Wednesday, July 27, 2016

​"ச்ரார்த்தம்"



​"ச்ரார்த்தம்"ச்ரத்தையுடன் செய்யவேண்டிய பிதுர் கர்மாவாதலால் இது ச்ரார்த்தம் எனப்படுகிறது.
சிராத்தத்தின்போது இறந்த பெற்றோர், பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக் கப்படுவது வழக்கத்திலுள்ளது ..!! ஏன் தெரியுமா?
குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ”சுக்கிலம்” எனப்படும் தாதுவாகும்.
இந்தத் தாதுவில்எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன.அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உண வு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவன;
பெற்றோரிட மிருந்து இருபத்தியொரு அம்சமும்,
பாட்டனாரிடமிருந்து பதினைந்து அ ம்சமும்,
முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும்,
நான்காம் மூதாதை யிடமிருந்து ஆறு அம்சமும்,
ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்ச மும்,
ஆறாம் மூதாதை யிடமிருந்து ஒரு அம்சமும்
என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.
எனவே தான் வம்சம் ஏழு தலைமுறைகளாக குறிக்கப் பட்டுள்ளது.
இதில் அதிகமாக தங்கள் அம்சத் தை தங்கள் வாரிசுகளுக்குத் தரு பவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. இவர்கள் முறையே வஸு , ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்கள் எனப்படுகின்றனர்.
அதனால்தான், சிராத்தத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்க ப் படுவது வழக்கத்திலுள்ளது..!
மேலும் சிராத்தம் செய்ய வேண்டிய காலமாக அபரான்ன காலமே சிறந்ததாக சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் அலுவலக நிர்பந்தம் என்ற சாக்கிட்டு அவசர அவசரமாக காலை எட்டு மணிக்கே ப்ருஹஸ்பதியை (வாத்யார்) நிர்பந்தித்து வரவழைத்து செய்வதால் கடன் நிறைவேற்றப்படுகிறதேயன்றி பலன் நமது சந்ததியினரை சேர்வதை உத்தேசிப்பதில்லை.
தவிர போக்தாக்களை(ப்ராம்ணாள்) நியமித்தலிலும் கர்த்தாளி(எஜமானன்)ஸ்ரத்தை செலுத்துவதில்லை. அதாவது போக்தாளை ப்ரார்த்தித்து அவர்களை நியமிப்பது கர்த்தா க்களின் தலையாய கடமை ஆகும். ஆனால் இப்போது நடப்பது வாத்யார்ட்ட சொல்லிட்டா அவரே அவர்களை சொல்லிடுவார் என்ற விட்டேற்றித்தநமே நிலவுகின்றது.
மேலும் வைதீக ச்ரத்தை மற்றும் வைதீக ப்ராம்மணனுக்கு ஸம்பாவனை விஷயத்திலும் மிகமிக கேவலமான முறையாக பேரம் பேசப்படுகிறது. இது எந்த சந்தேகமும் இன்றி வேதனை படுவதற்க்குறிய விஷயமே.
பலஆயிரமாயிரமாக நமக்கும் சந்ததியினர்க்கும் ஒன்றுக்கும் உபயோகமில்லாத கேளிக்கைகளுக்கு செலவழிக்கும் நாம் வைதீகர்களிடம் வரும்போது மட்டுமே பேரம் பேசுகின்றோம். இது சுபகாரயங்களிலும் சரி அபர கார்யங்களிலும் சரி இவ்வித போக்கே நிலவுகின்றது.
ஒன்று கூற விழைகின்றேன். வைதீகர்கள் தவிர வேறெவராலும் நமது பாவங்களை ஒழித்து நமக்கும் நமது சந்ததியினர்க்கும் புன்னியம் சேர்க்க இயலாது.
வைதீகர்களே நமது பாபங்களை அவர்களுடையதாகக் கருதி அதனை ஏற்று நமது சார்பில் பரமாத்மாவிடம் நாமும் நமது சந்ததியினரும் நலம்பெற பூஜிக்கின்றனர்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக நமது பாபங்களை எல்லாம் அவர்களும் ஏற்று அதற்க்கான பரிகாரமாய் காயத்ரி மந்த்ரோச்சாடனத்தால் பாபத்தை தீயிலிட்ட ஹவிஸாய்ப் பொசுக்கி விடுகின்றனர்.
இனியாகிலும் வைதீக கர்மாவிலோ வைதீக செலவுகளிலோ பேரம் பேசாமல் நமது சந்ததியினர்க்கு புண்ணியம் சேர்ப்பதோடன்றி நல்லன வற்றை மட்டுமே விட்டுச்செல்வோம்.
இந்த வ்யாஸத்தில் தவறுகளிருப்பின் வாசகபெரியோர்கள் அடியேனை தெரிவித்தருளவும்.
நாராயணா ! நாராயணா ! நாராயணா ! .


