‘கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.
Author: கவிஞர் நெமிலி எழில்மணி.
புத்தகம் படித்த வித்தகர்.
“திரிபுரசுந்தரி திருவிளையாடல்” என்ற நூலை எழுதிட அன்னை எனக்கு ஒரு வாய்ப்புத் தந்தாள். அதனை வானதி பதிப்பகத்தார் அழகாக அச்சிட்டனர். அந்தப் புத்தகம் நெமிலியில் அருள் கொடுக்கும் அன்னை பாலதிரிபுரசுந்தரியின் சன்னதியில் பத்மஸ்ரீ இசைமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதனைப் பெரியவாள் திருக்கரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பேராவல் எனக்கு.
அதன்படி ஒருநாள் அன்னையை வணங்கிவிட்டு கருணைபொழியும் காஞ்சி முனிவரைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றேன்.
சாந்தியளிக்கும் சங்கரமடம் எழில் பூத்து விளங்கியது. ஆதவன் மெல்ல எழுந்து தனது பொன்னிறக் கதிர்களால் சங்கர மடத்தைப் பொன்னிற மண்டபமாக மாற்றிக் கொண்டிருந்தான்.
புன்முறுவல் பூத்த முகத்தோடு காஞ்சித் தெய்வம் அனைவருடனும் கனிவாக சம்பாஷித்துக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அருகே செல்ல இயலவில்லை. எனவே தூரத்தில் இருந்தவாறே அந்த இருள் நீக்கும் ஞானச் சூரியனை தரிசித்துக் கொண்டிருந்தேன்.
அனைவரும் ஒரு தட்டில் மலர், கனிகள், துளசி மற்றும் பூஜா திரவியங்களை வைத்துப் பெரியவாள் பாத கமலங்களில் சமர்ப்பித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். குருவையும், குழந்தையையும் தெய்வத்தையும் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்பது மரபு. ஆனால் நானோ வெறுங்கையுடன் ‘திரிபுரசுந்தரி திருவிளையாடல்’ புத்தகம் மட்டும் ஏந்தி நிற்கிறேன். ஒருவொருக்கொருவர் நேரே சந்தித்து, “சார் ! என்னோட புத்தகம் ரிலீசாயிருக்கு பாருங்க சார் !” என்று சொல்வோமே அந்தப் பாங்கினில் அல்லவோ நான் நின்று கொண்டுள்ளேன். எனக்கே வெட்கமாக இருந்தது.
அதுமட்டுமல்ல. எங்கேஜ்மென்ட் பட்டியல் போட்டுக்கொண்டல்லவா சென்றிருக்கிறேன். 7=30 மணி முதல் 8=30 வரை தரிசனம், 8=30 முதல் 9=00 வரை சிற்றுண்டி, 9=00 முதல் 10=00 வரை காஞ்சியில் உள்ள எனது நண்பர் வீட்டிற்குச் செல்லவேண்டும், 10=00 முதல் 12=00 வரை சென்னைக்குப் பயணம் அங்கு 1=00 மணிக்கு நண்பர் ஒருவரை சந்திக்கவேண்டும், அங்கிருந்து 2=00 மணிக்குக் கிளம்பி 5=00 மணிக்கு நெமிலி வரவேண்டும். இதுதான் எனது எங்கேஜ்மென்ட் விவரம். “நாம் வந்திருக்கிற இடம் என்ன இடம், எதிரே உள்ள தெய்வம் என்ன ஆசி வழங்குகிறது “ இதையெல்லாம் பாழும் மனது யோசிக்கிறதா என்ன? மனதைத்தான் கம்ப்யூடர் ஆக்கி விட்டோமே! அதுவோ ‘மணி எட்டாகி விட்டது என்று குத்திக் கொண்டிருந்தது.
எனக்கோ இருப்பு கொள்ளவில்லை. புத்தகத்தை பெரியவாள் ஒருமுறை தொட்டுவிட்டால்கூட போதும், அது என் ஜன்ம சாபல்யமாக ஆகிவிடும். எப்படி நெருங்குவது ? எப்படிக் கொடுப்பது?
