Friday, May 24, 2013

நடமாடும் தெய்வம்.- காஞ்சி மகா பெரியவர்



பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்..... தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?" என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், "கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார். 

" இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

" அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; "எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

" அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே...இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.." மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் "மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை' கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். "ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க.... இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?" என்று கேட்டான் பவ்யமாக. 

" ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

" இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் 'ன்னு சொல்லிகிட்டே,'புள்ளையாரே,கண்ணத்தொற... புள்ளையாரே ,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு "னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; "புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ....போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்."

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

ஜபம் செய்வதன் மகிமை!- காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

ஜபம் செய்வதன் மகிமை!

By காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

09 May 2013 DINAMANI வெள்ளிமணி
ஜபத்தின் மகிமையை நன்கு அறிந்தவர் வசிஷ்டர். ராமாயணத்தில் "வஸிஷ்டம் ஜபதாம் வரம்' என்று "ஜபம் செய்கிறவர்களில் சிறந்தவர் அவரே' என்றிருக்கிறது. மகாபாரதத்தில் "ஜபம் செய்கிறவர்களின் கதி என்ன?' என்று யுதிஷ்டிரர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்- "ஆசமனம் பிராணாயாமம் அங்கந்யாஸம் முதலிய அங்கங்கள் இன்றி ஜபம் செய்கிறவன், சிரத்தை-மகிழ்ச்சி இல்லாமல் ஜபிக்கிறவன், அகங்காரம் உடையவன் இவர்கள் நரகம் செல்வர். எந்த விஷயத்தில் அவனின் ஆசை நிலை கொள்கிறதோ அவன் அதில் பிறப்பான். சஞ்சல புத்தியுடன் செய்பவன் சஞ்சல கதி அடைவான். ஹடத்தால் ஜபிப்பவனும் நல்ல கதி அடைய மாட்டான், நரகத்தையே அடைவான். காமகாமியாக இருந்து பிரணவத்தை ஜபம் செய்தவனும் நரகத்துக்கே போவான்' என்கிறார்.

நரகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்- "தேவர்களுடைய நிலைகள், திவ்ய விமானங்கள், தேவ சபைகள், தேவலோக உத்தியானங்கள், விளையாட்டு இடங்கள், தாமரை ஓடைகள், இந்திரன், ப்ருகஸ்பதி, மருத், விச்வதேவர், ஸôத்யர், வஸý, ருத்ர ஆதித்யர் இவர்களுடைய உலகமும் நரகம்தான். பரமாத்மாவின் நிலை, அதாவது ஸ்வரூபம் ஒன்றே பயமற்றது. அவித்யாதி க்லேசம் அற்றது. ப்ரியம், அப்ரியம் முக்குணங்கள் அற்றது. லிங்க சரீரம் அற்றது. அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற மூன்றும் அற்றது சுக துக்கம் அற்றது. அதுவே நித்ய சுகம். அதைப் பின்பற்றி தேவ லோகங்கள் நரகமாகும். ஆகவே சாத்திரப்படி ஜபம் செய்பவனுக்கு மோட்சமும், விதிக்கு மாறுபாடாகியோ, பலனை விரும்பியோ ஜபம் செய்பவனுக்கு தேவாதி லோகப் பிராப்தியும் கிடைக்கும்.

பின் தருமர், காலம், யமன், மிருத்யு இவர்களின் ஜபம் தொடர்பான உரையாடலைப் பற்றி அவர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்:

"இக்ஷ்வாகு, பிராமணன், காலம், யமன் இவர்களின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள். ஒரு காலத்தில் வேத வேதாங்கங்களை அறிந்த புத்திசாலி பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் தவம் புரிந்துகொண்டு ஆயிரம் வருடங்கள் வேத மாதாவான காயத்ரீயை ஜபம் செய்தான். கடைசியில் காயத்ரீ தேவி அவன் முன் தோன்றினாள். அவனோ ஜபத்தையே செய்துகொண்டு தேவியிடம் ஒன்றும் பேசவில்லை. தேவி அவனிடம் கருணை கொண்டாள். அவன் ஜபத்தை முடித்துக்கொண்டு தேவியின் காலில் விழுந்தான். தேவி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினாள். பிராமணன், எனக்கு ஜபத்தில் ஆசை வளரட்டும் மனம் எப்போதும் சமாதியில் லயிக்கட்டும் என்று வேண்டினான். அப்படியே ஆகட்டும். ஒருபோதும் நரகம் அடையமாட்டாய். பிரம்மாவின் ஸ்தானத்தையே அடைவாய்' என்று கூறி மறைந்தாள்.