அஷ்டலக்ஷ்மிகள்


அஷ்டலக்ஷ்மிகள் என்றாலே இன்று வரை பல குழப்பங்கள் உண்டு... எந்த எந்த ரூபங்கள் இந்த 8ல் இடம் பெறும், அவற்றின் சரியான வடிவம் வாகனம் என்ன.. இதெல்லாம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டது.
ஸம்ப்ரதாய வகையில் மாறுபாடுகளும் உண்டு. ஆனால், பொதுவாக, சக்தியை தலைமையில் கொண்ட சாக்தத்தில் உள்ளவாறு, பல்வேறு நூல்களை ஆராய்ந்து, இந்த தீர்மானமான பொதுவான ரூபாதி வர்ணனைகளை பகிர்கிறேன். ஸந்தேஹங்களுக்கு விவாதித்து விடை காண எண்ணலாம். சர்ச்சைகளுக்கு இடம் இல்லை.
விரும்புபவர்கள் படிக்கவும்.

ப்ரதம ஸ்தானம் - ஆதி லக்ஷ்மீ
மணிமய மண்டபத்தில், ரத்னஸிம்ஹாஸனத்தில் நடுவே ஒரு அடர் சிவப்பு நிற தாமரைபுஷ்ப ஆசனத்தில்,கிழக்கு முகமாக, மாணிக்ய தேஜஸோடு , வெளிர் சிவப்பு என்ற காஷ்மீர புஷ்பத்தின் நிறமான ரோஸ் வர்ணத்தில் வஸ்திரமும் ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் பின் கரங்களில் வலது புறம் சிவப்பு தாமரை, இடது புறம் த்வஜம் என்னும் கொடி, கீழிரண்டு கரங்களில் வலப்புறம் அபயம் இடப்புறம் வரதம் தாங்கி, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் , இரண்டு புறமும் தீபம் பிடிக்கும் பாவைகள் சூழ அமர்ந்திருப்பவள். சகல ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கும் ஆதி காரணியாகையால் ஆதி லக்ஷ்மீ என்று பெயர் பெறுபவள் . அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஆக்னேய பாகம் இவளுக்குரியது.

த்விதீய ஸ்தானம் - தான்யலக்ஷ்மீ
ஒரு சோலையின் மத்தியில், வடக்கே  நோக்கும் வெள்ளை யானையின் மீது, கிழக்கு முகமாக , மரகத தேஜோமய ரூபத்தோடு, கதிர் பச்சை நிற வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, கரும்பு, பழம் காய்கள் நிறைந்த பாத்திரம், நிரம்பி கையில் வழியும் நெல்படியும் , வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், நெற்  குருத்து, தாமரை புஷ்பம், அபய ஹஸ்தமும் தாங்கியவள். சகல ஜீவர்கட்கும் உணவுக்கு பஞ்சமின்றி வைப்பதால் தான்ய லக்ஷ்மீ என்று நாமதேயம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் தக்ஷிண பாகம் இவளுக்குரியது.

த்ருதீய ஸ்தானம் - வீரலக்ஷ்மீ
யுத்த பூமியின் மத்தியில், வடக்கே முகம் கொண்ட பெரிய சிங்கத்தின் மீது, கிழக்கு முகமாக, செம்பவள ஒளி வீச, ரத்த சிவப்பு நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் பூண்டு, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், பாசக்கயிறும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், அபய ஹஸ்தமும் தரித்தவள். சகல உயிர்களுக்கும் தைர்யம், வீர்யம், மனோபலத்தை அருள்வதால், வீரலக்ஷ்மீ, தைர்ய லக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் நிருருதி பாகம் இவளுக்குரியது.

