Saturday, August 27, 2016

*"இறைவன் நம்மை தேடி வருவார்..."*


புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”
புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”
“அப்படியா?”
“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”
“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”
“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”
“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”
“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”
“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”
“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”
“ஆமாம் குருவே.”
“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”
“ஆமாம் குருவே.”
“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”
“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”
“இது குழப்பமாக இருக்கிறதே.”
“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”
“ஆம்.”
“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.
உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”
“நடக்கும் குருவே.”
“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.
எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”
“மிகவும் சரிதான் குருவே...”
“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”
சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...
*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொல்களும்...*
*செயல்களும்...*
*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*
*நல்லது செய்யுமெனில்...*
*இறைவனை*
*நாம் தேட* *வேண்டியதில்லை...*
*இறைவனே நம்மை தேடி வருவார்...*

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:-


முதலில் உங்கள் வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் முன்னர் உங்களின் குலதெய்வத்தினை வேண்ட வேண்டும்.
பின்பு சிவாலயத்தின் அருகே சென்றவுடன் கோவிலின் கோபுரத்தினை இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.
பிறகு ஆலயத்தினுள் சென்று முழு முதற் கடவுளாகிய விநாயகப்பெருமானை வணங்க வேண்டும்.
அதன் பின்னர் கொடி மரத்தினை வணங்க வேண்டும்.
கொடி மரத்தினை வணங்கிய பின்பு பலிபீடத்தினை வணங்க வேண்டும்.
அதன் பின்னர் நந்தி பெருமானை வணங்க வேண்டும்.
மற்ற கடவுளர்களை வரிசையாக தரிசித்து வணங்க வேண்டும்.
பின்பு அம்பிகையை வணங்க வேண்டும்.
அம்பிகையை வணங்கிய பின்பு சிவபிரானை கண்டு தொழ வேண்டும்.
அதன் பின்னர் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
பின்பு சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
அதன் பின்பு துர்க்கையை வணங்க வேண்டும்.
பின்பு பைரவ பெருமானை வணங்க வேண்டும்.
அதன் பின்னரே நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.
பின்பு கொடிமரத்தின் அருகே நின்று நமது வேண்டுகோள்களை வேண்ட வேண்டும்.
பிறகு கொடிமரத்திற்கு நேராக தரையில் விழுந்து வணங்க வேண்டும்
சண்டிகேஸ்வரரை மானசீகமாக வணங்கி விடைபெற வேண்டும்.
பின்பு ஆலயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும்.
அதன் பின்னர் வேறு எந்த கோவிலுக்கோ அல்லது  மற்றவர்களின் வீடுகளுக்ககோ செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

.நான் சொல்றது சரிதானே? -

‘மர ஏணியை’ விலைக்கு வாங்கலாம்.‘இரும்பு ஏணியை’ விலைக்கு வாங்கலாம்.‘புகழ் ஏணியை’ விலைக்கு வாங்க முடியுமா 
நான் சொல்றது சரிதானே?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 குத்தாலத்துக்கு போனா லாட்ஜ் ரூம்ல குழாய் தண்ணி வேஸ்டா போறத்துன்னு கவலை படும் நாம் ... அருவியில் விழும் தண்ணி வேஸ்டா போகுதுன்னு கவலை படுவதில்லை..................நான் சொல்றது சரிதானே?
..............................
 ஜாக்கி சான் தமிழில் பேசினால் ரசிக்கிறோம் . சூர்யா டிவியில் மலையாளத்தில் பேசினால் ஏனோ ஏத்துக்க மாட்டேன்கிறோம் ............நான் சொல்றது சரிதானே?
....................................
அண்ணா என்று சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன ; பல காதல் அழிந்துள்ளன
.நான் சொல்றது சரிதானே?....
............................
தட்டி கொடுத்தால் வேலை செய்வார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது ....பாட்டரி தீர்ந்த டி .வி ரிமோட் ...........நான் சொல்றது சரிதானே? .
.......................
ஒரு வீட்டுக்கு போகும்போது பீரோ ,கட்டில், ஏசி , பிரிட்ஜ் ,வாஷிங் மிஷின் என எல்லாமே கொண்டு போவோம். சுத்தியல் மட்டும் பக்கத்து வீட்டுல வாங்குவோம் .................நான் சொல்றது சரிதானே?

உள்ளூர்ல இருந்தா வெளிநாட்டு காரன் சாப்பாட்டை சாப்பிடுவது ,.... பாரின் போனா தோசை கிடைக்குமா, இட்டிலி கிடைக்குமான்னு தெரு தெருவா தேடறது ..............நான் சொல்றது சரிதானே?
-

கடி கடி

 நண்பர் 1 : நேத்து ராத்திரி எங்கவீட்டுக்கு திருடன் வந்து எங்களை கட்டிப்போட்டுட்டு அவ்வளவு நகையயும் எடுத்துட்டுப்போயிட்டான்.
நண்பர் 2 : என் கதையே வேறே. நேத்திக்கு பட்டப்பகல்ல வீட்டுக்கு வந்து எங்களி கட்டிப்போடல, கத்திய காட்டி மிரட்டல, அவ்வளவு நகையயும் கொண்டு போயிட்டான்.
நண்பர் 1 : அது யாருய்யா பலே ஆளு?
நண்பர் 2 : என் மாப்பிள்ளதான்.
------------
 போலீஸ் : நீங்க போலி டாக்டர்ன்னு எங்களுக்கு புகார் வந்திருக்கு.
டாக்டர் : எதை வச்சு அப்படி புகார் வந்திருக்கு.
போலீஸ் : நீங்க ஆபரேஷன்  செய்த எல்லா பேஷண்டும் பொழச்சுக்கிட்டாங்களாமே!
-------------
'வாட்ஸ் அப்' ல வந்தது.
நான் மட்டுமே சிரிச்சா எப்படி?

