Monday, March 25, 2013

நான் எழுதுவது கடிதம் அல்ல, ....




நம்மில் எத்தனை பேர் கடிதம் எழுதி இருப்போம்?

வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் வசதிகள் , ஈமெயில்' ஸ்கைப்' பெருகப் பெருக லெட்டர் எழுதும் கலையே காணோம்.

போஸ்ட் கார்ட், இன்லண்ட் லெட்டர், கவர் என்று விதங்கள் .

நினைவிருக்கிறதா?  சினிமாக்களில் கடிதம் படிக்கும் போது எழுதுபவர்களின் முகம் தெரியும், அதே  போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி பாணி உண்டு, அவர்களின் கையெழுத்து,எழுதும் விதம் ,உபயோகப்படுத்தப் படும் சொற்கள், நுணுக்கி, நெளித்து சுழித்து எழுதும் விதம் ,அப்பப்பா ,சொல்லிக் கொண்டேப்  போகலாம் .

எ ன் காலத்தில் போஸ்ட்மேனுக்காகவே வாசல் படியில் காத்துக் கொண்டிருப்பதே ஒரு தனி சுவை, சில சமயங்களில் கொடுமையும் கூட, கடிதம் எதிர் பார்க்கும் போது, ஒரு மணிஆர்டர் ரசீதாவது வராதா என மனம் எதிர்பார்க்கும், அதே மனம் அந்த ரசீதையே எதிரியாகப் பார்க்கும்!

நமக்கு என்று முகவரி இட்ட கடிதங்களை மற்றவர்கள் பார்த்துடா வண்ணம் ஒளித்து மறைத்து படிக்கும் போதும் அதை யார் கண்ணிலும் படாத மாதிரி அலமாரியில் சொருகி வைத்து விட்டு, பிறகு நம்மாலே அதை வெறி பிடித்தா மாதிரி தேடுவது, என்ன சொல்வது?

இப்ப, வெறும் ஈ மெயில், யாரும் படிக்க சான்ஸே இல்லை , வெறும் பாஸ்வர்டை மட்டும் மறக்காமல் இருந்தாலே சரி. 

எனக்கு நுணுக்கி, நிறைய விஷயங்களை நேர் காணல் மாதிரி எழுதிப் பழக்கம், என் அப்பாவிற்கு என் கடிதங்களைப் படிக்கும்  போது அப்படியே நேரில் காண்பது போல இருக்குமாம், சில சமயம் சிவசங்கரி கதையைப் படிப்பது போலக் கூடத் தோணுமாம்.

கடிதம் என்பது வெறும் எழுத்துக்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப் பட்டது அல்ல, அவை உள்  மனதில் இருந்து வீறு கொண்டு எழுந்த உள்ளங்கள், உள்ளங்களின் பிரதி பிம்பங்கள், ' தீயினால் சுட்டப் புண் கூட ஆறிடும் ஆனால் எழுதும் வார்த்தைகள் மனிதனை அப்படியே சுட்டு எரித்து விடும், எழுத்துக்கள் கண்கள் முன்னாடி பரத நாட்யமும், டிஸ்கோவும், ஏன் சில சமயம் ருத்ர தாண்டவமே ஆடும்!

அதனால் எழுதும் முன் யோசித்து பின் விளைவுகள் ,பக்க விளைவுகள்பற்றி சிந்தித்து  நன்கு யோசித்து எழுத  வேண்டும். 


தைப் படித்த பின்பாவது எத்தனை பேர் கடிதம் எழுத முயற்சிக்கிறார்கள் என்று பார்ப்போம்,

No comments:

Post a Comment