இன்றைய சிந்தனை.
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்ட்து, கருடா
சௌக்கியமா.யாரும் இருக்குமிடம் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன்
சொன்னது அதில் அர்த்தமுள்ளது.
உங்களிடம் பல திறமைகள் இருக்கலாம் அதை இடம் பொருள் ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.
முன்பொரு காலத்தில் ஒரு முனிவர் காட்டில் கடும் தவம் புரிந்தார். கடும் தவத்தினால் அமானுஷ்ய சக்திகளைப்பெற்றார். ஒரு நாள் பிட்சைக்கு வேண்டி ஊருக்குள் வந்தார். வரும் வழியில் மேலே பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டுவிட்ட்து. உடனே முனிவர் கோபமாக அதைப்பார்த்தார். அவருடைய பார்வையின் சக்தியால் கொக்கு எரிந்து சாம்பலாகி விழுந்து விட்ட்து. முனிவர் செருக்குடன் ஒரு வீட்டின் முன் நின்று பிட்சை வேண்டினார். அந்த வீட்டம்மா, கணவனுக்கு உணவு பறிமாரிக்கொண்டிருந்தாள். கணவன் உண்டு முடிந்தவுடன் அந்த அம்மா பிட்சை இடுவதற்காக வெளியில் வந்தாள். அதற்குள் சிறிது தாமதாமாகிவிட்ட்து. முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஏன் தாமதம் என்பது போல் அந்த அம்மாவை முறைத்துப்பார்த்தார். அதற்கு அந்த அம்மா “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்று கேட்கிறார். முனிவருக்கு அப்போதுதான் புரிந்தது, நாம் மட்டும் சிறந்த தவசியில்லை, இல்லறத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கடமையை செவ்வனே செய்பவர்களும் தவசிகள்தான். நம்மைவிட திறமைசாலிகள் இவ்வுலகில் உண்டு. நம் திறமையை இடம் பொருள் ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.

மற்றவர்களிட்த்திலுள்ள திறமைய போற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் நமக்கு முடிந்த எல்லைக்குள் நம் திறமையை காட்ட வேண்டும். அதனால் தான்
அந்த காலங்களில், காலாட்படை காலாட்படையுடனும், யானைப்படை படையுடந்தான்
மோதுவார்கள். அதை விடுத்து காலாட்படை யானையுடன் மோதினால் என்னவாகும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒருகம்பில் மாட்டை கட்டியிருப்பார்கள். அது சரியாக வட்ட எல்லைக்குள் உள்ள புல்லை மட்டும் மேயும். அதை விடுத்து, கயிற்றை அறுத்துக்கொண்டு, எல்லை கடந்தால், ரயிலில் அடிபட்டு சாகவேண்டியது தான்.

இப்படித்தான் ஒரு சிலம்பாட்ட்த்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற
சிலம்ப வாத்தியார் ஒருவர் நடு இரவில் கம்புடன் நடந்து வந்து
கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்பு ஒரு திருடன் வந்து கையிலுள்ள பணம்,
மோதிரம், செயின் எல்லாவற்றையும் கொடுக்கச்சொன்னான். அதற்கு அவர் என்னிடமா,
நான் யார் என்று நினைத்தாயென்று கம்பை சுழற்றி ஒரு சிலா வரிசை எடுத்து
பூமியை தொட்டு வணங்கினார். டமால் என்று தலயில் ஒரு இடி
இறங்கியதுபோலிருந்த்து. நினைவு திரும்பிய போது ஆஸ்பத்திரியில் சிலம்பு
வாத்தியார், புலம்பு வாத்தியாராக படுத்திருந்தார். அந்த திருடன் அவர்
பூமியை வணங்கும்போது கையிலிருந்த உருட்டுக்கட்டையால் அவர் தலையில் அடித்து
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
எனவே நம் திறமையை இடம் பொருள் ஏவலறிந்து காட்ட வேண்டும்.
இப்போது மீண்டும் முதல் இரு வாக்கியங்களப்படித்து மனதில் கொண்டு சௌக்கியமாய் வாழுங்கள்.எனவே நம் திறமையை இடம் பொருள் ஏவலறிந்து காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment