நான்   சுப்ரமணிய  சாஸ்திரி.   LIC   லே  வொர்க் பண்றேன். இன்னும்  சரியா 2வருஷம் 7 மாசம் இருக்கு. அப்புறம்   நான்   NON-LIC.  ஆபிஸ்லேயும்  வெளியிலேயும்   பொழுது போக்காக  பழைய  சாஸ்திரம் எல்லாம் படிப்பேன்.  நிறைய தெரிஞ்சுக்கவேணும்   என்று ஒரு   ஆர்வம்.   பெரியவா  பத்தி  நீங்கள்  அப்பப்போ  சொல்றதை எல்லாம்  என்  மனைவி  வந்து   வீட்டிலே சொல்வா.  அதனாலே  உங்களை   நேரடியா  சந்தித்து பழக்கம்  பண்ணிக்கொண்டு   அடிக்கடி  பார்த்து  பேச 
வி
ருப்பம்.
''
ரொம்ப  சந்தோஷம்  என்ற   தாத்தா  உங்கள்  மனைவி  யார் ?
'' 
என்றுகேட்டார்.
''
கமலா
''
 
''
ஓ  கமலா  டீச்சரா
? 
  அடிக்கடி  இங்கே  வருவாள்.  என்னோடு  பேசிக்கொண்டிருப்பாள்.  நிறைய  பேரை  அவளுடைய பள்ளிக்கூடத்திலிருந்து  அழைத்தும்  வருவாளே. ரொம்ப   நல்ல பெண்மணி.
''
 ''சார், ஜ்யோதிஷத்தில் எனக்கு அசாத்திய நம்பிக்கை
.  அதே சமயம் இந்த 
 சகுனம்,  நிமித்தம்  எல்லாம்   கொஞ்சம் பூடகமாக  இருக்கிறது.   அதைப்பற்றி நீங்கள்   என்ன நினைக்கிறீர்கள்
?''
.
'' 
நான்  நினைப்பது  இருக்கட்டும்.  மகா  பெரியவா  இது பற்றி  என்ன   சொல்லியிருக்கிறார்  என்று வேண்டுமானால்  சொல்றேன்.  புரிந்துகொள்ளுங்கள்
''
.''ஜ்யோதிஷ சாஸ்திரத்தில், "ஸம்ஹிதா ஸ்கந்தம்"என்று ஒரு பிரிவு
 
இருக்கிறது. ஜலம் எங்கே ஒடுகிறது? பூமிக்குள் நதி under-current ஆக எங்கெங்கே போகிறது?.பூமிக்கு அடியிலே (உள்ளே ) ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்னஅடையாளம் இருக்கும்?
 எ
ன்பவைகளைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
 
வாசனைத் திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, இதுமட்டுமல்ல.
 
சகுன சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலிய எல்லாம் இந்த ஸம்ஹிதையில்சொல்
லியுருக்கு என்கிறார். 
சகுனம் வேறு, நிமித்தம் வேறு.
நிமித்தம் என்பது
 
 வரப்போவதை ஏதோ ஒரு தினுஸில் அடையாளம்
 
காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம்.சகுனம் என்பதற்கு 'பக்ஷி'என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும்
  
நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். உலகத்தில் ஒன்றுக்கொன்று
  
ஸம்பந்தமில்லாத வஸ்து 
எதுவுமே 
 இல்லை. நடக்கும் காரியங்களும்
 
அப்படியே. ஸரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே ஒருவருடைய ஆக்ஞையால்
 
தான்
 
நடக்கின்றன;ஒரே கணக்காக
வும் 
 நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்க
 வழி உண்டு. 
.கை ரேகை, ஆரூடம், க்ரஹநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று
 
ஸம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில்
 ஒன்று தான் 
 நிமித்தம்
 என்பது. 
 அதில் ஒரு அங்கமே சகுனம்.ஒரு பக்ஷி வலமிருந்து இடம்போனால் இன்ன பலன்;இன்ன பக்ஷி கத்தினால்இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திரம் கூறும்
'நிமித்தம்'
  
என்பதிலேயே, நாம் 
 
'சகுனம் பார்ப்பது'என்று சொல்வதிலுள்ள மற்றஎல்லாம் வரும்.Omen என்று  ஆங்கிலத்தில் பொதுவாகச் சொல்வது
 கூட  இந்த 
நிமித்தம்
 
தான். (கீதை ஆரம்பத்தில்) " நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ " என்று
 
யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். 'கெட்ட
 
சகுனங்களைப் பார்க்கிறேன்'என்று நாம் சொல்வதைத்தான்,
 அர்ஜுனன்  கிருஷ்ணன் கிட்டே 
 'விபரீதமான
 
நிமித்தங்களைப் பார்க்கிறேன்'
  
என்கிறான். அவன் நிமித்தம் என்பதுதான் சரி.
  
நாம் சகுனம் என்பதே நல்லது அல்லது கெட்டதற்குச் சூசகமான பொதுப்பெயர்
 
என்று 
 வழக்கமாக 
நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பக்ஷிகளால் விளைவது மட்டுமே
 
சகுனம்.ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது
 
சகுனம்.
 
