Thursday, March 28, 2013

சில இலைகளும், அவற்றின் மருத்துவக் குணங்களும்


 சில இலைகளும்அவற்றின் மருத்துவக் குணங்களும்

cid:image001.png@01CE2AF5.8D9FB050
நம்மிடமிருந்து மறைந்து போனநாம் மறந்து போன சில மருத்துவக் குறிப்புகள்...
சில இலைகளும்ற்றின் மருத்துவக் குணங்களும்

துளசி:- ஜீரணக் கோளாறுகள்காய்ச்சல்இருமல்ஈரல் சம்பந்தமான நோய்கள்காதுவலி முதலியவற்றிற்குச் சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றிச் சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல்அனீமியாமஞ்சள் காமாலைசீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது.

அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்குப் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இம்மாதிரிச் செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறையகொலாஸ்டிரல் குறையநரம்புத்தளர்ச்சி நீங்கஇரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.

அரச இலை:- ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறுநல்ல மலமிளக்கிஉடலைக் குளிர்ச்சியடையச் செய்கிறது. காமஉணர்ச்சிகளைத் தூண்டும்கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லன.

பூவரசு:- தீக்காயங்கள்புண்கள்தோல் வியாதிகள்தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதிசீதபேதிக்கு, சாறு மிகவும் சிறந்தது.

கல்யாண முருங்கை (முள் முருங்கை):- அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பிரியும்மலமிளக்கிமாத விடாய்த் தொல்லையை நீக்கும். கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களைக்குறைக்கும். நீரிழிவுசீதபேதிவாதம் குணமடையும். 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:- சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டுச் சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னி போல் அரைத்துச் சாறு பிழிந்தால், ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effective in kidney disorders). சிறுநீர் தொல்லைகள் வராமல்சிறுநீரகத்தைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூடவாரம் இரண்டு நாள் வாழைத்தண்டுச் சாறு குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி:- இது நல்ல பசியைத் தூண்டும்பித்தம் குறையும். காய்ச்சல்சளிஇருமல்மூலம்வாதம்நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:- பேதிசீதபேதிகாய்ச்சல்எரிச்சல்ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:- சிறுநீர் பிரச்சினைஜீரணக் கோளாறுஉஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கற்பூர வல்லி (ஓமவல்லி):- மிகச் சிறந்த இருமல் மருந்து. இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு,தொண்டை வறட்சிஇருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாகச் செயல் புரியும்.

வல்லாரை:- எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலைஅல்சர்தொழுநோய்யானைக்கால் வியாதிபேதி,நரம்புத்தளர்ச்சிஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்குப் பத்து இலைகள் போதும்.

கண்டங்கத்திரி :- காசநோய்ஆஸ்துமாமார்புச்சளிகாய்ச்சல்தொழுநோய்இரத்த அழுத்தம்பக்கவாதம்கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்குப் பத்து இலைகள் போதும்.

தூதுவளை:- நரம்புத்தளர்ச்சி மறையும்மார்புச்சளி அகற்றும்தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும்ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக். ஒரு நேரத்திற்குப் பத்து இலைகள் போதும். காது மந்தம்,நமைச்சல்உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூதுவளை நல்லது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி:- காமாலைகண் கோளாறுகல்லீரல் கோளாறு முதலியவற்றிற்குச் சிறந்தது.

செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும்சிறுநீர்ப் பிரச்னைகளையும் குணப்படுத்தும்உடலின் உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களைக் குணப்படுத்தும்முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளைப் (mucus membranes)பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளிக் கீரை:- சீரணக் கோளாறுகள்வாய்வுத் தொல்லைகள்புற்றுநோய்அல்சர்ஈரல் கோளாறுகள்இருமல்,அனீமியாதோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளேவெளியே உள்ள வீக்கங்களைக் குணப்படுத்தும்,குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும்புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். (World’s best ointment.)

தும்பை:- பக்கவாதம்சளிஇருமல்தலைவலிமார்புச்சளிமூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்தச் சிறந்தது. பாம்புக்கடிக்கு, தும்பை இலைச்சாறு பாதியும்வாழைத்தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒருதடவைக்குப் பத்து இலை போதும்.

வெங்காயமும்பூண்டும்:- கிருமிகளை வெளியேற்றும் டானிக்சொறிசிரங்குயானைக்கால் வியாதிசைனஸ்டான்ஸில்,இரத்த அழுத்தம்இருமல்ஆஸ்துமாகாய்ச்சல்காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம்சொறிசிரங்குதோல் வியாதிமூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்துப் பூசலாம். சொறி சிரங்குக்குக் கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.

கிடைத்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். முடிந்த மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகமாகலாம்!

No comments:

Post a Comment