. ஒரு ஊரில் எலி தொல்லை அதிகமாக இருந்தது.. இதனால் மக்கள் நிம்மதி
இல்லாமல் வாழ்ந்து வந்தனர்..
. இதை அறிந்த அந்த ஊரின் ராஜா , எலிகளை அழிப்பதற்கு , தீவிரமாக
சிந்தித்து ஒரு வழியை கண்டுபிடித்தார்...
அதன்படி , ஒவ்வொருத்தரும் எலிகளை கொல்ல வேண்டும் . எத்தனை
எலிகளை கொன்று , அதை என்னிடம் எடுத்து வருகிறீர்களோ அவர்களுக்கு
தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்...
இதனால் தினமும் , மக்கள் எலிகளை கொன்று , அதை அரன்மனைங்கு
எடுத்து வந்தனர். அவர்களுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது..
நாளாக நாளாக , எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ,
அரண்மனை முழுவதும் நாற்றம் எடுக்க ஆரம்பித்து விட்டது..
எனவே மன்னர் , மறுபடியும் சிந்தித்து ஒரு வழிமுறையை கண்டு
பிடித்தார்.அதன்படி , இனி யாரும் எலிகளை எடுத்து வர வேண்டாம் .
அதனுடைய வால் மட்டும் கொண்டுவந்தால் போதும் என்றார்...
அதற்கு அப்பறம் மக்கள் , எலியின் வாலை எடுத்து வந்தனர். நாளாக
நாளாக வாலின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் எலிகளின்
தொல்லை மட்டும் குறையவில்லை...
இதனால் மன்னர் கடும் குழப்பம் அடைந்தார்.. தீவிரமாக விசாரிக்க
ஆரம்பித்தார்..
விசாரணையில் தான் ஒரு பெரிய விஷயம் தெரியவந்தது. விஷயம்
என்னவென்றால் , சன்மானத்திற்கு ஆசை பட்டு மக்கள் , எலிகளை வளர்க்க
ஆரம்பித்து விட்டனர் ..இதனை அறிந்த மன்னர் மிகவும் வருத்தம்
அடைதார்....
நீதி :
" இலவசங்களை வழங்கினால் , மக்களின் பிரச்சினைகள் முடிந்துவிடாது.
அது வேறு உருவத்தில் உருவெடுத்து விடுகிறது..
No comments:
Post a Comment