பிராமணன் அற வடிவினனாய் மறுபடியும் நூறு வருடம் தவம் செய்தான். அதன் பின்னர் தர்மதேவதை அவன் முன் தோன்றியது. "நான் தர்மதேவதை. இந்த ஜபத்தின் பயனாக சத்ய லோகத்தை நீ அடைந்திருக்கிறாய். உடனே உன் உயிரையும் உடலையும் விட்டு அந்த லோகங்களை அடைவாய்' என்றது.

அதற்கு அவன், "தர்மமே, எனக்கு லோகம் எதற்கு? சுக துக்க தொடர்புள்ள உடலை மறுபடி அடைய மாட்டேன். நேராக மோட்சம் செல்வேன்' என்றான்.

ஆனால் "நீ அவசியம் உடலை விட வேண்டும். எனவே சுவர்க்கம் போ' என்றது தர்ம தேவதை.

"இந்த உடல் இல்லாமல் நான் சுவர்கத்தை விரும்பவில்லை. எனவே எனக்கு சுவர்க்கம் வேண்டாம்' என்றான்.

"நீ உடலில் ஆசையை விட்டுவிட்டு ரஜஸ் இல்லாத லோகம் செல்' என்றது. அவன் அதற்கு மறுத்தான்.

"உனக்கு உடலை விட விருப்பம் இல்லாவிடின், இதோ காலன், ம்ருத்யு, யமன் மூவரும் உன்னிடம் வருகிறார்கள்' என்று சொல்லி தர்மம் மறைந்தது.

அவ்வாறே ஆயுளை நிர்ணயிக்கும் காலதேவதையும் உயிரைக் கொண்டு போகும் ம்ருத்யுவும் பாப புண்ணியங்களுக்கு பலனைக் கொடுக்கும் யமதேவதையும் அங்கே வந்தனர்.

அவன் அவர்களுக்கு வரவேற்பளித்தான். அப்போது தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்த இக்ஷ்வாகு அரசனும் வந்தான். பிராமணன் இக்ஷ்வாகுவையும் பூஜித்து, "அரசரே, நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?' என்றான்.

அரசனோ, "நான் அரசன், நீர் பிராமணர். உமக்குவேண்டிய பணம் கொடுக்கிறேன்' என்றான். பிராமணன் தனக்கு பணம் வேண்டாம் என்றும், தன் தவத்தால் அரசனுக்கு வேண்டியதை அளிப்பதாகவும் கூறினான்.

அரசன், "நான் யாசிப்பதில்லை. ஆனால், நீர் உறுதியாக இருப்பதால் உம்முடைய ஜப பலனைக் கொடுங்கள்' என்றான்.

பிராமணன் அப்படியே தான் செய்த ஜப பலத்தை அரசனிடம் அர்ப்பணம் செய்தான்.

அரசன், "உன் ஜபத்திற்குப் பலன் என்னவென்று தெரியாதபடியால் அதைச் சொல்' என்று வினவ, பிராமணன், "நான் ஜபத்திற்குப் பலனை உத்தேசிக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியாது. நீர் பலனைக் கேட்டபடியால் கொடுத்துவிட்டேன். அசத்தியம் மிகவும் கொடியது. சத்தியம் தவங்களைக் காட்டிலும் பெரிய தவம். ஆதலால் நான் தவறமாட்டேன்' என்றான்.

ராஜா, "அறிவதும் உலகைக் காப்பதும் எங்கள் தர்மம், க்ஷத்திரியர்கள் கொடையாளிகள் வாங்குப

வரல்லர்' என்றான்.