துரீய ஸ்தானம் - கஜலக்ஷ்மீ
ராஜ்ய சபையின் மத்தியில், பொன்னிறமான தாமரை புஷ்பத்தின் மீது, கிழக்கு முகமாக, வைடூர்ய தேஜஸ் வீச, மாதுளம்பூ நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இவள் சதுர்புஜங்களில், மேலிரு கரங்களில் செந்தாமரை மலர்களும் கீழிரு கரங்களில் அபயவரதமும் தாங்கி இருப்பவள். இரண்டு சேடிப்பெண்களும், நான்கு கஜேந்த்ர யானைகளும் சுற்றி இருக்க, யானைகளின் துதிக்கையில் உள்ள நீர் நிரம்பிய கும்பங்களில் இருந்து சுகந்த ஜலம் ஸதாகாலமும் தன் மீது அபிஷேகிக்குமாறு ஸுகரூபத்தோடு அமர்ந்திருப்பவள். சிறந்த அடியவர்களுக்கு ராஜ்யபாரமும், ஆளும் தன்மையும் தருவதால் இவளே ராஜ்ய லக்ஷ்மி என்றும் கஜலக்ஷ்மீ என்றும் அழைக்கப்படுகிறாள்.அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பஸ்ச்சிம பாகம் இவளுக்குரியது.

பஞ்சம ஸ்தானம் - ஸந்தான லக்ஷ்மீ
தடாக சமீபத்தில், கிழக்கே நோக்கும் கருட பக்ஷியின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகம்  கொண்டு, புஷ்பராக தேஜஸோடு, நீலோத்பலத்தின் நிறத்தை ஒத்த ஊதா நிறத்தில் வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக, சங்கு, பூர்ணகும்பம், கத்தியும், வலது புறம் மேலிருந்து கீழாக, சக்ரம், பூர்ணகும்பம், உத்பல புஷ்பம், அபயஹஸ்தமும் கொண்டு, கீழ் இடது கரத்தால், தனது இடது தொடையில் உள்ள சிசுவை அணைத்துப்பிடித்தவாறு அமர்ந்திருக்கிறாள். பக்தர்களுக்கு வம்சம் தழைக்க ஸந்தான பாக்கியம் அருள்வதால் சந்தான லக்ஷ்மீ என்று திருநாமம்.  அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் வாயவ்ய பாகம் இவளுக்குரியது.

ஷஷ்ட ஸ்தானம் - விஜயலக்ஷ்மீ
போர்ப்பாசறையின் மத்தியில், தெற்கே முகம் கொண்ட வெண்குதிரை வாஹனத்தின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, நீலமணி தேஜஸோடு, வெளிர் நீல நிற வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், கதையும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், தாமரை புஷ்பத்தோடு கூடிய அபயகரமும் கொண்டவள். பக்தர்கள் செய்யும் காரியங்களில் வெற்றியையே தர வல்லவள் என்பதால், விஜயலக்ஷ்மீ, ஜயலக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் உத்தர பாகம் இவளுக்குரியது.

ஸப்தம ஸ்தானம் - வித்யாலக்ஷ்மீ
வித்யாசாலையில், தெற்கே முகம் கொண்ட ஹம்ஸ பக்ஷியின் மீது, வெண்தாமரை புஷ்பமும், அதன் மீது வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, முத்து தேஜஸோடு, வெண்பட்டு வஸ்திரமும், முத்து ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் மேலிரு கரங்களில் இடப்புறம் அக்ஷஸூத்ரம், வலப்புறம் குண்டிகை, கீழிருகரங்களில் இடப்புறம் வேதபுஸ்தகமும், வலப்புறம் சின்முத்ரையும் கொண்டு காட்சி தருபவள். பக்தர்களுக்கு அழியாத கல்விச்செல்வத்தை அருள்வதால் வித்யாலக்ஷ்மீ என்று திருநாமம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஐஸான்ய பாகம் இவளுக்குரியது.

