Friday, April 19, 2013

பெரியவா என்றால் யார் ? – சதாசிவ சர்மா

பெரியவா என்றால் யார் ? – சதாசிவ சர்மா

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது பேசியது:

ஸ்ரீ பெரியவா : ஏண்டா, பெரியவான்னா என்ன?

சதாசிவ சர்மா : (பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)

ஸ்ரீ பெரியவா : தெரியலயா………பெ ரி ய வா …..ந்நா என்ன?

சதாசிவ சர்மா : (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)

ஸ்ரீ பெரியவா :ரி ………..ரி ந்னா ரிக் வேதம், ய …………ய ந்னா யஜுர் வேதம். இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’. இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ந்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு. அதாவது ரி …….ய…….அ………வ.
இப்ப அ+வ = வா……. இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படித்திட்டேன்னு பாக்கிறயா..? ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?..

(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்)

ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா? அஞ்ஞானம்நு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ந்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்தையாயிடறது.

இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறதைதான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“

(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.
 

No comments:

Post a Comment