பிராமணன் "அரசே நான் தங்கள் வீடு தேடி வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று நிர்பந்திக்கவில்லை. "நீர் இவ்விடம் வந்து கேட்டபின் கொடுத்தேன். நீங்கள் வேண்டாம் என்பது எவ்வாறு?' என்றான்.

அந்நேரம் தர்மதேவதை தோன்றி, பிராமணனுக்குத் தான பலனும், அரசனுக்கு சத்திய பலனும் கிடைக்கட்டும் என்றது. இப்படி இருவரும் நிர்பந்திக்க, இருவரின் கோபமும் விரூபன், விகிருதன் என்ற பெயருடன் உருக் கொண்டு விவாதித்தன. இறுதியில், கடனாளி கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்தால் பெற்றுக் கொள்வது அவசியம் என்று முடிவானது. அதன்படி, அரசன், பிராமணன் கொடுத்த புண்ய தானத்தை துக்கத்துடன் பெற்றுக் கொண்டான். பின்னர் அவனிடம் எல்லாவற்றையும் திருப்பி அளித்தான். இருவரும் சமமாகவே பிரம்ம லோகம் சென்றனர். எனவே ஜபத்தின் முடிவான பலன் மோட்சமே என்று பீஷ்மர் தர்ம புத்திரருக்கு உபதேசித்தார்.

மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்

மூலம் : மஹாபெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம் 
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28.


ஒரு சமயம் நான் மாடல் ஏரோப்ளேன் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். பால்ஸா மரப்பலகையை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.

ஓர் ஆர்வத்தில், பால்ஸா மரப்பலகையைக் கொண்டு ஓர் ஆலயம் மாதிரி அமைத்தேன். நடுவில், நான்கு சிஷ்யர்களுடன் ஆதிசங்கரர். வேலை முடிந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய், பெரியவாளிடம் சமர்ப்பித்தேன்.

பெரியவாள் அதை நன்றாக உற்றுப் பார்த்தார்கள்.

“எப்படிப் பண்ணினே?”

“நான் இப்போது மாடல் ஏரோப்ளேன் செய்து கொண்டிருக்கேன். பால்ஸா மரப்பலகை அதற்குத் தேவை. அதே பால்ஸா பலகையினால்தான் இந்தக் கோயிலையும் செய்தேன்.”

“போஜராஜன் எழுதின ஸமராங்கண சாஸ்திரம் படித்திருக்கிறாயோ?”

“இல்லை…”

“அந்தப் புத்தகத்தில் ஏரோப்ளேன் செய்வது எப்படின்னு போஜன் சொல்லியிருக்கார். அதை நான் இஞ்சினீயர்களிடம் விளக்கிச் சொன்னேன். அவர்கள், Joist Fan Principle – ல் தயாரிக்கப்படும் விமானம் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது; இது நன்றாக வேலை செய்யும் என்று சொன்னார்கள்.”

பெரியவாளுக்கு ஆகாயவிமானம் பற்றிய இவ்வளவு நுட்பமான விஷயங்களெல்லாம் எப்படி ஞாபகத்தில் இருக்கின்றன என்று எண்ணி நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

“ஆனால், அதிலுள்ள முக்கியமான பாகங்களைப் பற்றி போஜன் சொல்லவில்லை! வேண்டுமென்றேதான் சொல்லவில்லை. அதாவது, தான் சொல்லாமல் விட்டதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். பிற்காலத்தில், மனிதர்கள் விமானத்தை மனிதகுல அழிவுக்குப் பயன் படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது, இப்போது சரியாகத்தானே இருக்கு!”

“ஆமாம். தரையில் உள்ளவர்கள் மீது குண்டு போட்டு அழிப்பதற்கு ஆகாய விமானங்களையே பயன்படுத்துகிறார்கள். அதைவிடப் பரிதாபம் – விமானம் கீழே விழுந்து, விமானத்தில் இருந்தவர்கள், கீழே இருப்பவர்கள் என்று எல்லோரும் அழிந்து போகிறார்கள்.”

பெரியவா உடனே மெளனமாகிவிட்டார்கள்.

குண்டுமழையினால் உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்களோ?

