Monday, December 1, 2014

பெரியவா உச்சிஷ்டம்...


அனாதரவான ஓர் அம்மையார்,ஒரே பிள்ளை.அவனுக்குத்தோல் வியாதி வந்து ,மருத்துவர்களுக்குக்கட்டுப்படாமல் உடம்பெல்லாம் பரவி விட்டது.கருமேஅகம். உடல் அரிக்கும்.சொறிந்தால் ரத்தவிளாறுதான்.அந்த அம்மாளுக்குத் தன் பிள்ளை படும் கஷ்டத்தைப்பாத்து சகிக்க முடியவில்லை .நேரே பெரியவாளிடம்நேரே வந்து மகன் படும் கஷ்டத்தைச் சொன்னாள்.பெரியவா க்ருபையாலே உடம்பு குணமாகணும்,எனக்கு வேறே கதி இல்லை வக்கும் இல்லை..

.பெரியவா அந்த அம்மாவையும் பிள்ளையையும்மடத்திலேயே தங்கச் சொன்னார்கள். பெரியவர் நாள்தோறும் ஏற்றுக்கொள்கிற பிக்ஷையின் மீதத்தைமட்டுமே அந்தப் பையன் சாப்பிடவேண்டும். வேறேஎதுவுமே பால், காபி,டீ உட்பட சாப்பிடக் கூடாது என்றஉத்தரவோடு!அம்மையாரும் பரம சந்தோஷத்துடன் ஒத்துக்கொண்டாள்.பெரியவா "மறு உத்தரவு வரையில் " தன் பிக்ஷைத்திட்டத்தை சமையற்கட்டில் சொல்லியிருந்தார்கள்.

வெறும் வாழைத்தண்டு மட்டும்தான் பிக்ஷை!சிறிதுஉப்புப் போட்டு வேகவைத்து வைத்திருப்பார்சமையற்கார சிஷ்யர். பெரியவா அதை ஸ்வீகரித்து விட்டுகொஞ்சம் மோர் சப்பிடுவார்கள்.இதே வாழைத்தண்டும், மோரும் மட்டும் பையனுக்கும்கொடுக்கப் பட்டன. முதலில் அலுப்பும் சோர்வும்தான்வந்தன. அனால் பெரியவா பிக்ஷை செய்த உச்சிஷ்டம்என்ற நினைவு வந்ததும் அமுத பானமாக உண்டுவந்தான்.

பத்து நாட்களுக்குப்பின் நாளடைவில் அரிப்பும் ,கருமையும் குறைந்ததோடு கருமையும் அரிப்பும்மறைந்து தோலின் இயற்கையான நிறம் வந்து விட்டது.நாற்பது நாட்களுக்குப் பின் கருமை மறைந்ததோடல்லாமல்மிக்க தேஜஸோடு விளங்கினான் பையன்.

அவனுடைய தாயாருக்கு எல்லையில்லாத சந்தோஷம்."வேறு யாருக்கு இந்த பாக்யம் கிடைக்கும்?" என் பிள்ளைக்குவந்த வியாதி பாபத்தின் பலன் என நினைத்தேன் இல்லை,இது புண்ணியத்தின் பயன் என்பது தெரிஞ்சு போச்சு.பெரியவா உச்சிஷ்டத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள்சாப்பிடும் பாக்யம் யாருக்குக் கிடைக்கும் " என்று புலம்பித் தீர்த்தாள்.

எல்லாம் வழைத்தண்டு மஹிமை என்றார் பெரியவா.வாழைத்தண்டு என்பது ஒரு சாக்கு, பெரியவா உச்சிஷ்டம்என்கிறது தான் பிரதான காரணம் என்று நெஞ்சாரச் சொன்னாள் தாயார்.

பெரியவா தரிசன அனுபவங்கள்... கோதண்ட சர்மா.


No comments:

Post a Comment