வந்தவர்கள் அனைவருக்கும் தனது அருளாசியை வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடியதே தவிரக் குறையவில்லை. எனக்கோ இருப்புக் கொள்ளவில்லை. உடனே பெரியவாளைத் தரிசித்து விட்டு புத்தகத்தை வைத்துவிட்டு ஓடிவிட வேண்டும். எனது புத்தி அதுபோல, என்ன செய்வது ?
ஓட்டலுக்குச் சென்றால் சர்வர் முதலில் நம்மைக் கவனித்து அனுப்பிவிட வேண்டும்,
தியேட்டருக்குப் போனால் நாம் போனவுடனேயே படத்தைத் தொடங்கிவிட வேண்டும்,
பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் உடனே நாம் செல்லவேண்டிய பஸ் வந்துவிட வேண்டும்,
கோவிலுக்குப் போனால் அர்ச்சகர் உடனே நமக்கு அர்ச்சனை செய்து அனுப்பி விடவேண்டும்.
பொறுமை என்பது கடல் என்பார்கள். அந்தக் கடலின் ஒரு துளிகூட என்னிடம் இல்லையே !
அப்போது வயதான பெரியவர் ஒருவர் அங்கே வந்தார். அவர் ஒரு தட்டில் புஷ்பங்கள், கனிகள் வைத்திருந்தார். அவரிடம் நயமாக நான் வந்த விவரம் கூறி, “அந்தத் தட்டில் இந்தப் புத்தகத்தை வைத்து விடுகிறேன். பெரியவாள் தொட்டுவிட்டால் போதும்” என்று கேட்டுக்கொண்டேன்.
அம்பாளின் புத்தகமாக அது இருந்தபடியால் அவரும் மறுப்பேதும் கூறாமல் அதைத் தம் தட்டில் வைத்துக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு தரிசனம் ஆயிற்று. திருமண சம்பந்தமாக பெரியவாளிடம் தம் ஏக்கத்தைக் கூறி தனது மகளுக்கோ அன்றி மகனுக்கோ திருமணப் பிராப்தம் செய்யுமாறு வேண்டினார். பெரியவரும் தன் மென்மையான குரலில் தமது ஆசியை வழங்கினார்.
நான் மணியைப் பார்த்தேன். ஒன்பது ஆகிவிட்டது. “சரி பெரியவா சன்னதியில் புத்தகம் வைத்தாயிற்று, கிளம்ப வேண்டியதுதான்.”
இது மனதின் ஒரு பாதியின் அறிவுரை.
மறுபாதியோ, “வந்ததுதான் வந்துவிட்டோம். பெரியவர் அந்தப் புத்தகத்தைத் தொட்டுவிடுகிறாரா என்பதைப் பார்த்து விட்டால் எவ்வளவு பெரிய நிம்மதி” என்று புத்திமதி கூறியது.
‘பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ‘
என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள்தான் எத்தனை அனுபவபூர்வமானவை !
“இருந்து பொறுமையாக தரிசனம் செய்யலாம்’ என்பது ஒரு நினைவு.
‘சரி சரி’ பெரியவாள் தரிசனம் ஆயிற்று ! கிளம்பலாம்’ என்பது மறு நினைவு.
‘புத்தகத்தைத் தொட்டுவிட்டால் கூட போதும், சென்று விடலாம்’ என்று ஒரு காம்ப்ரமைசஸ்.
அப்போதுதான் தட்டில் உள்ள புத்தகத்தை மலரை எடுப்பது போன்று மென்மையாகப் பெரியவர் எடுத்தார்.
அவ்வளவுதான்! “அப்பா! எவ்வளவு பெரிய ஆசி ! என்னையே பரமாச்சார்யாள் தொட்டு விட்டது போன்ற இன்ப உணர்வு” என்னால் மகிழ்ச்சியைத் தாள இயலவில்லை.
