Sunday, December 7, 2014

விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை ஏன்?


முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும்,நற்காரியங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தான். அவன் வாயிலிருந்து அக்கினியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல்செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசூழ கைலாயம்சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள்.
அவர்களதுவேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.ஆனால் விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் உள்ளேயே அக்னியை உமிழ, விநாயகர் எரிச்சல் தாங்க முடியாமல்குதிக்கத் துவங்கினார். விநாயகரின் துடிப்பை கண்ட இந்திரனும் தேவர்களும் கங்கையை அவர்மீது பொழிந்தார்கள்.
விநாயகரின்எரிச்சல் தணியவில்லை. சந்திரன் தன் குளிர்ச்சியான நிலைவை விநாயகரின் மீது பொழிந்தான். அப்போதும் விநாயகரின் எரிச்சல்அடங்கவில்லை. தேவர்களும் இந்திரனும் என்னென்னவோ செய்து பார்த்தும் விநாயகரின் எரிச்சல் அடங்கவேயில்லை. அப்போது அங்கு வந்த ரஷி ஒருவர் அருகம்புல்லைக் களைந்து அவற்றை விநாயகரின் தலையில் கொட்டினார். உடனே விநாயகரின் எரிச்சல்அடங்கியது. அனலாசுரன் அவரது வயிற்றிலேயே ஜீரணமாகிவிட்டான். அகம்மகிழ்ந்த விநாயகர், 'இனி என்னை அருகம்புல்லால்அர்ச்சனை செய்து வழிபடுபவர்களின் குறைகள் அனைத்தும் நீங்கும்' என்று வரமளித்தார். 

அன்றுமுதல் விநாயகருக்கு அருகம்புல்அர்ச்சனை சிறப்புப்பெற்றது, அதோடு அனலாசுரனை விழுங்கி அவனை ஜீரணம் செய்ததால்தான் விநாயகருக்கு பெருத்த வயிறும் உண்டாயிற்று.

No comments:

Post a Comment