ஒருநாள் என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும், காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா!!!
இது என்ன நியாயம்.....??? " என்றேன்.கலகலவென சிரித்தான் இறைவன்
"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
எனக்கான இடத்தை,எனக்கான நேரத்தை,எனக்கான விழாக்களை,
என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.....!!!
சரிதானே.......!!!
நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு, குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப் போவதில்லை என்ற துணிச்சல் தானே.....!!!
"சிந்தித்து தெளிவோமா"
----------------------

பண்பினால் அன்பினால் இணைந்து வாழ்வோம்
*பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
*நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
*உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
*விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
*தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
*விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
*விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.
*பரிசீலனை செய்யுங்கள்.
பணிந்து போகாதீர்கள்.
*சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
*செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
*எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
*நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
*தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்....

No comments:
Post a Comment