பெரியவா

வளவனூர் ஒரு பெரிய கிராமம். டவுன்ஷிப் என்று கூட கூறலாம். விழுப்புரத்திலிருந்து அரு கள் தொலைவில் புதுச்சேரி மார்க்கத்தில் உள்ளது. நான்கு வீதிகள் கொண்ட அக்ரஹாரம். மேற்கே பெருமாள் கோவில், கிழக்கே சிவன் கோவில், தெற்கு எல்லையிலே அம்மன் கோவில். வடப்புறத்திலே குமார குப்பம் என்னும் ஸ்ரீ முருகன் கோவில். கட்டுகோப்பான இடம், ஜனங்கள், விழாக் காலங்களில் அனைவருக்கும் கோவில் சாப்பாடுதான். ஆடிப் பூரம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி என்று ஆன்மிகம் தழைத்து வந்த இடம். பின்னே இருக்கிறதா? நம் பெரியவா அவதரித்த இடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளதாயிற்றே!

1948ஆம் வருடம் பெரியவா கிட்டத்தட்ட ஒரு மாசம் கேம்ப். வட அக்ரஹாரத்தில் பூஜை. தினமும் பெண்ணை ஆற்றில் குளியல். ஏறி வழியாக மேனாவில் பயணம். ஊரே கோலாகலமாக இருந்தது. கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள K.V.K சாஸ்திரி, மடத்து முத்ராதிகாரிகள் உண்டு. ஸ்ரீ மட நிர்வாஹம், நல்ல கார்யங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று ஏற்பாடு. ஏகாதசி புராணம் வாசிப்பது, சிறுசிறு உபன்யாசம் நடத்துவது, வேதங்களுக்கு முக்யத்துவம் கொடுப்பது, இவையெல்லாம் பெரியவா ஏற்பாடு. அப்போதெல்லாம் மடத்துக்கு வருமானமே போறாது. ‘எனக்கு பாத்து வயசு இருக்கும், எனது தம்பிக்கு எட்டு வயசு. அம்மா தனியாக கஷ்ட ஜீவனந்தாம். ஆனால் ரொம்ப கண்டிப்பு, பெரியவா வந்ததினாலே தினமும் பூஜைக்கு தும்பப்பூ பறித்து காலையிலேயே கொண்டு போய் கொடுப்போம்’. ஒருநாள் பெரியவா எங்கள் இருவரையும் அழைத்தார். ‘பசங்களா, நாளை வரும் போது எனக்காக இருவரும் மொட்டை போட்டுண்டு பூ எடுத்து வரணும்’ சொன்னா, நான் சும்மா இல்லாம, ‘எங்க அம்மா சொன்னதைத்தான் செய்வோம்’ என்று கூற, ‘மாதுஸ்ரீ ஒன்னும் சொல்லமாட்டார்’ என்று கூறினார்.

வீடு திரும்பி அம்மாவுக்கு நடந்ததை தெரியப்படுத்தினேன். உடனே மொட்டை போட்டு ஏற்பாடு ஆகியது. மறுநாள் பூவுடன் பெரியவா முன்னால் நின்றோம்.

‘பலே பலே இப்பத்தான சமத்து பசங்க. இன்னியோட உங்கள் கஷ்டம் எல்லாம் போச்சு. கண்ணப்பா பசங்கன்ன சும்மாவா?’ மேலும் பெரியவா தொடர்ந்தார்.

‘உங்கப்பாவும் நானும் ஒரே ஸ்கூலிலே படித்தோம். ஒரு சமயம் மாந்தோப்பிலே மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கும்படி கூற அவனும் மரத்தில் ஏறி மாங்கா பரிக்கலானன். நான் விளையாட்டாக, தோட்டக்காரன் வராண்டா என்று கூற, மேல் கிளையிலிருந்து கீழே குதித்து ஓட்டம் எடுத்தோம். அவன் விதி அப்படியாயிற்று, ஏன் விதி இப்படியாயிற்று’ என்றார். அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்ப கஷ்டம் சிறிது சிறிதாக குறைந்தது.

கடி ஜோக்ஸ் 21

அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி சினிமா டைரக்டரா இருந்தவரா?

எதுக்கு கேட்கறீங்க?

பேஷண்டுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் ‘பேக்கப்’னு சொல்றாரே..