அஷ்டம ஸ்தானம் - தனலக்ஷ்மீ
தனசாலையின் நடுவே, வெளிர் சிவப்பு என்ற ரோஸ் நிற தாமரையின் மீது, பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, கோமேதக தேஜஸோடு, தங்க மஞ்சள் நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்டபுஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், கதை, நிரம்பி கையில் வழியும் தனபாத்ரம் ஆகியனவும், வலப்புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்பு, தாமரைபுஷ்பம், அபயகரம் ஆகியனவும் கொண்டிருப்பவள். ஜனங்களுக்கு பொருட்செல்வத்தை குறைவின்றி தருவதால் தனலக்ஷ்மீ என்று பெயர். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பூர்வ பாகம் இவளுக்குரியது.

மண்டலத்தின் மூலத்தில் மத்தியபாகத்தில் - மஹாலக்ஷ்மீ
சம்பூர்ணமும் ஷூன்யமும் ஆன வானவெளியில், கமலாசனத்தில், ஸுகாசனம் போட்டு அமர்ந்து, வஜ்ரதேஜஸோடு, கிழக்கு முகமாக, பலவர்ணங்களில் ஆன பட்டு வஸ்திரமும் நவரத்நாபரணங்களும் பூண்டு, சதுர்புஜங்களில் சங்கு , சக்ரம், கதை, கமலமலர் ஆகியவற்றை ஏந்தி, விஷ்ணுப்ரியையாக, மூன்று தொழிலும் செய்பவளாக, ஸித்த லக்ஷ்மீ, மஹாலக்ஷ்மீ, வர லக்ஷ்மீ, வைபவ லக்ஷ்மீ, ஸௌபாக்யலக்ஷ்மீ, சாம்ராஜ்ய லக்ஷ்மீ என்ற திருப்பெயர்களால் இந்த ரூபிணி அறியப்படுகிறாள்.

இதுவே பூஜைக்குரியதும், த்யானிக்கத்தகுந்ததும் ஆன, அஷ்டலக்ஷ்மீ மண்டலம் ஆகும். இதற்கு விக்ரஹ பூஜை, கும்ப ப்ரதிஷ்டையோடு கூடிய பூஜை, மண்டலத்தை வஸ்த்ராதிகளோடு ப்ரதிஷ்டித்து ஹோமம் செய்தல் ஆகியன பிரயோகமாகும்.

சின்ன சின்ன அன்பில் தானே​ ​ ஜீவன் இன்னும் இருக்கு .


ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை
வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்தபழங்களில் இருந்து ஒன்றை எடுத்துபிய்த்து வாயில் போட்டு விட்டு,

இந்த பழம் மிகவும் புளிப்பாக​ ​
உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி​ ​
புகார் செய்வார்.

உடனே பாட்டி ஒரு சுளையைவாயில் போட்டு விட்டு​,​
இல்லையேப்பா, நல்லா தானேஇருக்கு" என்பார்,

உடனே அந்தஇளைஞர் எதுவும் பேசாமல் மீதிபழங்களை எடுத்துக் கொண்டுசெல்வார்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவர் மனைவிஅவரிடம், ஏங்க.. பழங்கள் நல்லாஇனிப்பாக தானே உள்ளது, என்தினமும் இப்படி நல்லா இல்லைனுசொல்லி டிராமா போடறீங்க" என்றுகேட்ப்பார்.

உடனே அந்த இளைஞர் சிரித்துகொண்டு மனைவியிடம், அந்த
பாட்டி நல்ல இனிப்பான பழங்களைதான் விற்கிறார், ஆனாலும்
தனக்கென்று ஒரு பழத்தைக் கூடசாப்பிட மாட்டார். நான் இப்படி
குறை கூறி கொடுப்பதால் தினம்அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தைசாப்பிடுகிறார் என்றார்.

தினமும் நடக்கும் இந்த நாடகத்தைஅருகில் இருந்த காய்கறி
வியாபாரி கவனித்து விட்டு, அந்தபாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன்பழங்களை குறை கூறுகிறான்,

இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடைஅதிகமாக போட்டு பழங்களை
கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

உடனே அந்த பாட்டிபுன்னகைத்துவிட்டு, அவன்
என்னை தினமும் ஒரு பழத்தைசாப்பிட வைப்பதற்காக இப்படி
குறை கூறுவது போல கூறிகொடுத்து சாப்பிட வைக்கிறான்,

இது எனக்கு தெரியாது என்று​ ​
நினைக்கிறான், நான் எடை
அதிகமாக பழங்களைபோடுவதில்லை

மாறாக அவனதுஅன்பில் எனது தராசு கொஞ்சம்சரிந்துவிடுகிறது என்றார்அன்போடு.