அந்தப் புத்தகத்தை எடுத்து வழவழப்பாக உள்ள அட்டைகளைத் தடவிக் கொடுத்தாரே பார்க்கலாம்! பிறகு மெல்லப் பிரித்தும் விட்டார். எனக்கோ ஆனந்தம் எல்லையைத் தாண்டியது. மிக அருகில் சென்று அந்த தெய்வீகக் காட்சியை அணு அணுவாக ரசித்தேன். எங்கேஜ்மென்ட் மனது எங்கேயோ போய் விட்டது.
மூக்குக் கண்ணாடியை சரிசெய்து கொண்டு அன்னையின் வரலாறு தொடங்கும் முதலிரண்டு பக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். எங்கும் நிசப்தம்.
‘நெமிலியில் வாழும் சிவம் பெருக்கும் சீலர் ஸ்ரீ டி.கே.சுப்ரமண்ய ஐயர் கனவில் அன்னை தோன்றியமையும், ஆற்றிலேயிருந்து அன்னையை எடுத்து வந்து வீட்டில் ஆராதனை செய்தமையும், வீட்டையே கோயில் போல் அமைத்துப் பூஜைகளைத் தொடர்ந்து நடத்தியமையும்’ அடங்கிய அந்த இரண்டு பக்கங்களை மிகவும் உன்னிப்பாகப் படித்தார்.
அன்னை கனவில் தோன்றும் அற்புதக் காட்சியினைப் படமாக வரையப் பட்டிருந்ததை ஆர்வத்தோடு பார்த்தார். பின்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதனை மென்மையாக மீண்டும் ஒரு தடவை தடவிக் கொடுத்தார். அழகான பொம்மையை ஒரு சின்ன பாப்பா எத்தனை ஆர்வத்துடன் மெல்ல மெல்ல தடவுமோ அதே போன்று அந்த தெய்வக் குழந்தையும் செய்தது.
மெல்ல மேல் நோக்கியவாறு “இந்தப் புஸ்தகத்தை யார் வெச்சது?” என்று கேட்டாரே பார்க்கலாம்.
‘ஆஹா! புஸ்தகத்தைத் தொட்டுவிட்டாலே போதும்’ என்றிருந்த எனக்கு போனஸ் அளிப்பதைப் போன்று பேசவும் செய்கிறாரே என்ற பேரானந்தத்துடன் “நான்தான் வெச்சது” என்று கூறினேன்.
“நீதான் நெமிலி எழில்மணியா?”
எனக்கோ கண்கள் குளமாகிவிட்டன.
“ஆமாம்” என்றேன்.
பெரியவர் என்னைக் கூர்ந்து நோக்கவும் எனக்கோ மின்சார அதிர்ச்சிபோல் ஆகிவிட்டது.
“நீதான் எழுதினையா/”---இது பரமாச்சார்யள் கேள்வி. மெல்லத் தலையசைத்தேன்.
“இதை யார் ரிலீஸ் பண்ணா?”
நான் பதட்டத்துடன், “வானதி பதிப்பகத்தார் ரிலீஸ் பண்ணியிருக்கா” என்றேன்.
பெரியவர் சிரித்தார்.
“புஸ்தகத்தை யார் ரிலீஸ் பண்ணா?”
உடனே நான் அவசர அவசரமாக, “சீர்காழி சார்தான் இதை அம்பாளோட நவராத்திரி விழாவிலே ரிலீஸ் பண்ணினார்” என்றேன்.
மீண்டும் ஒருமுறை புத்தகத்தின் தலைப்பைப் படித்தார். “திரிபுர சுந்தரி திருவிளையாடல்” என மெல்ல உச்சரித்தார். பின்பு கையால், கேள்வி கேட்பது போன்று, “ஆமா! என்ன திருவிளையாடல் பண்ணியிருக்கா சொல்லேன்” என்று கூறவும் என் தைரியம் என்னை விட்டகன்றது.
