ஓயாமல் வேலை பண்ணினால் ஜீரணக் கருவிகள் கெட்டுவிடும். அதனால் வயிற்றுக்கு உபவாசம் இருந்து ரெஸ்ட் கொடுக்க வேண்டும்.
இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.
உபவாசமிருந்தால் ஆரோக்கியம் போய்விடும் என்று தோன்றினாலும், உண்மைய்ல் இது தான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து.
உபவாசம் இருப்பது முதலில் கஷ்டமாய் இருந்தாலும் அப்பியாசத்தினால் சமாளித்து விடலாம். ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாய் இருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் தியானம் பண்ணுங்கள். உபவாச நாட்களில் சாப்பிடாமல் இருந்தும், தியானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாசம் தெரியும். அந்த லாபத்திற்காக இந்த நஷ்டப்படலாம் என்று தெரிந்து கொள்வீர்கள்.
நான் நிறையச் சொல்வதை விடப் பிரத்யக்ஷமாக பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவசியமும், பெருமையும் விளங்கிவிடும்.
காந்திகூட ஆத்ம சுத்திக்காகவே தான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும், மனஸில் ஒரு சுத்தி உண்டானதாகவும் சொல்லி இருக்கிறார்.
No comments:
Post a Comment