*நாட்டு மருந்து*
கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.
அனைவருக்கும்
*கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!*
*நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது*
*சில எளிய மருத்துவம்: !!!*
*_ஓர் fh பகிர்வு.*
*வயிற்றுவலிக்கு:* முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
*இடுப்பில் வரும் வண்ணார் புண்:*
இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிழிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
*தொண்டைக் கம்மலுக்கு:* சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
*ஒற்றைத் தலைவலி :* மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
*அஜீரணம்:*
அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
*கல்லீரல் வீக்கம்:* கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
*கக்குவான் இருமல்:* அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
*குடல் வாதம்:* முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
*தாது விருத்தியாக:* முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
🤧 *ஜலதோஷம்:* பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
*வயிற்றில் கட்டி:* வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
*தலையில் புழு வெட்டு :*
1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும்.
2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
*வெண்குஷ்டம்:* மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
*காலராவைத் தடுக்க:* காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண்,
*வயிற்றுப்புண்:* இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
*கடுமையான சுளுக்கு:* சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
No comments:
Post a Comment