Wednesday, July 27, 2016

புரிந்தால் சரி சில உண்மைகள்.....



இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்?

..
நாம் வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலனையோ/காதலியையோ, கணவனையோ/மனைவியையோ கொடுத்து, "முதல்ல இதை சமாளி மகளே/மகனே" ன்னு சொல்லிடுறாரு!!

..
ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”
..

கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு தேடுனா அவன் காவாலி..
கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா அவன் கபாலி... 

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…​​


ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான், அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான். அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.மேலும்ஓசியில் குவாட்டரும் கிடைத்ததுபோதையில் பிச்சைக்காரன் சொன்னான்
'தெய்வமே நீ இங்கையா இருக்கே' நா இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறாய் என்றல்லவா நினைத்திருந்தேன்​"


இஞ்சி (Ginger) - சுக்கு


இஞ்சி (Ginger) - சுக்கு
இஞ்சி..இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.”
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும். இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
சுக்கு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
மருத்துவப் பயன்கள்:
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
பொதுப்பயன்கள்:
பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும்.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுடவேணும் அதை நசுக்கி உடம்பில் தேக்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக முன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது .இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.
இஞ்சியை சுத்தி செய்ய அதன் மேல் தொலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தி செய்ய அதன் மேல் சுண்ணாம்பை
தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தி செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
இஞ்சியை அளவோடு உட்கொள்ள வேண்டும். தேவைக்கு மேலாக உபயோகிக்கும் பொழுது இஞ்சி – இரத்தத்தில் உறையும் நேரத்தை அதிகப்படுத்தி விடும். அதாவது, அடிபட்டாலோ, கையில் கத்தி ஏதாவது வெட்டி விட்டாலோ இரத்தம் உறைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே அளவுடன் இஞ்சியை உபயோகிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக உபயோகிக்க கூடாது.

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!



மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.
தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.
அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.
காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.
ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம்.


பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்


அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்"
(தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக
பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்)
'
சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(சற்று நீண்ட கட்டுரை ஆனால் ஒவ்வொரு பாராவும் இன்பம்,பழசு சின்னது இது விரிவாக சற்று சுருக்கப்பட்டது)
ஒருநாள் மகான் காஞ்சியில் முகாமிட்டு இருந்தபோதுஅவரை தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள்.பளிச்சென்று நெற்றியில் திருமண் வைணவர்களுக்கேஉரிய கரை போட்ட வேட்டி இடுப்பில்.துண்டு மார்பில்.
வந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டார்.மற்றவர்கள் யாவரும் ஸ்ரீபெரியவாளுக்கு 'நமஸ்காரம்' செய்தபோது இந்த ஒருவர் மட்டும்அசையாத சிலையாக, வெறித்த பார்வையுடன் அங்கே நின்று கொண்டு இருந்தார்.முகத்தில் எந்த விதமான
உணர்ச்சியோ,சலனமோ இல்லை. அங்கே  வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
"இவர் என்னோட மாமா. இருந்தாற்போலிருந்து இவருக்கு ஏதுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது.இரவு,பகல் தெரியல்லே.எல்லா டாக்டர் கிட்டேயும்காண்பிச்சாச்சு.அவளாலே ஏதும்கண்டுபிடிக்கமுடியல்லே
அவர்களே குழம்பிப்போய் தூக்க மாத்திரையை கொடுத்து
அனுப்பிட்டாங்க.
 பல திவ்ய  தேசங்களுக்கும்அழைச்சுட்டுபோய்வந்துவிட்டோம்.குணசீலம்.
சோளிங்கர் ஒரு ஊரை பாக்கி விடல்லே.ஆனால் பலன் ஏதும் இல்லை.அதனால்பெரியவாகிட்டே வந்திருக்கோம் நீங்கதான் அருள்புரியணும்.

இவர்கள் கவலையோடு சொன்னதை எல்லாம் மிகவும்பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான்.பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணக்கிரமத்தில்சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச்
சொல்லி அவர்களிடம் கட்டளையிட்டார்கள்.

"அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்"

இதைத்தான் அவர்கள் 108 முறை ஜபித்து உச்சரிக்கச்சொன்னார்கள்.அவர்கள் சொல்லி ஜபித்து முடித்ததும்மனம் பேதலித்த அப்பெரியவருக்கு துளசி தீர்த்தம்கொடுக்கச் சொன்னார்கள்.அதற்கு அடுத்து ஸ்ரீபெரியவாளெனும் அந்த சாத்வீகதெய்வத்தின் கட்டளைதான் அனைவரையும்
வியக்க வைத்தது. இதை அங்கிருந்தோர் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீமடத்திலிருந்து ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீபெரியவாஅங்கே அழைத்து வரச்சொன்னார்.அங்கே வந்த வஸ்தாத்போன்ற மனிதரிடம்,கிழவர் தலையில் பலமாகக்குட்டச் சொன்னார்.அந்த மனிதரும் அப்படியே செய்தார். 

அடுத்த வினாடிஅங்கே ஒரு ஆச்சர்யம் எல்லோரும் வியக்கத்தக்க
வகையில் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.
"ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம்?இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? இது எந்த ஊரு?"என்று சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
இதன் மூலம் அவர் பூர்ணமாக சுய நினைவுக்குவந்துவிட்டது தெரிந்தது. கூட இருந்தவர்கள்நடந்தவற்றை மெதுவாக அதே சமயத்தில் விளக்கமாகவும் சொன்னார்கள். இதை கேட்ட அவர் பயபக்தியுடன் ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.
அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாதமகிழ்ச்சி. எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம்சற்று நேரத்தில் மாயமாய் போனது போல் தீர்ந்து விட்டதே!
அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும்ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளோ?
கண் எதிரில் நடந்த உண்மைதானே அது?

"எல்லாம் பெரியவாளோட அனுக்கிரகம்"என்னும் நன்றிப்பெருக்கோடு மருமான் சொல்லிஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.

பெரியவா,- "எல்லாம் அந்த பெருமாள் அனுக்கிரகம்னு
சொல்லுங்கோ. அத்தனை திவ்யதேசம் போய் பெருமாளை தரிசனம் செஞ்சதோட பலன்தான் இப்போ கிடைச்சிருக்கு...நீங்க எல்லாமா சேர்ந்து அச்சுதன்,ஆனந்தன்,கோவிந்தனைவேண்
டி இங்கே ஜபம் செஞ்சதிலே கைமேல் பலன்கிடைச்சிருக்கு" என்று அவர்களிடம் சர்வ சாதாரணமாகச்சொன்ன மகான் தன் மேன்மையை துளியேனும் வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற
ஒரு உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடுவிட்டுவிடாமல்,அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவசம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாகமட்டும் அந்த அதிசயம் நடந்ததாக,தன்னை
முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர்.
ஸ்ரீ பெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும்துளசியையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆனந்தக்கண்ணீரோடு அகன்றனர். ஏதும் அறியாதது போல் இந்தஅத்வைத சந்யாசிரூப ஈஸ்வரர் அங்கே நின்று கொண்டு இருந்தார்.

கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு"


கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு"
அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம் (2)
எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி
நன்றி கல்கி + பால ஹனுமான்
காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில் இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தேன்.
“கோபுரத்தை நாம் தூரத்தில் இருந்துதான் கும்பிடுகிறோம். கிட்டே போய் தொட்டுக் கும்பிடுவதில்லை; அதே போலத்தான் இங்கிருந்தபடியே பெரியவாளை மனதார தொழுகிறேன்” என்று சொல்லி, அவர் அமர்ந்திருந்த திசை நோக்கி கைகளைக் கூப்பி வணங்கினேன். அடுத்த கணம், “தந்தனத்தோம் என்று சொல்லியே...” என்று ஆரம்பித்து வில்லில் நாவுக்கரசரது கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
கதை சொல்லும்போது ஒரு பக்கம் காமாட்சியும், மறுபக்கம் பெரியவாளும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அப்போது கடவுளிடம் வேண்டியதாக ஒரு சிந்தனை. “அன்பர்களே, கட வுளிடம் நாம் எதையும் கேட்கக்கூடாது. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய கவலைகளைத்தான். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உனது இடது கால் பெருவிரலுக்கு அபாரமான சக்தி உண்டு. உன்னுடைய அந்தக் கால் பெருவிரலால் நான் உன் காலடியில் வைத்த ‘கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு தாயே! அதை நீ அழித்தபின் படித்துப் பார்த்தேன். ‘கலை’ என்று வரும். அந்தக் கலைகள் மூலமாக இந்த உலகம் வளம் பெறட்டும்” என்று குறிப்பிட்டேன். மொத்தத்தில் அன்றைய நிகழ்ச்சி மனத்துக்கு நிறைவாக அமைந்தது.
மறுநாள் சென்னைக்குப் புறப்படும் முன், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றேன். வணங்கி எழுந்தபோது அந்த மஹான் சொன்ன வார்த்தைகள்: “வ’னாவை அழிச்சுட்டாடா!” அவர் சொன்னதை கற்பூரம் மாதிரி சட் டென புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒரு சில வினாடிகளில் புரிந்து கொண்டேன். வார்த்தைகள் ரத்தினச் சுருக்கமாக வந்தாலும், அவை என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
“லோகத்துல இருக்கிற எல்லார் கவலைகளிலும் உள்ள ‘வ’னாவை யும் அழிக்கணும்” என்று நான் சொல்ல, “லோகக்ஷேமம் பத்தி பேசறையா? கோவில் இருக்கிற எல்லா ஊர்லயும் உன்னைக் கூப்பிடுவா. நீ போய் பாடு! கோவில் இல்லாத ஊர்ல கூப்பிட்டாலும் அங்கேயும் நீ போய் பாடு! அங்கயும் கோவில் வந்துடும்டா!” என்று அருள் புரிந்தார். நெகிழ்ந்து போய் நின்றேன்.
ஒரு நாள், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, “நீ நெஜமா சிரிக்கறடா!” என்றார். நான் அப்பாவியாக, குழந்தைபோல “பொய்யா சிரிக்கிறவங்ககூட உலகத்துல இருப்பாங்களா சாமி?” என்று கேட்டுவிட்டேன்.
பெரியவாள் தொடர்ந்தார், “நேத்து வந்து பார்த்தப்போ என்ன சொன்னே? எதுக்கு காஞ்சிபுரத்துக்கு வந்தேன்னு சொன்னே?”
“என் டாக்டரோட கம்பவுண்டர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தேன்னு சொன்னேன்.”
“அப்புறம் என்ன சொன்னே? அப்படியே பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்தேன்னு சொன்னியோலியோ?” என்றார்.
“ஆமாம்.”
“எல்லாரும் அப்படி சொல்ல மாட்டா! பட்டுப்புடைவை வாங்க வந்தவா கூட பரமாச்சாரியாளைப் பார்க்கணும்னு வந்ததா சொல்லுவாடா. நீ நெஜத்தை பேசுவே! நெஜமா சிரிப்பே! உனக்கு ஒரு குறையும் வராது!” அந்தக் கணத்தில், இப்பிறவி எடுத்ததன் முழுப் பயனையும் பெற்றுவிட்டாற்போல உணர்ந்தேன்.
வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, அவரே கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருள்மொழிந்தார். “காலடியில கதை ஆரம்பிக்குமே! அதை எப்படிச் சொல்லுவே?” என்று கேட்டார். “திருவனந்தபுரம்னு ஆரம்பிச்சா சரியா இருக்காது. திருவாங்கூர் சமஸ்தானம்னு ஆரம்பிக்கலாமா?” என்று நான் கேட்க, அவரிடம் அமைதி. அவருக்கு அதில் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டு, “சேரநாடுன்னு சொல்லலாமா?” அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அடுத்து என்ன சொல்வது என்ற குழப்பத்தோடு நிற்கிறேன். “பரசுராம க்ஷேத்திரம்னு ஆரம்பி” அவரது ஆழ்ந்த சிந்தனை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன். கிணற்றடியில், சிவஸ்தானம் என்று நினைவு. கிணற்றின் அந்தப் பக்கத்தில் அவர். இந்தப் பக்கம் நான். பக்கத்தில் இருப்பவரையே தெளிவாகக் காணமுடியாதபடி இருள். அவர் கேட்க, நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென்று, “ஏண்டா! கச்சேரி பண்ணறா மாதிரி பேசிண்டே இருக்கியே! நான் இங்கே இருக்கறது நோக்குத் தெரியறதாடா?”
பெரியவாள் உருவம் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், “ஓ! நல்லா தெரியுதே!” என்று நான் பொய் சொல்லமுடியாது; அதே சமயம் இத்தனை நேரம் சரளமாக உரையாடியபின்பு, “தெரியவில்லை” என்றும் பதில் சொல்ல என் மனம் இடம் தரவில்லை.
“நான் சென்னைல இருந்தாலே என் கண்ணுக்குக் காட்சி தருவீங்களே!” என்றேன். அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதை மானசீகமாக உணர்ந்தேன். “இங்க வா!” என்று அழைத்தார். கிணற்றைச் சுற்றிக் கொண்டு அந்தப் பக்கம் போனேன். பிரசாதம் கொடுத்துவிட்டு, அடுத்து இன்னும் எதையோ வழங்கினார். அது ஏதோ ஒரு படம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
வெளிச்சமான இடத்துக்கு வந்ததும் அது என்ன படம் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். மஹா பெரியவாள் சாந்த ஸ்வரூபியாக பூஜை செய்துகொண்டிருக்கும் அற்புத படம். என் வீட்டுப் பூஜை அறையில் வைத்தேன். படத்தின் முன்னே அமர்ந்தேன். என்னையும் அறியாமல் என் உதடுகள் உச்சரித்தன
“ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர!”