...................................................................

Mba படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்.. 

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... 

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் 
கொண்டிருந்தார்....... அவரிடம் கேட்டான்… 

mba : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..? 

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்.., 

mba : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! 
எப்படி கண்டுபிடிப்பீங்க..? 

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. 

Mba : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..? 
__


விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என் மாட்டைகாலேஜுக்கெல்லாம் 
படிக்க அனுப்பலை.

......................................................................

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!

...........................................................................

வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான். 


ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும், உங்கள் கையில் உள்ள சாணம் முழுவதையும் தரையில் கொட்டிவிடுங்கள், என்று அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.

சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும் சுத்தப்படுத்திர்ரேன். அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான். 

பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா? 

சேல்ஸ்மேன்: ஏன்?

பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,.

நீதி: தமிழ்நாட்ல யாரும் தம் அதி புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்கு முன்னால மின்சாரம் இருக்குதான்னு உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.
.........................................................................


SMS கடி ஜோக்குகள் :-


1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”
.................................................

பரமாச்சார்யாள்





டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !“
----------------------------------------------------------------------
--

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !” “ஆமாம்.” “இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.” “சரி சிவசங்கர். வாங்க! ங்களுக்குத்தான் வண்டி.” பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி- ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.“டிரைவர் உங்க பேரு என்ன ?” “பால் ராஜிங்கம்மா. “நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெள்ள தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்…..இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கம் !”

“அப்படீங்களா ? சந்தோசங்க.மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தெட்டு முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பன்னண்டு பண்ணா நூறாயிரும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?
“ஆமாங்க அதனாலே என்ன சார் ?” “Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ - கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….” “விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க.-
இவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?” “பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !” “அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார். அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க
“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா!” “அம்மா உங்களுக்கு ?”
“நிம்மதி ” என்றாள். “அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.” “எனக்குத் தேவைப்படுதுங்க.” “லுக் அவுட் !” என்று கத்தினார்.


வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.


அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”
சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது. “இளநி சீவலாங்களா ?”
“வேண்டாம்ப்பா .” “சீவிட்டேங்களே…” பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள். “சரி, குடு” என்றார். நல்ல வேளை. இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !” பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி டைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார். “இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ. “வேண்டாம்மா.பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.” “மயிரிழைல தப்பினம்.”
“எல்லாம் பெரியவர் ஆசிங்க !” “அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.
“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”
“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க விரட்டிக்கிட்டே வந்தேன்.” பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.” “வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.” “நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”
“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.” “அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….” “ச்சே! உன்னோட வேதனை பாகீ !” “ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.” “நான்தான் காரணமா சொல்லு ?”
“சரி நானும்தான் காரணம்.” பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”
“சும்மா வாங்களேன் துணைக்கு!” அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார். பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் -உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள். சிவசங்கரன் ஓரமாக நிற்க,பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க.மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர்ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான்.இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”"தொண்ணூறுங்க ! அய்யா அமெரிக்காலருந்து வராரு”"அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ !” என்று பாகீரதியை அருகே அழைக்க,பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.


“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான். ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் ! உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன் அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல,அவர் கைகளை உயர்த்தி வாழ்த்தினார்.பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது. காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்து அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ. பையன் பேர் என்ன சொன்னேள் ?” “பாலாஜி.” அவர்கள் வெளியே வந்தனர். சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”

“சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !”

அவள் அடங்காமல் அழுதாள். “பாகீ ! பாகீ டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார்.

பின்னால் குரல் கேட்டது.

“டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !“


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.

Sunday, May 19, 2013

பெரியவா

கோயில் பிரசாதத்தை பெரியவாளுக்குக் கொடுத்தார், பங்காரு காமாட்சி ஸ்தானீகர். ஸ்ரீ வித்யா உபாசகர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செய்ய பவுன் தரவிழைந்தார் பெரியவா. ஆனால் அவர் வந்த சமயத்தில் பெரியவாளிடம் பவுன் எதுவுமில்லை.

