எங்க வீட்டு வேலைக்காரிக்கு யாராவது வீடு தேடி வந்து கல்யாணப் பத்திரிகையோ,காது குத்தல், பொறந்த நாளுன்னு கூப்பிட்டாளோ, மொதல்ல போறது இவ தான்.வீட்டுல வேலை செய்யாம போறோமேன்னு கொஞ்ச கூட ஒடம்புல சொரனையே கிடையாது, 'தோ வந்துடுவேன்னு போனா' , கொறஞ்சது 4 நாள் , ஆனா சொல்லாமப் போனா கொறஞ்சது ஒரு வாரம்.அந்த ஒரு வாரத்துக்கு பணம் கட் பண்ணா மூஞ்சி ஒரு வாரத்துக்கு திரிஷ்டி கழிக்கர பூசணிக்காய் மாதிரி சும்மா பவுர்ணமி சந்திரன் கணக்கா இருக்கும்!
எப்டித் தான் இவங்களாலே பணம் செலவழிச்சுண்டு ஊருக்குப் போக முடியறதோ? நம்ம என்னடான்னா ஆயிரம் தடவ யோசிக்கனுமா இருக்கு. இப்பவும் தம்பி பிள்ளைக்கு காது குத்துராங்கன்னு போயிருக்கா, எப்ப வருவாளோன்னு வழி மேல் விழி வச்சுக் காத்துண்டு இருக்க வேண்டியது தான் !
இவள மாதிரி வேலைக்காரீங்கன்னு இல்லை, சாதாரண நம்முடன் தினமும் பழகும் மனித ர்களுமே இந்த மாதிரி இருக்கத் தான் செய்கிறார்கள், எப்ப என்ன விசேஷம் வரும், யார் தலையில மொளகாய் அரைக்கலாம், எப்படி பணம் செலவழிக்காமல் எச்சக்கையிலே காக்காய் ஓட்டலாம்னு ரூம் போட்டு யோசிப்பானுங்க .
என்னைச்சுற்றி இருப்பவர்களிலேக் கூட நான் நிறைய சேம்பில்ஸ் பாத்தும் இருக்கேன் , பாத்துக் கொண்டும் இருக்கேன், பார்க்கத்தான் போகிறேன்.
போற வர இடம் கிட்டக்கேயேன்னு இருந்தா பஸ்ஸே போதும் அப்டீல்லன்னா போகவேண்டிய விசேஷத்துக்கு யார் யாரு ப்ராபபில் ஆளுங்களோ, அவங்களுக்கு பத்திரிகை வந்து இருக்கா, அவங்க எப்படி போகப் போறாங்க. எத்தனை பேரு போகப் போறாங்கன்னு ஒரு சென்சஸ் எடுத்து. அவங்களை அப்டியே எமொசனலா ஹைஜாக் பண்ணி , அவங்க காருல ஒன்னு போகரப்போவோ, இல்ல வரப்பவோ தொத்திக்க ஒரு துண்டு அட்வான்ஸாகவே போட்டுடு வாங்க, மொதல்ல போறப்பத்தான் ப்ரச்சன வரப்ப... ஸோ அண்ட் ஸோ கூட வந்துடுவேன் அவங்க மொதல்லேயே சொல்லிட்டாங்கன்னு ஒரு உடான்ஸு .
இத்தனைக்கும் வீட்டுல ஒன்னும் வசதியில்லாதவங்கக் கிடையாது, வண்டி இருக்கும் டிரைவர் இருப்பான், பணமும் இருக்கும். எதுக்காக ஒருத்தர் முதுகோ, வண்டியோ சும்மாக் கிடைக்கும் போது டம்பப் பர்ஸைத் திறப்பானேன்? அந்த மிச்சம் பண்ணற பணத்துல ஒரு மாடி வீடேல்லக் கட்டியிடலாம்?
அப்டியும் சில பிரச்சனைகள் வரும் போது கார் ஹயர் பண்ணினா, எல்லோரும் பணத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் .ஆனால் சில சிங்கிகள் கண்டுக்காம 'பை' சொல்லிட்டு போய் அடுத்த ரிடர்னுக்கு யார் தலையிலக் கையை வைக்கலாம்னு பாப்பானுக.
இது எல்லாம் உள்ளூரா இருந்தா, வெளி ஊருன்னாக் கேட்கவே வேண்டாம். வீட்டுலேருந்தே மொட்டை அடிக்கறது ஆரம்பிக்கும், அதுவும் வெளி ஊரு பார்ட்டி அவ்ளோ பரிச்சயமா கூட இருக்காது, ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் பாத்துருப்பாங்க . ஆனா சொல்றது என்னன்னா, ரொம்பவே பரிச்சயம் மாதிரியும் போகலைன்னா ரொம்பவே மனசு வருத்தப் படும்கரா மாதிரி பேச்சு!
ஒருத்தர் அல்லது ரெண்டுப் பேர் போவாங்க, ரொம்பப் பரிச்யம்னா நாலு பேரோ ,குடும்பமேக் கூடப் போகலாம் . மொய் எழுதறது கம்மியா இருக்கும், அதுவுமே, வீட்டுல எப்பவாவது யாராவது கொடுத்த ஆர்டிகிள் இருந்தா அது அவங்களுக்கு உபயோகப் படலன்னே தள்ளி விட்டுடுவாணுக. கொடுக்கறவங்களுக்கு யூசாகுமா ,நாலு பேர் சாப்பாடு பணத்துக்கு பிப்டி பர்சண்டா வது இருக்குமாஇன்னும் போனால் 700,800 ரூபாய்க் கொடுத்து மாடர்ன் ப்ளவுஸ் தைத்துக் கொள்வார்கள் ஆனால் இந்த தொத்திக்கொள்ளும் பழக்கம் மட்டும் போகவே போகாது. .....ஹுகும்.. அதேல்லாம் எதுக்கு இப்ப?
இதுல கொஞ்சம் க்ளோஸ் பார்டின்னா, வீட்டுக்கு அடுத்த வேளைக்கே சாப்பாடு கேரியர்லப் போகும்,சில வேளை டப்பாவுடன் ஆஜராகி விடுவார்கள். நீ என்ன சொல்ல முடியும்?
இந்த மாதிரி விசேஷங்களிலே இப்டி நடந்துப்பானுக .
ஆத்துல எவ்ளோதான் தண்ணி இருந்தாலும் நாய் நக்கிதான் தின்னுமாம் ! அந்த மாதிரி எவ்ளோ பணம் காசு வசதி இருந்தாலும் ஓசியில காரியம் முடிக்கிரதுங்கறதே ஒரு தனிக் கலை !
.
No comments:
Post a Comment