தாத்தா உங்க கிட்ட எங்க ஹெட்மாஸ்டர் ராதா கிருஷ்ணன் சார் தேங்க்ஸ் சொல்ல சொன்னார். ''
எதுக்குடா கோபு எனக்கு தேங்க்ஸ் எல்லாம் ?''
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொன்னீங்களே அதை எல்லாம் எல்லோருக்கும் ஸ்கூல்லே போர்ட்லே எழுதிப்போட்டு நிறைய பேரன்ட்ஸ் அவருக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொன்னதை உங்களுக்கு போய் சேரவேண்டியது என்றார். உங்களை மீதி ஏதாவது எழுத சொல்லி வாங்கிண்டு வா ''என்றார்.
இந்த நோட்டிலே கொஞ்சம் சேகரிச்சு எழுதி வச்சிருக்கேன் அதை கொண்டு போய் கொடு. நீயும் படி ''
கோபு படிக்கும்போது நாமும் தாத்தாவின் ''நோட்ஸ்'' அவன் படிப்பதை சேர்ந்து படிப்போமா ?
11. हल्दी ஹல்தி -- வீட்டில் மஞ்சள் நீர் தெளிப்பது - வீட்டில் ஒரு விசேஷம் என்றால் நிறைய பேர் வருவார்களே. அவர்களில் யாருக்கு என்ன உடல் உபாதை, வியாதி,நோய் இருக்குமோ, அது எளிதில் அடுத்தவருக்கு பரவக்கூடுமே. மஞ்சளுக்கு நோய் தடுப்பு சக்தி, நுண் கிருமி நாசினியாக செயல்படுவது போன்ற சக்தி இருப்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதை ஒரு சடங்காக, புனிதப்படுத்தி கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு சடங்காக செய்திருக்கிறார்கள். மஞ்சள் நீராட்டு விழா, மஞ்சள் தேய்த்து குளிப்பது என்பது பெண்களுக்கு ஒரு கிருமிகளிடமிருந்து உடல் பாதுகாப்பு என்பதாவது புரிகிறதா? அது சரி அவர்கள் எந்த காலேஜில் MBBS, MD?
12. गोबर -- கோபர் -- பசுஞ்சாணம் பிசைந்து சுவற்றில் விரட்டி தட்டி வைத்திருப்பார்களே அந்த காலத்தில் ஞாபகம் இருக்கிறதா? விரட்டி தட்டி வைத்த வீட்டில் ஒரு வியாதியும் நுழையாது. பசுஞ்சாணி ஒரு அண்டி பயாடிக் மட்டுமல்ல சக்தி வாய்ந்த தாதுப்பொருள்கள் கொண்டது. விரட்டியை எரித்த சாம்பலிலிருந்து தான் விபூதி. அதை குழைத்து நெற்றியில், கையில், மார்பில் ஏன் பூசுகிறோம் என்று புரிகிறதா? அது ஒரு கவசம் தம்பி!
13. गोमूत्र கோமூத்ர - பசுவின் கோமியம் எத்தனையோ வியாதிகளை குணப்படுத்துகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பித்தம், கபம், இதய நோய், விழ முறிவு சக்திகளை கொண்டது. பஞ்ச கவ்யம் என்கிற வார்த்தை கேள்விப்பட்டதுண்ட தெரியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும். அதை ஒவ்வொரு முக்ய பண்டிகைகளிலும் விசேஷங்களிலும் அனைவருக்கும் கொடுப்பது ஒரு அவ்ஷத மாகவே தான். உள்ளும் வெளியும் பரிசுத்தமாவதற்கு.
.
14.शिक्षा - சிக்ஷா - தண்டனை. - முட்டி போடுவது - தோப்புகரணம் போடுவது - இதை நான் சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் அனுபவப்பட்டி ருக்கிறேன் - ரெண்டு கையாலும் ரெண்டு காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதால் புத்தி கூர்மையாகிறது என்று இவ்வளவு லேட்டாக கண்டு பிடித்திருக்கிறார்கள். முடக்கு வியாதி ,Asperger’s Syndrome, படிப்பில் மந்தம், மற்றும் எல்லாம் நீங்கிவிடுமாம்.
15. दिया தியா - எண்ணெய் , நெய் விளக்கு கோவிலிலும் வீடுகளிலும் ஏற்றுவது. இது சுற்றுப்புறத்திலும் மனத்திலும் நல்ல எண்ணங்களை உண்டாக்கும். நமது அறிவும் புத்தியும் வளர்கிறது.
