உமா பாலசுப்ரமணியன்
ஒருமுறைவசிஷ்டருக்கும்,விவாமித்திரருக்கும்
வாக்குவாதம் நிகழ்ந்தது . உலகத்தில் தவம் சிறந்ததா அல்லது சத்சங்கம் சிறந்ததாஎன்று
.அவர்களின் வாக்குவாதம் நிறைவடையாமல்
இருந்ததால், அதற்குத்
தீர்வு காண அதிசேஷனை நெருங்கினர். அவரிடம்
,"
தவம்
வலிமை வாய்ந்ததா?, அல்லது சத்சங்கம் வலிமை
வாய்ந்ததா? " என்று இருவரும் கேட்டனர்.
.
ஆதி சேஷனோ தலையில் உலக பாரத்தைத் தூக்கிக் கொண்டு
நின்றிருந்தார் .
" சற்றுப் பொறுங்கள். இந்தப்
பூமியை யாரேனும் சற்றுப்
பிடித்துக் கொண்டால்தான் நான் தீர்ப்பு வழங்க
முடியும் " என்று சொல்ல , அதற்கு முதலில் விஸ்வாமித்திரர் முன் வந்தார்.
தன் வெகுநாள் தவத்தின் பயனைக் கொடுத்து
விட்டு பூமியைத் தன் தலையில் வாங்க முயன்றார். பூமியை தன் கையில் வாங்கியவுடன் உடல் நடுங்க ஆரம்பித்து
விட்டது.பூமியைப் பிடிக்கக் கூட முடியவில்லை." என்னால் இதை தாங்க முடியவில்லை
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி ஆதிசேஷனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். .
பின் பூமி
வசிஷ்டருக்குக் கொடுக்கப்பட்டது. வசிஷ்டர் அதை அநாயாசமாக
அதைப் பெற்றுக் கொண்டு , பின் அதைத் தன் தலையில் வைத்துக்
கொண்டார்.
விச்வாமித்திரரோ , " இன்னும் ஏன் எங்கள் கேள்விக்கு
பதில் சொல்ல வில்லை ? "
என்று ஆதிசேடனிடம் கேட்க ,ஆதிசேஷனும்
சிரித்துவிட்டு , " நான்
விளக்கம் தருவது அவசியமா? இன்னும் உங்களுக்குப்
புரியவில்லையா ?வசிஷ்டர் பூமியை இவ்வளவு நேரம் தூக்கிக் கொண்டு இருந்தால்
அதற்கு என்ன அர்த்தம் ? " என்றார்.
சத்சங்கம் தான் உண்மையில் சிறந்தது என்பதை , ஆதிசேஷன்
சொல்லாமல் சொன்னதை ஏற்று நாமும் அவ்வாறே சத்சங்கத்தில் சேர்ந்து இறைவனைப் பிரார்த்திக் கொண்டு, நாமும் நம்மைச்
சேர்ந்தவர்களும் மேலும் மேலும் முன்னேற
பாடு படுவோம் !
“தம் பராக்கற நின்னை உணர்ந்து உருகிப் பொற் பத்மக்
கழல் சேர்வார்தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ ! “
--- ( வம்பறாச்சில
-- திருப்புகழ் )
No comments:
Post a Comment