ப்ரபந்தம் வேதா மாமி ஒரு மாத்வரைக் கூட்டிக்கொண்டு தாத்தாவை
சந்தித்தாள்'' ''யார் வேதா இந்த சுவாமி?
'' ரகோத்தம ராவ் உங்களைப்பத்தி கோவில்லே பேசிண்டிருந்தேன் . உடனே
பாக்கணும்னார். அழைச்சிண்டு வந்தேன்.''
'' நமஸ்காரம் உக்காருங்கோ. என்ன வேண்டும் சொல்லுங்கோ ''
''நீங்க ஏதோ படிச்சிண்டு இருக்கேளே அதையே சொல்லுங்களேன் ''
'' இது முண்டகோப நிஷதிலே ஓர் ஸ்லோகம்' (2.2.4). அது என்ன சொல்றதுன்னா
'' ப்ராணவோ தனு.. ஸரோ ஹ்யத்மா பிரம்ம தல்லக்ஷ்யமுச்யதே'
அப்ரமத்தேன வேத்தவ்யம் சர்வான் தன்மயோ பவேத் ''
'' அர்த்தம் தமிழ்லே புரிகிற மாதிரி சொன்னா தெரிஞ்சுக்க முடியும் ''
''சொல்றேன் ''
ஒரு பெரிய சக்திவாய்ந்த வில் இருக்கு. அது தான் ''ஓம்'' என்கிற
பிரணவ மந்த்ரம். ப்ரணவத்திலேருந்து தான் பிராணன் (உயிர்) என்கிற
வார்த்தை. ப்ரணவஸ்வரூபம் தான் முருகன். ஓம் என்று எழுதிதான்
அதுக்கு நடுவிலே முருகன் படம் போடுவா. பிள்ளையாரையும் இப்படி போடறது
உண்டு.
வில்லு என்றால் அம்பு வேண்டுமே? அது தான் மனசு. மனசுலே ஓம் என்று
இணைத்து நாம் எதை நோக்கி அம்பு எய்கிறோம் தெரியுமா. பிரம்மம்
என்கிற பரம்பொருள். மனசு ஓம் மூலம் பிரம்மத்தை அடையும் என்று
இவ்வளவு கவித்வம் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அதாவது ஒன்றிலேயே
குறியாக மனதை ஈடுபடுத்துவது. பிரம்மத்தை அடைய செய்யக்கூடியது.
அப்படி மனத்தை கட்டுப்படுத்தி பிரம்மத்திடம் செலுத்துபவன்
பிரம்மமாகிவிடுகிறான். அதாவது பிரம்மத்தோடு இரண்டறக் கலந்து விடுவான்.
ஒரு எதன் மீதாவது பட்டால் அதிலேயே நுழைந்து தங்கிவிடுகிறதல்லவா.
எவ்வளவு அழான உதாரணம் இது'. புரிகிறதா?
'' ரொம்ப நேர்த்தி''
''இதை நமது திருமந்திரத்தில் வேறு சிம்பிளாக திருமூலர்
சொல்லியிருக்கிறார் என்று அடிக்கடி சொல்வேனே''.
''மறுபடியும் சொல்லுங்களேன். நானும் கேட்கிறேன்''
'' அன்பும் சிவமும் வேறென்பார் அறிகிலார்
அன்பே சிவமாவது யாருமறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே ''
அதவாது நாம் எதை நினைக்கிறோமே அதாகவே ஆகிவிடுகிறோம். இதைத்தான்
கிருஷ்ணன் கீதையிலும் நமக்கு நினைவூட்டுகிறான். எல்லா உபநிஷத்க்ளும்
வேதங்களும் வெவ்வேறு விதமாக ஒரே உண்மையையே பலவாறாக எடுத்துச்
சொல்கின்றன.
விப்ரா பஹுதா வதந்தி -- அறிந்தவர்கள் அவர்கள் அறிந்ததை அவர்கள்
வழியில் சொல்கிறார்களே தவிர சொல்வது ஒன்று தான்.
ரொம்ப தேங்க்ஸ் சார். உங்களை அடிக்கடி வந்து சந்திக்க ஆவலாக உள்ளேன்.
No comments:
Post a Comment