16.जनोई ‘ ஜனொயீ - பூணல் - ( அநேகருக்கு இதன் உபயோகம் முதுகு சொறிவதற்கு மட்டுமல்ல) ஆகு ப்ரெஷர் வைத்தியத்தையும் சேர்ந்தது. இதை பூணுவதால் எத்தனையோ வியாதிகள் வராமல் தடுக்க முடியும். .
17. तोरण தோரணம் - வாசலில் கட்டி தொங்க விடுகிறோமே அது. வாசலுக்கே தோரண வாயில் என்று பெயர் அந்த காலத்தில். மாவிலை தோரணம், வேப்பிலை தோரணம், அசோகா மர இலை தோரணம் சுற்றம் சூழ்நிலையை பரிசுத்தமாக்குகின்றன. இதால் வியாதி அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பரவுவதில்லை. அம்மை போட்டு இருந்தால் அந்த வீட்டில் வேப்பிலை பார்த்தாலும் சொருகி வைக்கும் வழக்கம் இருந்தது அப்போது. வாசலில் ஒரு பக்கெட்டில் வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் வைப்போம். அதால் கை கால் சுத்தம் செய்து கொண்டு தான் உள்ளே வர விடுவார்கள். தலையில் ப்ரோக்ஷனம் செய்துகொள்வோம். இதெல்லாம் தடுப்பு மருந்துகள். அதை வலியுறுத்தத் தான் மஹமாயீ என்று அவளை வேண்டிக்கொள்வோம்.
18.चरणस्पर्श சரணஸ்பர்சம் -- பெரியவர்களின் கால்களை தொட்டு கும்பிடுவது. இப்படி அடிக்கடி குனிந்து எழுவதால் முதுகெலும்பு நல்ல அமைப்பை பெறும் . ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். உடலுக்கும் நல்லது. பெரிசுகளுக்கும் மரியாதை. அதுகள் சந்தோஷமாக வாழ்த்துவதும் கிடைக்குமே.
19. चिताग्नि சிதாக்னி -- இறந்தவர்களுக்கு ஸ்மசானத்தில் எரியூட்டுவது. இறந்த உடலை சுத்தமாக அழிப்பது. அதிலுள்ள கிருமிகள் பரவாமல் அழிப்பது.
20. ॐ ஓம் மந்திரம் உச்சாடனம். -- இதயத்துடிப்பை சீர் படுத்தும். மனத்தை ஒருமைப்படுத்தும். புலன்களின் சக்தியை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்க உதவும். இதற்கு மேல் என்ன பரிசு வேண்டும்.?
21. हनुमान चालीसा ஹனுமான் சாலிசா - இதைப்பற்றி ஏதாவது சொல்வதற்கு முன்பு ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன். NASA, அமெரிக்காவில் உள்ள விண் வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் இரவும் பகலும் உழைத்து சாப்பிடாமல், தூங்காமல் கண்டுபிடித்தது என்னவென்றால் ஹனுமான் சாலிசாவில் சூர்யனுக்கும் நமது பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை எப்படி அளப்பது என்று சொல்கிறதாம். ஹனுமான் தான் சின்னவயதிலேயே NASA பற்றி தெரியாமலேயே சூரியனை ஒரு பழம் என்று கருதி அதனிடம் சென்று அதை விழுங்கி வாய் புண்ணாகி வெண்ணை தடவிக்கொண்டவராயிற்றே. பூமி-சூரியன் தூரம் தெரியாமலா தாவினார்.
22.शंख சங்கு - சங்க நாதம் ஒலிக்கற்றைகளை அவிழ்த்து விடுகிறது. இதனால் கெடுதல், தீமை விளைவிக்கும் கிருமிகள் மடிகின்றன. சிறிய தீமை செய்யும் பூச்சிகள் இறக்கின்றன. கொசு குடும்பம் திண்டாடுகிறதாம். அவற்றின் உற்பத்தி எண்ணிக்கை குறைவதால் மலேரியா நோய் அதிகமாக பரவாதாம். .
14.शिक्षा - சிக்ஷா - தண்டனை. - முட்டி போடுவது - தோப்புகரணம் போடுவது - இதை நான் சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் அனுபவப்பட்டி

No comments:
Post a Comment