பெரியவா பழைய நினைவுக் காட்சிகளை அங்கிருந்தவர்களிடம் சொன்னார். "எனக்குப் பட்டத்துக்கு வந்ததும் முதலில் பரிவட்டம் கட்டினது தஞ்சாவூர் பங்காரு காமாட்சிதான். அவளுக்கு பூஜை பண்ணுபவருக்கு முக்கியமாக பவுன் ஒன்று தரணுமே!" என்று முடிப்பதற்குள் அங்கிருந்த பெண்மணிகள் தங்கள் நகைகளைக் கழற்ற ஆரம்பித்தனர். பெரியவாளோ, "எனக்கு நகை வேண்டாம்; ஒரு பவுன் நாணயம்தான் வேணும்!" என்று அவற்றை வாங்க மறுத்து விடுகிறார். 

நேரம் ஆக ஆக "உனக்கு ஒரு பவுன் கொடுக்க முடியாது போல இருக்கே.." என்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். வந்தவரோ, "எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நினைப்பதே போதும். தங்கள் அனுக்கிரகம் மட்டும்தான் வேணும்" என்று சமாதானப்படுத்துகிறார். அவருக்கு உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். உத்தரவு கிடைக்கவில்லை. பவுன் கொடுக்காமல் அனுப்ப ஸ்வாமிகளுக்கு மனமில்லை.

பகல் கடந்த பின் திருச்சியிலிருந்து ஒரு தம்பதி வந்தனர். அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. பெரியவா அனுக்கிரகத்துக்காக வந்தார்கள். பெரியவாளுக்கு முன்னால் ஒரு திருமாங்கல்யத்தையும் ஒரு பவுனையும் எடுத்து வைத்தார்கள்.

எங்களுக்கு ஒரு பிரச்னை, பெரியவா அதைத் தீர்க்கணும். தீர்க்க சுமங்கலியாக இருந்த என் அம்மாவுடையது இந்த மாங்கல்யம். சஷ்டியப்த பூர்த்தியில் இதைத்தான் என் மனைவிக்குக் கட்ட வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் சிலர் "அது தவறு. புதிதாகத்தான் செய்து போடவேண்டும்" என்கிறார்கள். அதனால் ஒரு பவுன் வாங்கினேன். பெரியவா எதைத் தொட்டு ஆசிர்வாதித்துக் கொடுக்கிறேளோ அதையே பயன்படுத்தப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். பெரியவா, "உங்க அம்மா திருமாங்கல்யத்தையே கட்டிவிடு, க்ஷேமமாக இருப்பீர்கள்" என்று ஆசி கூறினார். இதையே எதிர்பார்த்தவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

பிரசாதத்துடன் திருமாங்கல்யத்தைத் தம்பதியிடம் கொடுத்த பெரியவா, "இந்தப் பவுனை நான் வைத்துக்கொள்ளட்டுமா?" என்று கேட்டார். அதனைப் பெரிய பாக்கியமாகக் கருதி
ஆனந்தமாக அவர் காலடியில் அர்ப்பணித்து நின்றார்கள் திருச்சி தம்பதியினர். பெரியவாளும் அகமகிழ்ந்து அந்தப் பவுனைத் தர வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டு அவரையும் வந்தவர்கள் காரிலேயே அனுப்பி வைத்தார். 

அவர் மனம் வைத்துவிட்டால் அந்தக் காரியம் நிறைவேறாமல் விடமாட்டார். சந்தர்ப்பங்கள் தானாகவே வந்து சேரும்.

இப்படி அனுக்கிரகம் பண்ணுவதற்கு வந்தவர், வராதவர்; தெரிந்தவர், தெரியாதவர், வைதவர், வாழ்த்தினவர், கேட்டவர், கேட்காதவர், ஏழை-பணக்காரர் என்று எந்தப் பாகுபாட்டையும் அவரிடம் காண முடியாது. அருளையோ, பொருளையோ அள்ளி அளிப்பது ஒன்றுதான் அவருடைய கோட்பாடு.

"சதாசிவ அனுக்கிரஹதா.." என்று வருணிக்கப்படும் அம்பாள் ஸ்வரூபமே அவரல்லாவா?

- எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து....