பெரியவா சரணம்.
ஆகாச கங்கை ஐயாவாள் வீட்டிற்கு மட்டுமா வந்தது... நம் அனைவரது மனந்தனிலும் என்றென்றும் வற்றாத கங்கா ப்ரவாகமாக அல்லவா ஓடுகின்றது - ஸ்ரீமஹாஸ்வாமிகள் எனும் உருவினிலே!
இன்றைய தினம் அந்த பரம்பொருள் ப்ருந்தாவனப் ப்ரவேசம் செய்த திரு நாள் என்றாலும், நம் பொருட்டு சூக்ஷம ரூபமாய் இப்புவிதனிலே இருந்து, நம்மை மட்டுமல்லாது இனி வரப்போகும் சந்ததியினரையும் நல்வழிப் படுத்தும் பொருட்டு நீங்கா ப்ரும்மமாய் இருக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமிகளை த்யானிக்கையில் மனம் ஆனந்த ப்ரவாகம் ஊற்றெடுத்து மாரியென பொழிவதை உணர்கின்றதே!
அற்புதமான தரிசனத்தோடு ஐயனை த்யானித்து ஆனந்தக் கூத்தாடுவோமே!
காலை முதலாய் நம் பெரியவா குடும்ப உறவுகள் பற்பல பேர்கள் காஞ்சித் திருத்தலத்தில் ஐயனின் சன்னதியில் இருந்து தொலைபேசியில் அழைத்து எந்தன் ப்ரார்த்தனைகளைப் பெரியவாளிடத்தில் சமர்ப்பிப்பதாகக் கூறிவருவதைக் கேட்கையில் மஹா ஆனந்தம் நிறைகின்றது அழ்மனதிலே!
ஜெகத்குருவிடம் ப்ரார்த்திக்கும் போது இந்த ஜெகத்திற்காகவே ப்ரார்த்திப்பது தாமே முறை என்பதால், ஒவ்வொரு ஜீவர்களுக்கும் இருக்கும் படியான ரோகங்கள், கஷ்டங்கள், துயரங்கள் எல்லாம் நீங்கப் பெற்று, தர்மமான எதிர்பார்புகள், ஞாயமான கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்பட்டு அனைவரும் ஆனந்திப்பதோது ஐயனின் அறிவுரைப் படியாக வாழும் பக்குவமும் பெறவேண்டுமாய் ப்ரார்த்தியுங்கள் என உங்கள் யாவரின் சார்பாகவும் வேண்டி வருகின்றேன்.
த்யான மூலம் குரூர் மூர்த்தி
பூஜா மூலம் குரு பதம் |
மந்த்ர மூலம் குரோர் வாக்யம்
மோக்ஷ மூலம் குரு க்ருபா ||
பூஜா மூலம் குரு பதம் |
மந்த்ர மூலம் குரோர் வாக்யம்
மோக்ஷ மூலம் குரு க்ருபா ||
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
சாணு புத்திரன்.
No comments:
Post a Comment