பிற்பாடு பகவானும் அர்ஜுனனிடம் 'நிமித்த'த்தைப் பற்றிச் சொல்கிறார். "நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசின்" (x1.33)
"சத்ருக்களை வதைப்பதாவது, அதனால்
சுருக்கமாகச் சொன்னால், மூன்று ஸ்கந்தங்களில் பொதுவாக கணிதத்தையும்
'ஹோரா' என்கிற வார்த்தையிலிருந்து தான் ஆங்கிலத்தில் ஜாதகமே
 
பாவம் வருமே!"என்று அழுத அர்ஜுனனிடம், "இந்த யுத்தத்தில் இவர்களை
 
வதைப்பதாக நான் ஏற்கெனவே ஸங்கல்பம் பண்ணியாகிவிட்டது. அதனால்
 
இவர்கள் இப்போ
து  ஏற்கனவே 
 செத்துப் போனவர்கள்தான். இவர்களைக் கொல்பவன்
 
நான் தான்
 அப்பா. 
நீ வெறும் கருவி மாத்திரமாக இரு"
 
என்று 
 அர்ஜுனனிடம் 
பகவான் சொல்கிறபோது, 'நிமித்த மாத்ரம் பவ'
  
என்கிறார்.
ஆகவே  
நிமித்தம் என்பது அதுவே பலனை
 
உண்டாக்குவதில்லை;
   ஏதோ ஒரு 
 இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது
 
வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய
 
பூர்வ
 
கர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன.சுருக்கமாகச் சொன்னால், மூன்று ஸ்கந்தங்களில் பொதுவாக கணிதத்தையும்
 
கிரஹதிகளை சொல்லுவது 'ஸித்தாந்தம்'. தனித்தனியாக மனிதனுடைய
 
ஸுக
 
துக்க பலனைச் சொல்லுவது 'ஹோரை' அல்லது ஜாதகம்.'ஹோரா' என்கிற வார்த்தையிலிருந்து தான் ஆங்கிலத்தில் ஜாதகமே
  
'ஹாரஸ்கோப்' எனப்படுகிறது. மிச்சம் உள்ளவை எல்லாம் 'ஸம்ஹிதை'.
வெள்ளைக்காரன்   நம்மைவிட  நமது  சாஸ்திரங்களை  நன்றாக தெரிந்து  கொண்டு நம்   கண்ணெதிரே நமது செல்வங்களை எடுத்து
ச் 
 சென்று  அனுபவித்து  பேரும் புகழும் பெற்றான். 
நாம் கோட்டை விட்ட  
நமது   ரிஷிகளின்   அற்புத படைப்புகளை  முழுதும் பயன் படுத்திக்கொண்டான்.   நாம்  அவனைப்போலவே  கோட்
டு 
, சூட்டு,சுருட்டு, அவன் பாஷை  மட்டும்  கற்றுக்கொண்டு விட்டோம். இப்படி  ஒரு  கூட்டம்  உலகில் எங்காவது  பார்க்க  முடியுமா? .என்றார்  தாத்தா.
இன்னொரு  வேடிக்கை சொல்லி  முடிக்கட்டுமா?    நாகு செட்டியார்  சகுனம் பார்ப்பவர்.  ஒரு  கடன் வசூலிக்க  கிளம்பினார்.  அந்த பயல்  பாலு ரெட்டி மட்டும்  இன்று  கடனை திருப்பிக் கொடுக்கலேன்னா அவன் காலை வெட்டிட போறேன்  என்று  கருவிக்கொண்டு குடையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு  சென்றார்.  அங்குமிங்கும்  ஏதாவது  பக்ஷி  தென்படுகிறதா என்று  சகுனம் பார்த்தார். 
ஒரு பெரிய  வால்   நீளமான கருங்குருவி  சர்ரென்று  பறந்து  இடது பக்கத்திலேருந்து  வலது  பக்கமாக  சென்றது. செட்டியார் மகிழ்ந்தார்.  ஒரு  பழைய  வாக்கியம்  நினைவுக்கு வந்தது. 
 ''வால்  நீண்ட கருங்குருவி இடமிருந்து வலம் போனால்  கால் நடையாய்ப் போனவரும் கனக தண்டி  ஏறுவரே'. ஓஹோ  இன்னிக்கு நமக்கு  ஏதோ நல்ல  வாஹனப் ப்ராப்தி இருக்கு போல  இருக்கே.''
 பாவா சாஹிப் தெரு முனையில் அவர்  திரும்பவும் எதிரே  கன  வேகமாக ஒரு  முட்டை  பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மூன்று சக்கர  வண்டி  வரவும் சரியா இருந்தது.  இதை எதிர் பார்க்காத செட்டியார்  ஒரு தாவு தாவி, அதே நேரம்  இவரை  தவிர்க்க சற்று  வண்டியை  சற்று இடது பக்கம் ஒடித்த டிரைவரின் பாதையில்  அவர்  தொப்பென்று விழுந்து  அவர் இடது கால் விரல் மீது வண்டி ஏறி  விரல்கள் நசுங்கின.  அப்புறம் என்ன   அவரை  நாலு பேர்  தூக்கிக்கொண்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரியே சேர்த்து, ஊசி மருந்து, மாவு கட்டு  எல்லாம் போட்டு  கால்  புசு புசு வென்று  வீங்கி நடக்க முடியவில்லை.  ஒரு மஞ்சள் பெயிண்ட் அடித்த  சைக்கிள் ரிக்ஷாவிலே ஏற்றி அனுப்பப்பட்டு  வீடு வந்தார். 
இது தான்  பக்ஷி சகுனம் சொன்ன கனக தண்டி  (பொன்னாலான  பல்லக்கு) வாஹனப் ப்ராப்தியோ?   பாலு ரெட்டி கால்  வெட்டப்படாமல் தப்பி  நாகு செட்டியார் கால் கட்டப்பட்டு வீடு சேர்ந்தார்..
கருங்குருவி இடம் இருந்து வலம் போகணும் மா . இல்ல இடம் இருந்து வலம் போகணும் மா சொல்லுங்க
ReplyDelete