Monday, December 1, 2014

தாத்தாவும் பேரனும் - சமத்து சுப்புணி

  
தாத்தா எனக்குஒரு கதைசொல்லுங்க:

என்ன கதைவேணும்?

நீங்க நீதி கதை சாமி கதை சொல்லுவீங்க, அதுலே ஏதாவது ஒண்ணு.
 தாத்தா கொஞ்சம் வெந்நீர் பிளாஸ்கிலிருந்து எடுத்து குடித்துவிட்டு   தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.கதை வந்தது.
ஏழு வயசு சுப்புணிஅம்மாவோடு ஒருஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று ஒரு இனிப்புகடையில் அந்த கடைக்காரர்சுப்புணியை ரொம்ப பிடித்துப் போய் "டே , குட்டி பயலே ! இந்தா  உனக்குகைநிறைய சாக்லேட் எடுத்துக்கோ'' என்றுஒரு கண்ணாடி ஜாடியை நீட்டினார்.
சுப்புணி அதற்குள் இருக்கும் சாகலேட்களைஎட்டி பார்த்துவிட்டு தலையை வேண்டாம்என்று ஆட்டினான். எவ்வளவு சொல்லியும்அவன் கேளாததால் அவன் அம்மா "டேசெல்லம் அவர் அவ்வளவு சொல்லியும்மாட்டேன் என்று சொல்லிவிட்டாய் அம்மா, நான் சொல்கிறேன் நீ உன் கை நிறையஎவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோ"என்றாள். " சரி அங்கிள் நீங்களே உங்கள்கையாலே எடுத்துகொடுத்தால்வாங்கிக்கறேன்" என்றான் சுப்புணி.'' என்ன நல்ல பையன் பார்த்தீர்களா.குழந்தையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள்.மற்றவர் பொருளை அவர்கள் கொடுத்தால்மட்டுமே வாங்கிக்கொள்ளும் பழக்கம்.பிரமாதம். இதோ நானே கை நிறையதருகிறேன்''  என்று அவர் தன்னுடைய கை நிறைய சாக்லேட் எடுத்து சுப்புணியிடம்நீட்டினார். "
அதை வாங்கி கொண்ட சுப்புணி அப்பறமாகஏன் இவ்வாறு செய்தாய் என்று வீட்டில்கேட்ட அம்மாவிடம்  என்ன சொன்னான்?

"என் கை சின்னது. கொஞ்சமாக தான்சாக்லேட் வரும். அவர் கை பெரிசு. நிறையகிடைக்குமல்லவா?! என்றான்

ஒரு நீதி கூட உதயமாகிறது இதிலிருந்து:நாமாக எதையாவது தேடி அடைவதைகாட்டிலும் கடவுள் நமக்கு அருள்வது அதிகம்அல்லவா!!"

No comments:

Post a Comment