Friday, May 24, 2013

பெரியவா

வளவனூர் ஒரு பெரிய கிராமம். டவுன்ஷிப் என்று கூட கூறலாம். விழுப்புரத்திலிருந்து அரு கள் தொலைவில் புதுச்சேரி மார்க்கத்தில் உள்ளது. நான்கு வீதிகள் கொண்ட அக்ரஹாரம். மேற்கே பெருமாள் கோவில், கிழக்கே சிவன் கோவில், தெற்கு எல்லையிலே அம்மன் கோவில். வடப்புறத்திலே குமார குப்பம் என்னும் ஸ்ரீ முருகன் கோவில். கட்டுகோப்பான இடம், ஜனங்கள், விழாக் காலங்களில் அனைவருக்கும் கோவில் சாப்பாடுதான். ஆடிப் பூரம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி என்று ஆன்மிகம் தழைத்து வந்த இடம். பின்னே இருக்கிறதா? நம் பெரியவா அவதரித்த இடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளதாயிற்றே!

1948ஆம் வருடம் பெரியவா கிட்டத்தட்ட ஒரு மாசம் கேம்ப். வட அக்ரஹாரத்தில் பூஜை. தினமும் பெண்ணை ஆற்றில் குளியல். ஏறி வழியாக மேனாவில் பயணம். ஊரே கோலாகலமாக இருந்தது. கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள K.V.K சாஸ்திரி, மடத்து முத்ராதிகாரிகள் உண்டு. ஸ்ரீ மட நிர்வாஹம், நல்ல கார்யங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று ஏற்பாடு. ஏகாதசி புராணம் வாசிப்பது, சிறுசிறு உபன்யாசம் நடத்துவது, வேதங்களுக்கு முக்யத்துவம் கொடுப்பது, இவையெல்லாம் பெரியவா ஏற்பாடு. அப்போதெல்லாம் மடத்துக்கு வருமானமே போறாது. ‘எனக்கு பாத்து வயசு இருக்கும், எனது தம்பிக்கு எட்டு வயசு. அம்மா தனியாக கஷ்ட ஜீவனந்தாம். ஆனால் ரொம்ப கண்டிப்பு, பெரியவா வந்ததினாலே தினமும் பூஜைக்கு தும்பப்பூ பறித்து காலையிலேயே கொண்டு போய் கொடுப்போம்’. ஒருநாள் பெரியவா எங்கள் இருவரையும் அழைத்தார். ‘பசங்களா, நாளை வரும் போது எனக்காக இருவரும் மொட்டை போட்டுண்டு பூ எடுத்து வரணும்’ சொன்னா, நான் சும்மா இல்லாம, ‘எங்க அம்மா சொன்னதைத்தான் செய்வோம்’ என்று கூற, ‘மாதுஸ்ரீ ஒன்னும் சொல்லமாட்டார்’ என்று கூறினார்.

வீடு திரும்பி அம்மாவுக்கு நடந்ததை தெரியப்படுத்தினேன். உடனே மொட்டை போட்டு ஏற்பாடு ஆகியது. மறுநாள் பூவுடன் பெரியவா முன்னால் நின்றோம்.

‘பலே பலே இப்பத்தான சமத்து பசங்க. இன்னியோட உங்கள் கஷ்டம் எல்லாம் போச்சு. கண்ணப்பா பசங்கன்ன சும்மாவா?’ மேலும் பெரியவா தொடர்ந்தார்.

‘உங்கப்பாவும் நானும் ஒரே ஸ்கூலிலே படித்தோம். ஒரு சமயம் மாந்தோப்பிலே மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கும்படி கூற அவனும் மரத்தில் ஏறி மாங்கா பரிக்கலானன். நான் விளையாட்டாக, தோட்டக்காரன் வராண்டா என்று கூற, மேல் கிளையிலிருந்து கீழே குதித்து ஓட்டம் எடுத்தோம். அவன் விதி அப்படியாயிற்று, ஏன் விதி இப்படியாயிற்று’ என்றார். அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்ப கஷ்டம் சிறிது சிறிதாக குறைந்தது.

No comments:

Post a Comment