நீங்களும் சிரிங்க !

ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் 
  நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி

மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் 

தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை 

உடையட்டும்

…..சுவாமி கல்லெறி சித்தர்


யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா 

,
இருங்க,
,
“குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய 

இருங்க,

கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா 

இருங்க,…இருங்க ஆனால்


நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது 

சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..

ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு 

லிமிட்டோடதான் இருக்கனும்…

.சுவாமி: தெனாலியானந்தா
——
நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்

நான் உன் பின்னால் இருப்பேன்…

ஏன் தெரியுமா?


அந்த கொடுமையை எவன் முன்னால நின்னு

பாக்கிறது …


..கவிக்குயில்: கரடி சித்தர்
—–
புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்…

ஆனால் brush பண்ணாம சிரிச்சால் நண்பனைக்

கூட எதிரியாக்கிவிடும்

எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க

ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க

……. சுவாமி:பல்லானந்தா
.................................................
சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது

மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே

தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர்

தண்ணியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பூமி

தினமும் சுற்றுவதில்என்ன அதிசயம் மகனே?
.........................
வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே

போகிறது. இரவில் இரண்டாவது காட்சி

சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில்

பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று

கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு

என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை

உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி

ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை.

மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு

தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும்.

அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த 

ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். 

வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். 

ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் 

கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்!

சில அடிதூரம் ஓடிவிட்ட அவனை என் பலம் 

முழுவதையும் திரட்டி ஓடிப்போய் பிடித்து நான்கு 

அடி கொடுக்கவும் பிரேஸ்லெட்டைக் 

கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
இந்த விஷயத்தை முதலில் மனைவியிடம் 

கூறவேண்டும் என்று நினைத்து அவளை எழுப்ப, 

நான் பேசும் முன்பு அவளே பேசத் தொடங்கினாள்.
“என்னங்க உங்களுக்கு வரவர ஞாபகமறதி 

அதிகமாயிட்டே போகுது. காலையில 

பிரேஸ்லெட்ட வீட்டிலேயே விட்டுட்டு 

போயிட்டீங்க” என்றாள்.
மேஜை மீதிருந்த பிரேஸ் லெட் என்னைப் பார்த்து 

சிரித்தது.
----

Sunday, August 14, 2016

கல்யாணி ராகம் செய்யும் அற்புதம்;



ஒவ்வொரு ராகத்துக்கும் ஒவ்வொரு குணமுண்டு.கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு.

கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள்.எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சிக்கும்,தெய்வீக நிகழ்ச்சிக்கும்,இந்த கல்யாணிராகம் இசைப்பதுதான் வழக்கம்...அது நம் மனதை அந்த சூழலுக்கு கொண்டு சென்று விடும்...!!

அன்பையும்,தெய்வீகத்தையும்,அமைதியையும் இந்த இசை நம் மனதில் இருந்து அருவியாக பொங்கி எழச்செய்யும்.உங்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்கச் செய்வதில் கல்யாணி ராகம் முக்கிய பங்கு வகிக்கிறது..

மன உளைச்சலில்,பயத்தில் இருக்கிறீர்களா இந்த ராகத்தை கேளுங்கள்..மனம் உற்சாக மடையும்..இளையராஜாவின் இசைக்கு நாம் மயங்குவதின் காரணம் அவர் இந்த ராகங்களை சரியாக பயன்படுத்துவதுதான்....!! வெளிநாடுகளில் மருத்துவமனைகளில் மெல்லிய இசையை இப்போது ஒலிக்க விடுகிறார்கள்..காரணம் என்ன..இதுதான்..!!
http://youtu.be/KQxEgUNDDbo

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ சக்த்யா யுக்தெள
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி

அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)

ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ...

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி...

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


     
1, "நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே!
ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!
தேவர்களால் வழிபடப்படுபவளே!
சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!
2,  நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!
கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!
மஹாலக்ஷ்மித்தாயே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!
3,  சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!
அனைத்து வரங்களையும் அளிப்பவளே!
எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!
எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
4,  சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே!
மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மையே!
5,  ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே!
யோக நிலையில் தோன்றியவளே!
யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் மாதாவே!
6,  ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!
எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே!
அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!
பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!
7,  பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!
8,  ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!
பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!
பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
                   பலச்ருதி
"மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா:"
"ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித:
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. "
மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.  தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
இதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சம்பூர்ணம்
        சர்வம் கிருஷ்ணார்ப்பனம்

Wednesday, July 27, 2016

புரிந்தால் சரி சில உண்மைகள்.....



இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்?

..
நாம் வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலனையோ/காதலியையோ, கணவனையோ/மனைவியையோ கொடுத்து, "முதல்ல இதை சமாளி மகளே/மகனே" ன்னு சொல்லிடுறாரு!!

..
ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”
..

கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு தேடுனா அவன் காவாலி..
கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா அவன் கபாலி... 

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…​​


ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான், அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான். அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.மேலும்ஓசியில் குவாட்டரும் கிடைத்ததுபோதையில் பிச்சைக்காரன் சொன்னான்
'தெய்வமே நீ இங்கையா இருக்கே' நா இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறாய் என்றல்லவா நினைத்திருந்தேன்​"