..
ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூடப் பொய் கூட சொன்னதில்லை. எப்போதும் உண்மையை மட்டுமே பேசிய அவரை எப்படியும் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று ஒரு புத்திவாய்ந்த சிறுவன் முடிவு செய்தான். ஒரு நாள் ஒரு சிறிய பறவையை அந்த சிறுவன் தன் கைகளில் மறைத்துக் கொண்டு அந்த முதியவரிடம் வந்தான்.. அவரைப் பார்த்து தான் மறைத்து வைத்திருக்கின்ற கைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் ஏதாவது பூச்சியோ.. புழுவோ.. பறவையோ இருக்கலாம் என்றார். முதல் கேள்வியை சரியாக சொன்ன முதியவரிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்டான்.. தன் கையிலிருந்த பறவை உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து கிடக்கிறதா என்று கேட்டான். பறவை உயிரோடு இருக்கிறது என்று முதியவர் சொன்னால் அதனைத் தன் கைகளாலேயே அழுத்திக் கொன்று விட்டு அவரைப் பொய்யனாக்கி விடலாம்.. இறந்து கிடக்கிறது என்று சொன்னால் பறவையைப் பறக்க விடச் செய்து விடலாம் என்று நினைத்தான். தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு முதியவர் எப்படியும் பொய் சொல்லி விடுவார் என்று எண்ணி முதியவர் பதிலுக்கு காத்திருந்தான்..
..
ஆனால் முதியவரோ மிகுந்த அனுபவசாலி ஆயிற்றே.. அவர அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? .. ஜீவகாருண்யம் படைத்தவர் ஆயிற்றே.. சிறிதும் தயங்காமல் அவர் சிறுவனைப் பார்த்து "தம்பி அந்த பறவை உயிருடன் இருப்பதும் இறந்து போவதும் உன்னுடைய கைகளில்தான் இருக்கிறதப்பா" .. சிறுவனோ அதற்கும் சளைக்காமல் தனது கைகளைத் திறந்து பறவையைப் பறக்க விட்டான்..
No comments:
Post a Comment