பரமாச்சார்யாள் பேசுகிறார். எத்தனையோ லட்சக் கணக்கான மக்களுக்கு அருள்மழை பொழியும் அந்த தெய்வம் ஏதுமே தெரியாத இந்தப் பேதையை---சின்னஞ்சிறுவனை----- ஆசீர்வதித்துப் பேசச் சொல்கிறாரே ! இது என்ன விளையாட்டு ! இதுவும் திரிபுர சுந்தரியின் திருவிளையாடல்தானோ ?
இமய மலையின் முன்னே ஒரு சின்னஞ்சிறிய கூழாங்கல் என்ன பேசும்? ஆயிரங்கோடி சூரிய வெளிச்சத்துக்கு முன்னே ஸீரோ வாட் பல்பு எப்படி ஒளி வீசும் ?
“வந்து சார்…….வந்து……..வர்றவாளுக்கெல் லாம் க்ஷேமம் உண்டாறது. நெறையப்பேர் கல்யாணப் பிராப்தம் பண்ணி வைக்கறா ! பல பேர் டிரான்ஸ்ஃபர், ப்ரமோஷன்னு கேட்டதையெல்லாம் அம்மா பண்ணி வைக்கறா…..” இன்னமும் ஏதோ சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துக் கொட்டியது.
தெய்வத்தை வேண்டுகிறோம்—பாடுகிறோம். வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். அந்தத் தெய்வம் திடீரென எதிரில் காட்சி கொடுத்தால் எப்படி இருக்கும் ?
“உனக்கு என்ன வேண்டும் ?” எனக் கேட்டால் எப்படி இருக்கும் ? என்ன கேட்கத் தோன்றும் ? திக்பிரமை பிடித்தது போலல்லவா ஆகி விடும் ? அந்த நிலையில்தான் நான் இருந்தேன்.
தரிசனம் செய்துவிட்டு மட்டும் சென்று விடலாம் என்று நினைத்தது என்ன?
புத்தகத்தை மட்டும் தொட்டுவிட்டால் போதும் என்று நினைத்தது என்ன?
அதற்கும் மேலாக தெய்வமே என்னைப் “பேசு” என்று கூறிய பேரருள் என்ன?
ஓ! எந்த வார்த்தைகளைக் கொண்டு எப்படிச் சொல்லி என் மனநிலையை விவரிக்க இயலும் ?
காமாட்சிச் செல்வரின் கண்களிலிருந்து வீசும் அந்தக் காந்தக் கதிர்களைச் சந்திக்க இயலாமல் எனது உடலும் உள்ளமும் பதறிக்கொண்டிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
நான் குழறுவதைப் பார்த்து அந்தப் பெரும் தெய்வம் புன்னகைத்தவாறே, “உன் தாய் பாஷை என்ன?” என்று கேட்கவும் பிரமித்தேன்.
தெலுங்கு என்று கூறவும் திருவாய் மலர்ந்து சிரித்தது அந்தத் தெய்வம்.
“உன் வீட்டுக்குப் பக்கத்திலே ஓர் ஆறு போறதா?” என்று கேட்டாரே பார்க்கலாம் ! அசந்து போனேன் நான். என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது! “ஆமாம்” என்றேன்.
“நாப்பது வருஷத்துக்கு முன்னே உன்னோட வீட்டுக்கு நான் வந்திருக்கேனே” என்று சொல்லவும் அப்படியே கதறி விடலாம் போல் இருந்தது எனக்கு.
ஆம் ! அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கும். 1945—ஆம் ஆண்டுஎன்று நினைவு. என்னுடைய தந்தையார் நெமிலி ஹெட்மாஸ்டர் டி.கே.ஜானகிராமையர் அவர்கள் பெரியவாளுக்குப் பாதபூஜை செய்தது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.
பல்லக்கு, யானை, குதிரைகள் மற்றும் காஞ்சி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழுமியிருந்தது மறக்க இயலுமோ?
