Monday, December 8, 2014

சாமி தாத்தாவின் விளக்கம்


''நமஸ்காரம் .  ராமகிருஷ்ணன் ''
யாரு  தெரியல்லியே?
உங்க  பேரன் கோபுவும்  என்  பையன்  ராஜாவும் க்ளாஸ்மேட் . உங்களைப்பத்தி அடிக்கடி  வீட்டிலே  சொல்லுவான்.  உங்களைப்பார்த்து  இன்னிக்கு  ஆசீர்வாதம்  வாங்கிக்க வந்தேன்.
என்ன விசேஷம்  இன்னிக்கு
எனக்கு  பர்த்டே.
ரொம்ப சந்தோஷம்   எல்லாம் அந்த  கிருஷ்ணன்  க்ரிபை.  நாம எல்லோரும்  நன்றாக வாழ  என்னென்னவெல்லாம்  செய்திருக்கிறான்  அந்த  கிருஷ்ணன். அவனே  ராமனாகவும்  கருனாசாகரமா இருந்து  சேவை  பண்ணியிருக்கிறான்.  அருமையான  பேர்  உங்களுக்கு.  எந்த  ஊர்  உங்களுக்கு?''
ஈரோடு.
அப்படியா  ரொம்ப   அருமையான ஊரு.   நான் போயிருக்கேன் . பவானிலே  ஸ்நானம் பண்ணியிருக்கேன்.  அருமையான சிவன் கோவில்  கரையிலே இருக்கே.  அதுசரி  உங்க ஊருக்கு அந்த  விசேஷ பேர்  எப்படி  வந்துதுன்னு  உங்களுக்கு  தெரியுமோ?
ஈரோடு என்றால்  என்ன அர்த்தம்   என்றே தெரியவில்லை எனக்கு.   ஈ  தெரியும்   ரோடு  தெரியும்   ரெண்டுக்கும் என்ன  சம்பந்தம் என்று  தெரியாது  என்று  சிரித்தார்  ராமகிருஷ்ணன்
ஈரோடு பேர் வந்த காரணம்  நான்  சொல்லலே.  மஹா பெரியவா சொன்னது.

பெரியவாளை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார்  ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. உன்  ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா" என்றார்.
அவருக்குத் தெரியவில்லை. "சரி உங்க ஊர் சுவாமி பேரென்ன?"
என்றார். "ஏதோ வித்தியாசமாக இருக்கும் மறாந்து போச்சு.."
என்றார். "ஆர்த்ர கபாலீசுவரர்னு பேரோ?" என்றார் பெரியவா.
"ஆமாம்..ஆமாம்!" என்று அவர் சொல்லவே,
 "அதற்குத்தான் 'ஈரோடு'னு அர்த்தம்.
 'ஆர்த்ரம்னா ஈரம்; கபாலம்னா மண்டையோடு. ஈர ஓட்டைக் கையிலே  வைத்திருப்பதால் [ஈரோடு} சுவாமிக்கு  அந்தப் பெயர். பிரும்மாவோட அஞ்சு தலைலே ஒரு தலையை சிவபெருமான் திருகி எடுத்ததால், பிரம்மஹத்தி தோஷத்தினால்  சிவன் கையிலேயே கபாலம் ஒட்டிக் கொண்டுவிட்டது. திருகி
எடுத்தால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன் கூடிய ஓட்டைக் கையிலே
வைத்திருக்கும் சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார்.[ஈர+ஓடு]!"

சார்  இன்னிக்கு  தான்  ஈரோடு  பேர்   மகிமை எனக்கு தெரிஞ்சுடு  என்றார்  ராமகிருஷ்ணன்.

அசாத்யம்.  பெரியவா   ஒரு மொபைல்  என்சைக்ளோபீடியா.  தெரியாத விஷயமே கிடையாது.  அதில்  ஒண்ணும்   ஆச்சர்யம்  இல்லை.  தெய்வத்துக்கு  ஒண்ணுமே  தெரியாம  இருக்கமுடியுமா?   

No comments:

Post a Comment