காஞ்சி மகான் அருளிய மனித, மிருக வித்தியாசம்!


காஞ்சி மகா பெரியவா, மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான வித்தியாசத்தை விவரிக்கிறார் இப்படி...
''ஒரு வழியில் பார்த்தால், மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால், திருப்பி அடிக்க ஒரு ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் திருப்பி அடிக்க கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்கு கொம்பு இல்லை: நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடலில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டிருக்கிறார். யாராவது அடிக்கவந்தால் எதிர்க்க முடியவில்லை. ஓடலாம் என்றாலும் வேகமாக ஓடமுடியாது. குதிரைக்குக் கொம்பு இல்லாவிட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை. இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.
இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான். பிறந்துவிட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்கு தண்டனையாக இத்தனை கசை அடி வாங்கவேண்டும் என்று விதித்திருப்பதால், இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆனபிறகு, இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினாலே பாபத்தைச் செய்வதனாலே, ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால், ஜனனம் இல்லை. கோபத்தினாலே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்கவேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாவம் செய்யாமல் இருக்கலாம்.
ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால், அதனிடம் ஆசை வருகிறது. உண்மையில், சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.
ஒரு மாடு, கண்ணாடியில் தன்னைப் பார்த்து விட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப் போகிறது. ஒரு மனிதன் தன் பிரதிபிம்பத்தை பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால், கோபம் வருகிறது. கோபம் வருவதினால், பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பம் இல்லை.
இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால் கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாவிந்தத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்!
முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்கவேண்டும். அப்புறம் தெய்வமாகவே உயர்த்திவிடவேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்கவிடக் கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி, அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ணவேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன'' என்கிறார் காஞ்சி மகான். .
  ---------------

அருகம்புல்லை தூர்வை என்பார்கள்.


-அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. அருகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால், கெட்ட கனவுகள் விலகி, நன்கு உறக்கம் வரும். துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

துர்க்கையை அருகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது. உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத (ஆவணி) மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இந்த தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.

இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது.

தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அருகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் (இருந்தால் விசேஷம்) அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும்.

பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அருகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை.

இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

சக்திக்குத் தகுந்தாற்போல் நைவேத்தியங்கள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பரமேஸ்வரனுக்கு அட்சதை, சந்தனம் கலந்த தயிரால் அர்க்யம் தர வேண்டும். பிறகு அருகம்புலை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்கான மந்திரம்-

த்வம் தூர்வேஸ்ம்ருத ஜன்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை:
ஸௌபாக்ய ஸந்ததிம் தேஹி ஸர்வகார்ய கரீபவ
யதாசாகாப்ரசாகாபி: விஸ்த்ரு தாஸி மஹுதலே
ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம் அஜராமரம்

பூஜைக்குப் பிறகு அந்தணர்களுக்கும், சுவாசினிகளுக்கும் மங்கள திரவியங்கள் மற்றும் தட்சிணையளித்து விருந்தளிக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்த பிறகு பத்தியமில்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம்.

தூர்வையை தினமும் தலையில் வைத்துக்கொள்வதற்கான மந்திரம்: ஆயுள் தீர்க்கம் அரோகஞ்ச வபு: ஸ்யாத் வஜ்ர ஸன்னிபம். இதன் பொருள், தீர்க்காயுள் கிடைக்க வேண்டும். சரீரமானது நோயற்றதாகவும் வஜ்ரம்போல் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது. அருகம்புல்லானது பற்பல ஹோமங்களில் விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமம் செய்த அறுகின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமை அறுகுக்கு உண்டு. அருகம் புல்லானது ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்தால் சகலசவுபாக்கியங்களையும் பெற்று, சிறந்த பிள்ளை பாக்கியத்தை அடைந்து, நினைத்த காரியங்களிலும் வெற்றியடையலாம்.

தூர்வையைப் போற்றும் மந்தரிம்: தூர்ஸ்வப்னங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னைத் தொடுவதாலும் பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எனது எல்லாப் பாவங்களும் நீங்கவேண்டும். நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ, அவ்விதமே நானும் படிப்படியாக வளர்ந்து சகல ச்ரேயஸ்களையும் அடைய வேண்டும். ஹே தேவியே! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக. உன்னை நான் பூஜிக்கிறேன். உன்னை என் தலையால் தாங்கிக் கொள்கிறேன். நீ என்னை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.

கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு:



கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு:

தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது.

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.

ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !


அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “
என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .

அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் – தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –

இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்-

அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் – மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –

‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘

அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!

இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் :
‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-

இது ராக மாலிகை;

முதலில் வருவது – காபி ராகம் ;

பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !

இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் !

இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .

இந்த பாடல் அமைந்த ராகங்கள் :

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன
இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

“परिथ्रानाय साधूनां विनाशाय च धुष्क्र्थां धर्म संस्थापनार्थाय संबवामि युगे युगे”
என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

கஜகர்ணம்--,அஜகர்ணம்,--கோகர்ணம் --என்றால் என்ன?

​கஜகர்ணம்--,அஜகர்ணம்,--கோகர்ணம் --என்றால் என்ன?
படித்ததில் உறைத்தது===திருமுருகக் கிருபானந்த வாரியார்  சுவாமிகள் நூலில் இருந்து.
       கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

      அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

       கோகர்ணம்:  பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம்

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?

​சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்.
சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே தியானத்தில் இருப்பவர்.
எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தைகலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர்.
எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பதுநமது கடமையும் அல்லவா !!

ஆன்மிகம்-அறிந்ததும் அறியாததும்.