என் முகத்தைப் பார்த்துவிட்டு என் ஜாதகத்தையே கூறும் அந்த தெய்வத்திற்கு முன்னால் நிற்கக்கூட இயலுமோ ?
நான் மிக மிகப் பணிவுடன், “நினைவிருக்கு” என்கிறேன்.
அது மட்டுமா?
அடுத்துக் கேட்டாரே ஒரு கேள்வி!
"இங்கேயிருக்கிற பாடசாலை வெங்கட்ராமன் உங்களுக்கு சம்பந்தி அல்லவா?”
ஓ! என்ன இது ? நடப்பது கனவா அல்லது நினைவா ? என் மனைவியின் அண்ணா கோதண்டராமனுக்கு பாடசாலை வெங்கட்ராமய்யரின் புதல்வி சந்திராவைத்தான் மணமுடித்தார்.காஞ்சியில் நடந்த அந்தத் திருமணத்திற்கு கல்கி அதிபர் சதாசிவம் அவர்களும் இசையரசி திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களும் வந்திருந்தனர்.
“கோதண்டராமா!—ரகுராமா!” என்று ராம நாமமே வரக்க்கூடிய ஒரு பாடலைப் பாடி திருமதி எம்.எஸ் அவர்கள் திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இசை விருந்து அளித்தார்கள். எத்தனை வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி அது! பெரியவாளின் அருளாசியோடு நடந்த திருமணமல்லவா அது!
“ஆமாம் ! ஆமாம் ! சம்பந்திதான்!” என்று என்று பரபரப்புடன் கூறுகிறேன்.
பெரியவர் மீண்டும் புன்னகை பூக்கிறார்.
மீண்டும் ஒரு தடவை அந்தப் புத்தகத்தைத் தடவிக் கொடுத்தார். இரு கரங்களாலும் ஆசியை அள்ளி வழங்கினார்.
ஆஹா! பிறவிப்பயனையே நான் பெற்றேன். நவமணிகள் நிறைந்து வானுயர விளங்கும் நவரத்னச் சிகரம் ஒரு சின்னஞ்சிறு கூழாங்கல்லை எடுத்து அதன் பளபளப்பை வியந்தால் அந்தக் கூழாங்கல்லுக்கு எப்படி இருக்கும் ? அந்தக் கூழாங்கல் நிலையில்தான் நான் இருந்தேன்.
இப்படியொரு அற்புதம் விளைவித்த அந்தப் பெரியவரை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து நிம்மதியாக வணங்கினேன். அவரைத் தொடக்கூடாது என்பார்கள். நான் மானசீகமாக அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு என் நெஞ்சிலே சேர்த்துக் கொண்டேனே, அதை யார் தடுக்க முடியும் ?
செண்பகப் பாண்டியன் சமஸ்தானத்தில் விரிசடை சிவனின் திருவிளையாடலால் வறுமைப் புலவன் தருமிக்குப் பொற்கிழி கிடைத்தது அன்று.
காஞ்சிப்பெரியவாள் சமஸ்தானத்தில் திரிபுரசுந்தரி திருவிளையாடலால் இந்த ஏழைக் கவிஞனுக்குக் கிடைத்து விட்டது பரமாச்சார்யாளின் அருட்கடாட்சம் என்கிற பொற்கிழி.
இதனை என்றும் என் இதயம் மறக்காது.

பரமாச்சார்யாள் பேசுகிறார். எத்தனையோ லட்சக் கணக்கான மக்களுக்கு அருள்மழை பொழியும் அந்த தெய்வம் ஏதுமே தெரியாத இந்தப் பேதையை---சின்னஞ்சிறுவனை-----
இமய மலையின் முன்னே ஒரு சின்னஞ்சிறிய கூழாங்கல் என்ன பேசும்? ஆயிரங்கோடி சூரிய வெளிச்சத்துக்கு முன்னே ஸீரோ வாட் பல்பு எப்படி ஒளி வீசும் ?
“வந்து சார்…….வந்து……..வர்றவாளுக்கெல்

No comments:
Post a Comment