Monday, December 1, 2014

யமுனா -- கங்கா

ஒரு  தாத்தா எழுதி ஒரு  தாத்தா படித்தது  -
  '' யமுனா நீ உயர்ந்தவள்!''

''சார்,   சார்''
'' யாரு கோபு  வாசலில் சத்தம்  கேட்டு வெளிக்கதவை  திறந்தான். 
கமலா   டீச்சர்   தனது கணவர்  கங்காதரனுடன்  நின்று கொண்டிருந்தாள் . தாத்தா இருக்காரா?
''ஒ   ஏதோ  படிச்சுண்டு  இருக்கார். 
'' வரலாமா  கேளேன்.''  கோபு  விஷயம் சொன்னவுடன்  தாத்தா  அவர்களை  வரச்சொன்னார்.

''வாங்கோ  கமலாம்மாகங்காதரன்  சார். இன்னிக்கு  ஆபிஸ்  லீவா?
''நமஸ்காரம்  சார்.  எனக்கு  உங்க கிட்டே  ஒரு   சின்ன கதை கேட்க ஆசை. என் மனைவி உங்க கதையை  ரொம்ப  ஆர்வமா  கேட்டு பள்ளிக்கூடத்திலும்  பிள்ளைகளுக்கு  சொல்வா, எனக்கும் சொல்வா.  சரி நேராகவே  உங்க கிட்ட   கொஞ்சம் உட்காரலாமே  என்று  இருவரும்  வந்தோம்.

''நீங்க  வரும்போது  தான்  என்   நண்பர்   சிவன்  எழுதின  ஒரு  குட்டி கதைகதை  என்பதை விட  மனதை தொடும் ஒரு  சம்பாஷனை  என்று  சொல்லலாம்   அதை படித்துக்கொடிருந்தேன்.  அதையே  திரும்ப  படிக்கிறேன்  கேளுங்களேன்

++                                                       
                                           
ஒரு எண்பது வயது கிழவி அவள். கோதாவரி என்று பெயர். அவள்  எப்போதும்  தனியாகவே இருப்பவள்.  அவளுக்கு யாரும்  இல்லை.  வாழ்க்கையின்  பெரும்பகுதியை ஏதாவது ஒரு நதிக்கரையிலேயே எங்காவது வசித்தவள். இரவோபகலோ அவளுக்கு உற்ற சினேகிதி  எதாவது ஒரு நதியே.கங்கைக்கரையில் வெகுகாலம் வாழ்ந்த அவள்   மெதுவாகஇப்போது யமுனைக்கு வந்து விட்டாள்.

அவள் வந்து சேர்ந்த நேரத்தில் யாரும் இல்லை யமுனை நதிக்கரையில். நதியை ரசித்துக்கொண்டு அதோடு பேசுவாள்.  
''யமுனாஎவ்வளவு அழகாக இருக்கிறாய்  நீ! நுங்கும்நுரையும்  மலர்களும் நறுமணமும் வீச ஒரு இளம்பெண்ணாகவே கங்கையை விட  அழகானவளாகவே எனக்குகாட்சியளிக்கிறாய் யமுனா".

குரல் கேட்டது பதிலாக: நீயும் ஒருகாலத்தில் இளம்பெண்தானே. என்னை விட அழகானவளாகவே இருந்திருப்பாய்'' எனதோன்றுகிறது".

யார் பேசுகிறது என்று கிழவி அங்கும் இங்கும் பார்த்தாள்.

"கோதாவரிநான் தான் பேசுகிறேன் உன் யமுனா".

"நான்  எப்படி இருந்தேன்  என்றே  எனக்கு தெரியாது யமுனா.  சிறுவயதிலேயே கல்யாணமாகி  நான் வயதுக்கு வரும் முன்பே  எனக்கு  கணவனாக இருந்தவன் கங்கையில் மூழ்கிபோனானே. அன்றிலிருந்து  நான் கங்கை கரையிலேயேவருவானா என்று வெகு காலம்  பார்த்து கொண்டேஎனக்கு வயதாகிவிட்டதே.பிறகு அவனை மறந்துகங்கையின் அழகில் வாழ்ந்தவள்".

"கோதாவரி,  நீ சொல்வதுசரியே. கங்கைமிகப் பெரியவள்.பெரிய இடத்தை சேர்ந்தவள் .எங்களுக் கெல்லாம்  தலைவி.புண்ய நதி.அவளுக்கு  நான்  ஈடாக முடியுமா? நான் சாதாரண மானவள் கோதாவரி". 

"அம்மா, யமுனா நீ ரொம்ப அடக்கமானவள் என்றுமே.அதனால்  தான்  சிவன் கங்கையைத் தன்தலையில் சூடிக்கிறான் என்ற பெருமை   கங்கைக்கு இருக்கிறது என்பதற்காகவே கிருஷ்ணன் உன்னை வெகுவாக விரும்பி உன்னில் எவ்வளவு காலம் சிறுவயதில்விளையாடியிருக்கிறான். 
அவனையும் உன்னையும் பிரித்தே நினைக்க முடியாதபடி உனக்கு  பெருமை தந்தான். கோபமும்சீற்றமும் அடிக்கடி வரும். உன் பெருமை நான் அறிவேன். என் வாழ்வு முடியும் முன்பு உன்னை  ஒருநாள் கட்டாயம் அடையவேண்டும் உன்னிலே கலந்து தான் என்மூச்சை விடவேண்டும் என்பதற்காகவே வந்தவள்"

"கோதாவரிநீ எனக்கு மகிழ்ச்சியூட்ட இப்படியெல்லாம் சொல்கிறாய்.  நான் கங்கையின் முன்பு ஒருசிறுஓடைஅவ்வளவே."

"யமுனாதேவி  நீயும் கங்கையும் ஒன்றே. உன் பெருமைநான் உணர்ந்தவரை சொல்கிறேன் கேள். கங்கையை நூறுமடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள் நீ. 
விஷ்ணு  என்கிற நாராயணனின் ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர்உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு  ஈடுகிருஷ்ணன்  என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில்இருக்கு. யமுனையில்  நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள்  அவனை விட்டு விலகும் அம்மா யமுனாநீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம்  தருபவள். உன்னில் ஒருமுறை ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம்பூரா கிருஷ்ணனின்  நினைவுகளோடு தான்  கரையேறுகிறான்.  நான் இதை சொல்கிறேன் என்று நினைக்காதே.  சைதன்யர் சொன்னதம்மா இது. உனக்கு தெரியுமா

பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனைஆயிரம் முறை உன்னில்  மூழ்கி  விளையாடியிருக்கிறான் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!!  அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை  நீ தொட்டுபுனித மடைந்தவள். யாருக்கு  கிடைக்கும் இந்த பாக்கியம்???

''கோதாவரிஉன்னை எனக்குரொம்ப பிடிக்கிறது.''

''யமுனாநீ என்மனதை கொள்ளை கொண்டுவிட்டாய். என்  உடலையும்  உனக்கே தருகிறேன். பெற்றுக்கொள்''
 
கிழவியமுனையில் கலந்து கிருஷ்ணனில் கரைந்தாள். 



No comments:

Post a Comment