​மரண அறிவிப்பு போஸ்டரைப் பார்த்துச் சிரித்தார், ஒரு நாத்திக நண்பர்.
என்ன சிரிக்கிறீர்கள் என்றேன்.
இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.
மரணமடைந்தவர்களை இறைவனடி சேர்ந்தார், சிவலோகப் பிராப்த்தி அடைந்தார், வைகுண்ட ப்ராப்தி பெற்றார் என்று குறிப்பிடுவது அவரவர்கள் நம்பிக்கைதானே என்றேன்.
அவர்களுக்கே அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை பாருங்கள், இறந்தவர்கள் அப்படி அங்கு செல்கிறார் என்றால் இவர்களெல்லாம் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும், அதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்று சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தார்.
நானும் எனது பங்குக்குக் கொஞ்சம் சிரித்துவிட்டு அவரிடம் கேட்டேன். உங்களுக்குப் பெண் இருக்கிறாரா, அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா, என்று.
ஆமாம் பெண்ணிற்கு திருமணமாகிவிட்டது, நல்ல இடத்தில் கொடுத்திருக்கிறேன். மாப்பிள்ளை ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஏன் கேட்கிறீர்கள் என்றார்.
திருமணம் முடிந்து உங்கள் மகள் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றபோது எப்படி உணர்ந்தீர்கள் என்றேன்.
*ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தால்கூட ஏனோ ஒரு இனம் புரியாத வருத்தம் இருந்தது. யாருக்கும் தெரியாமல் விக்கிவிக்கி அழுதேன் என்று சொன்ன அவரது கண்களில் அப்போதும் ,லேசாக கண்ணீர் வந்தது.*
இப்படித்தான் சார், அவர்கள் இறைவனடி சேர்ந்ததற்கான வருத்தமல்ல அது மிகவும் சந்தோஷமான விஷயந்தான், ஆனால் இத்தனை நாள் நம்மோடு இங்கு இருந்தவர் இனி இருக்கமாட்டாரே என்ற வருத்தந்தான் என்றேன்.
சரிதானே நண்பர்களே?
*நம்பிக்கைகள் கேலி பேச அல்ல!*

நன்றி:ஆன்மிகம்-அறிந்ததும் அறியாததும்.

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:


​​எல்லா காரியங்களும் தடை பட்டுக் கொண்டே இருக்கின்றதா? 
 
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!!
 
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
 
இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். 

“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே!​


ஆன்மீக ரகசியம் : செல்லும் காரியம் வெற்றியடைய :

விஷ்ணு சஹஸ்ரநாமம்தத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு ''
'' கர்த்தர்'' னு பேரே இருக்கு...  நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்.. சொல்றேள். உங்க மதம் வரதுக்கு எத்தனையோ யுகத்துக்கு முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்! கர்த்தர் எங்களுக்கு புதுசு இல்லே...MAHA PERIYAVA
------------------
ஆன்மீக ரகசியம் :
செல்லும் காரியம் வெற்றியடைய :
ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.
இதை செய்து வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம்.
மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ
------------------

​​இன்றைய சிந்தனை.

