Saturday, August 27, 2016

காமாட்சி, விசாலாட்சி, ஒரே தலத்தில் அருள் பாலிக்கும் ராகு கேது பரிகார ஸ்தலம்



காமாட்சி, விசாலாட்சி, ஒரே தலத்தில் அருள் பாலிக்கும் ராகு கேது பரிகார ஸ்தலம்
   திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள கொளத்தூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காமாட்சியுடன் ஏகாம்பரேஸ்வரர், விசாலாட்சியுடன் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்கியம் பெறலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும்,  ராகு  கேது தோஷங்களுக்கு பரிகாரதலமாக இக்கோவில் விளங்குகிறது. இயற்கை சீற்றத்தால் சிதிலம் அடைந்த இந்த கோவில்  இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலை உபயதாரர்கள் உதவியுடன்   புதுப்பிக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும் விழாக்குழுவினருமான சி.கே.என்.சரவணன் சிறப்பாக பராமரித்து கடந்த 09-07-2014 அன்று உபயதாரர்களால் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிரித்த முகத்துடன் காட்சி தரும் அம்பாள்:
  திருவண்ணாமலை மாவட்டத்திலே இந்த கோயிலில்தான் 48அடி உயர தீபகம்பம் உள்ளது. 750 அடி கொள்ளளவு கொண்ட இந்த தீபகம்பத்தில் செம்பினால் ஆன தீப கொப்பரையில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயில் ராகு கேது தோஷங்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ராகு, கேது பூஜைகளையும் செய்து வழிபடுகின்றனர். இங்குள்ள காமட்சி அம்மன், விசாலாட்சி அம்மனும் வா வென்று அழைப்பது போன்று சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். இந்த அம்பாள் கல்வி செல்வம், ஞானதருபாவலாக இக்கோவிலில் குடி கொண்டு உள்ளார்.
கோஷ்ட்டத்தில்:
 கடன் தீர்த்த விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், பைரவர் போன்றவர்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளது. மேலும், இங்கு நவக்கிரகங்களுக்கான தனிசன்னதி இல்லாததே இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலின் தலவிருட்சமாக மாமரம் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் மரங்களின் நிழலில் அம்பாளுடன்  இளைபாறுகிறார் மேலும் இங்கு வில்வமரம், ருத்ராட்சம், வன்னி, நாகலிங்கம், மகாவில்வம், மகிழமரம், பாரிஜாதம், புன்னை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட 10 வகையான ஆன்மிக மரங்கள் உள்ளன.
திருமணமும் குழந்தை பாக்கியம் பெற அருள் தரும் சிவன்:
  இந்த கோயிலுக்கு வந்து செல்பவர்களுக்கு குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்புகள், திருமணம் போன்றவை கைக்கூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களை விட மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இக்கோயிலில் மாதம்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் மகாசிவராத்திரி காலங்களிலும், கார்த்திகை மாதத்தின் வரும் தீபத்தின் போதும் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும், பல நறுமணமிக்க பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகங்களும், பல்வேறு வண்ண வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களும் நடக்கிறது. மேலும், இக்கோயிலில் 63 நாயன்மார்களின் கற்சிலைகளும், நடராஜர் சமேத சிவகாமிசுந்தரி கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏகாம்பரஈஸ்வரர் கோயிலில் உள்ள 63 நாயன்மார்களின் கும்பாபிஷேகம் பங்குனி உத்திரத்தில் நடைபெற்றது.
அமைவீடம்:
 திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் இருந்து படவேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கண்ணமங்கலத்தில் இருந்து 15நிமிடத்தில் சென்று விடலாம். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை கண்ணமங்கலத்தில் இருந்து பஸ்வசதியும், 24மணிநேரமும் ஆட்டோ வசதியும் உள்ளது.
வேலூரில் இருந்து 20 கீலோமீட்டரில் உள்ளது

No comments:

Post a Comment