இந்த மனுஷன் நல்ல நாளிலேயே நாய் பால் இப்போ கேட்கவேவேண்டாம் , ரொம்பவே பொண்டாட்டிக்கு உருகரமாதிரி பண்ணிக்கறேன் , நீ ஒண்ணும் எடுத்து வைக்க வேண்டாம்னு ஆர்டர் வேற !.
புஷ்பாவிற்கு 10 நாளாவே நல்ல தலைவலி ,இந்த மனுஷனோட ஆட்டம் தாங்கலை , காலை நகத்த கஷ்டப்பட்டு , கத்த வேண்டியது , ஆனால் அவ கூட போய் ஹெல்ப் பண்ண போனால் , ‘வேண்டாம் , நானே பண்ணிப்பேன் , எனக்கு யாரும் ஒன்னும் பண்ண வேண்டாம் ‘’ ‘’கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை , இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை ‘’ மனதில் நினத்துக்கொண்டே அவனுக்கு ஹெல்ப் பண்ணினாள் புஷ்பா .
திடீர்னு என்ன ஆச்சுஇவருக்கு ’’, மனதில் எழுந்த கேள்விக்கு பதில் பிறகு தெரிந்தது . அவள் நாத்தனார் லீலா வந்துட்டு போனது , அவள் கணவன் பாஸ்கரும் சம்பத்தும் ஒரேகுட்டையில்ஊறினமட்டைகள் , பெஸ்ட் தோஸ்த் வேறே . ஒருமுறை பாஸ்கரும் காலை ஒடைததுக் கொண்ட அந்த அனுபவம் இப்போ பேசறது , பாஸ்கர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தான் என்று சொல்லிட்டு போயிட்டாள் .அதான் ரோசம் வந்த மாதிரி பேசறான் .
மாமியார் கஸ்துரி, பாஸ்கர் விழுந்த முதல் ரெண்டு நாள் படுத்தற பாட்டை பார்த்துட்டு ,’ நீயாச்சு , உன் புருஷன் ஆச்சு ,என்னால் முடியாதுன்னு கிளம்பி போயிட்டாள்.
புஷ்பா யாரையும் கேட்க முடியாது , சம்பத் இவளை ஹெல்ப்க்கு யார் வீட்டுக்கும் அனுப்பினது கிடையாது .
லீலா கணவன் விழுந்த போது கூட போயி பார்த்துட்டு வந்ததோட சரி , புஷ்பாவும் இவன் மனது தெரிந்து ஒன்னும் சொல்லலை , இப்போ போயி யார் வருவார்கள் ?
ஆபீசிலிரிந்து வந்ததும் முதலில் , ஒன்னுக்கு பாட்டிலை எடுத்து கொட்டிட்டு அதை சுத்தம் பண்ணிட்டு , அவன் சாப்பிட்ட பிளேட்ஸ் எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு , ராத்திரி சாப்பாட்டை ரெடி பண்ணிண்டே அடுத்த நாளுக்கு வேண்டிய காயிகளை நறுக்கி எல்லாம் ரெடி பண்ணிட்டு , சாப்பிட ஒன்பது மணி ஆகிவிடும் .
முதல் ஒரு வாரம் ஒரு மேல் நர்சை போட்டு அவன் மலம் போனால் எடுத்து கொட்ட ஏற்பாடு பண்ணினால் அவனையும் கரித்துக்கொட்டி அனுப்பிவிட்டான் .
இப்போ வெல்லாம் இவள் ஆபீஸ்போகிறதுக்குள்ளேயே எல்லாம் செய்துவிட்டு , பிறகு குளித்துவிட்டு போவாள் .
இப்படியே ஒரு மாசம் போச்சு , கொஞ்சம் எழுந்து நடமாட செய்தான் சம்பத் , பதினஞ்சே நாளில் எல்லாம் சரியாகிப் போயாச்சு .
ஒரு நாள் பழயமாதிரி
‘’ஏய் , ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வா ’’
'ரொம்ப தான் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே ,கால்ஒடிந்து படுதிண்டிருந்தபோ இருந்த ரோஷம் எங்கே போச்சு ?''
தண்ணி எடுத்துண்டு போய் கொடுத்தாள்.
இனிமேல் இந்த ஆளோட ஆட்டம் ஆரம்பிக்கும் , நம்ப நல்லாவே மாட்டின்டோம் . இதுக்கு ஒரே வழி புத்தி சொல்றது தான் .
அடுத்ததாக , ‘’டி , அந்த ரிமோட்டை எங்க வச்சே , எடுத்து கொடுத்துட்டு போ .’’
வந்ததே கோபம் புஷ்பாவுக்கு .
'ஏன் காலை ஓடைததுண்டபோ இருந்த ரோஷம் இப்போ எங்கே போச்சு' ?
உங்களுக்கு வேணும்னா நீங்களே வந்து எடுத்துண்டு போங்க , என்னால் எல்லா வேலையும் செய்ய முடியாது , நானும் மனுஷி தான் ''.’’என்னை உட்கார வச்சு ஒரு நாள் தண்ணி கொடுத்ததில்லை , இப்ப என்னடான்ன அதிகாரம் ஜாஸ்தியா போயிண்டே இருக்கே''
அவ்வளவு தான் , பார்க்கணுமே சம்பத்தை , முஞ்சியை உர்ன்னு வச்சிண்டு எழுந்து வந்து ரிமோட்டை தேடி எடுத்துண்டு போனான் .
புஷ்பா மனதுக்குள் சந்தோஷத்துடன் , 'என்ன தவம் செய்தனை' …………… பாடிக்கொண்டே தன் வேலையை ஆரம்பித்தாள் .
இந்த மாதிரி எத்தனையோ புருஷன்கள் மனைவிக்கு தொந்தரவு கொடுத்துண்டு , ஆண்டவன் கொடுத்த கை கால்களை சரிவர உபயோகிக்காமல் சும்மா மத்தவர்களை ஏவ வேண்டியது . இந்த மாதிரி ஜன்மங்கள் உலகத்தில் இருக்க தான் செய்கிறார்கள் … என்ன செய்வது? .
No comments:
Post a Comment