​இன்றைய சிந்தனை.
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்ட்து, கருடா சௌக்கியமா.யாரும் இருக்குமிடம் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமுள்ளது.
உங்களிடம் பல திறமைகள் இருக்கலாம் அதை இடம் பொருள் ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.
முன்பொரு காலத்தில் ஒரு முனிவர் காட்டில் கடும் தவம் புரிந்தார். கடும் தவத்தினால் அமானுஷ்ய சக்திகளைப்பெற்றார். ஒரு நாள் பிட்சைக்கு வேண்டி ஊருக்குள் வந்தார். வரும் வழியில் மேலே பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டுவிட்ட்து. உடனே முனிவர் கோபமாக அதைப்பார்த்தார். அவருடைய பார்வையின் சக்தியால் கொக்கு எரிந்து சாம்பலாகி விழுந்து விட்ட்து. முனிவர் செருக்குடன் ஒரு வீட்டின் முன் நின்று பிட்சை வேண்டினார். அந்த வீட்டம்மா, கணவனுக்கு உணவு பறிமாரிக்கொண்டிருந்தாள். கணவன் உண்டு முடிந்தவுடன் அந்த அம்மா பிட்சை இடுவதற்காக வெளியில் வந்தாள். அதற்குள் சிறிது தாமதாமாகிவிட்ட்து.  முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஏன் தாமதம் என்பது போல் அந்த அம்மாவை முறைத்துப்பார்த்தார். அதற்கு அந்த அம்மா “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்று கேட்கிறார். முனிவருக்கு அப்போதுதான் புரிந்தது, நாம் மட்டும் சிறந்த தவசியில்லை, இல்லறத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கடமையை செவ்வனே செய்பவர்களும் தவசிகள்தான். நம்மைவிட திறமைசாலிகள் இவ்வுலகில் உண்டு. நம் திறமையை இடம் பொருள் ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.
மற்றவர்களிட்த்திலுள்ள திறமைய போற்ற கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நமக்கு முடிந்த எல்லைக்குள் நம் திறமையை காட்ட வேண்டும். அதனால் தான் அந்த காலங்களில், காலாட்படை காலாட்படையுடனும், யானைப்படை படையுடந்தான் மோதுவார்கள். அதை விடுத்து காலாட்படை யானையுடன் மோதினால் என்னவாகும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒருகம்பில் மாட்டை கட்டியிருப்பார்கள். அது சரியாக வட்ட எல்லைக்குள் உள்ள புல்லை மட்டும் மேயும். அதை விடுத்து, கயிற்றை அறுத்துக்கொண்டு, எல்லை கடந்தால், ரயிலில் அடிபட்டு சாகவேண்டியது தான்.
இப்படித்தான் ஒரு சிலம்பாட்ட்த்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற சிலம்ப வாத்தியார் ஒருவர் நடு இரவில் கம்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்பு ஒரு திருடன் வந்து கையிலுள்ள பணம், மோதிரம், செயின் எல்லாவற்றையும் கொடுக்கச்சொன்னான். அதற்கு அவர் என்னிடமா, நான் யார் என்று நினைத்தாயென்று கம்பை சுழற்றி ஒரு சிலா வரிசை எடுத்து பூமியை தொட்டு வணங்கினார். டமால் என்று தலயில் ஒரு இடி இறங்கியதுபோலிருந்த்து. நினைவு திரும்பிய போது ஆஸ்பத்திரியில் சிலம்பு வாத்தியார், புலம்பு வாத்தியாராக படுத்திருந்தார். அந்த திருடன் அவர் பூமியை வணங்கும்போது கையிலிருந்த உருட்டுக்கட்டையால் அவர் தலையில் அடித்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
எனவே நம் திறமையை இடம் பொருள் ஏவலறிந்து காட்ட வேண்டும்.
இப்போது மீண்டும் முதல் இரு வாக்கியங்களப்படித்து மனதில் கொண்டு சௌக்கியமாய் வாழுங்கள்.

நவக்கிரக பூர்வம ஜென்ம பாக்கிய பரிஹார நிவர்த்தி ஸ்தலங்கள்



     ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய கால நேர அட்டவணையுடன் வழிதடங்கள்*

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

 1,திங்களூர் (சந்திரன்) 

தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம் 

3, திருநாகேஸ்வரம் (ராகு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

4, சூரியனார் கோவில் (சூரியன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

ஜெய ஜெய ஸ்ரீஸூதர்சநா.......!!! ​​ ஜெய ஜெய ஸ்ரீஸூதர்சநா.......!!!


ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்.  இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது.  இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.  ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார்.  உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.

“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.
இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.

வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.

ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.

அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
புராணப் பெருமைகள் மிகுந்த, மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகிய திருத்தலங்களில் மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் - கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார்.  இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார்.

பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும், சனியும் சேவிப்பது விசேஷம்.  முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம்.

தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹ{ம்பட்” என்ற மந்திரத்தையும்,
“ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி,
தந்நச் சக்ர ப்ரசோதயாத்,” 

என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம்.

இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம்.  நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும்.  பதினாறு வகைச் செல்வங்களும், கிரக தோஷங்களும் நீங்கும்.