சின்ன சின்ன அன்பில் தானே​ ​
ஜீவன் இன்னும் இருக்கு .

" நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."

​ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை  தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள்.
ஆனால் கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான்.
கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.
ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.
அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான்.கோபிகை வாசல் அருகே வந்ததும்  தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான்.
உடனே கோபிகை
    கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய்.ஆனால் இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே  ஏன் என்று கேட்டாள்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.
" நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."

இறைவன் வகுத்த நியதி.​ ​


🌼ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

🌼அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.”
வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.

🌼வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.
நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு
பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

🌼நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே​ ​
கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும்​ ​
மறந்துவிடாதீர்கள்.

🌼”ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே’ என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

🌼 விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

🌼இது​ ​ மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி.​ ​
இதற்கு விதி விலக்கும் இல்லை.

கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும்


சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்

சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.

Tuesday, July 26, 2016

எலுமிச்சை



எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல. மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல. அது ஒரு உயிரூட்டமான கனி. கனிகளில் பறித்த பின்னும் உயிரூட்டமாக இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது.எலுமிச்சைப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் சக்திகள் அளப்பரியது. இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாதது. மேலும் எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து வந்த இடங்களில் அவைகளுக்கு பதிலாக எலுமிச்சையை பலி கொடுப்பதை இன்னும் பார்க்கலாம். அதே சமயம் யாராவது பெரியவர்களை பார்க்கப்போனாலும் அவர்கள் கையில் ஒரு எலுமிச்சையை கொடுத்து ஆசி பெறுவது இன்னும் வழக்கத்தில் உள்ளது. வீடுகட்டி குடிபோகும் போது நிச்சயம் எலுமிச்சைப் பழத்தை நான்கு திசைகளுக்கும் காவு கொடுப்பார்.வணிக நிலையகளிலும் வீடுகளிலும் தவறாமல் எலுமிச்சை வாசலில் இடம் பெற்றிருக்கும். நமக்கு ஏதாவது குறை இருந்தாலும் எலுமிச்சையில் சக்தியை ஏற்றித் தரும் பழக்கமும் இன்னும் இருக்கிறது. நாம் வாழ்த்து பெற பெரியவர்கள் நமக்கு ஆசி அளித்து எலுமிச்சையை வழங்குவார்கள். என்னமோ அதில் சக்தி இருப்பதை நம் மக்கள் தொன்மை காலம் முதல் அறிந்து உபயோகித்து வருகிறார்கள். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமக்கு துணை வருவது வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அதிகம் உள்ள வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது.தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.. குளிக்கும் போது எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும் .கிருமிகளும் நீங்கும்.

சந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம் உள்ளன. குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சை ஆகும் . எலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்.பழச்செடி ஒரு சிறிய செடிவகை ஆகும் .குறு மரம். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும். எலுமிச்சம் பழத்தின் தாயகம் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று கூறப்படுகிறது .. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பரவியதாகவும் கூறுகின்றனர்.

அதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது. இந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.பல வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். .உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது.

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும். வாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும் விரல் சுற்றிக்கு உதவும், நீரிலும் , காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.
வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும். எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. ரத்த அழுத்தம் குறைந்த தலைச் சுற்றல் இருக்கும்போது எலுமிச்சை சாறைக் குடித்தால் உடனடியாக உங்களது ரத்த அழுத்தம் சமநிலையை அடையும்.

மேலும், எலுமிச்சை சாறு உடல் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மிகுந்த பயன்தரும் ஒரு பானமாகும். வயிற்றில் புண் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்றுகண்டுபிடித்துள்ளதாகவும் பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது
சில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது.

எலுமிச்சை உண்மையில் ஆத்மாவின் பிரபஞ்ச சக்தியை சேமிக்கும் ஒரு சிறிய storage battery ஆக விளங்குகிறது .சிறிது நேரம் ஒரு எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள். அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். எலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு கனி.​