கமலா டீச்சர் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வந்தாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
''என்னம்மா வருத்தம் உனக்கு, ஏன் அழுகிறாய்?
''எங்க வீட்டிலே நீ என்ன பெரிய உத்தியோகம் பாக்கிறே, இஞ்ஜினீயரா, டாக்டரா, ஜட்ஜா, வக்கீலா, என்று என் மனம்
புண் பட பேசிட்டாங்க சார். நான் ரொம்ப படிச்சதில்லை. ஏதோ நான் படிச்சவரை சின்னப்பிள்ளைங்களுக்கு சந்தோஷமாக பாடம் சொல்லித்தாரேன். மனசு வலிச்சுது. அதாலே உங்க கிட்ட கொஞ்ச நேரம் மனம் லேசாகட்டுமே என்று பேச வந்தேன் சார்.''
தாத்தா கையிலிருந்த புத்தகத்தை கீழே வைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.
கமலாம்மா, டீச்சர் உத்தியோகம் ரொம்ப ஒசத்தியானது. அதை மற்றதோடு ஒப்பிடக்கூடாது.'' உனக்கு ஒரு நிகழ்ச்சி பற்றி சொல்கிறேன் கேளும்மா :
ஒரு பள்ளிக்கூடம் பரிட்சைகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்குமுன் ஒரு விழா நடந்தது. அதில் தலைமை ஆசிரியர் என்ன பேசினார் தெரியுமா
ஒரு டாக்டர் தனது பிள்ளையும் தன்னைப்போலவே ஒரு டாக்டர் ஆகவேண்டும் என ஆசைப்படுகிறார்........
ஒரு இஞ்சினீயர் அவ்வாறே தனது பிள்ளையும் பெரிய இஞ்சினீயர் ஆகவேண்டும் என்று .விரும்புகிறார்.....
ஒரு பணக்கார வியாபாரி தனது பிள்ளை தன்னைவிட மிகப்பெரிய பிரபல வியாபாரியாக கனவு காண்கிறார்..
ஒரு ஏழை வாத்தியார் அவ்வாறே தனது பிள்ளையும் அவர்களைபோல தலை எடுக்க வேண்டும் என எண்ணுகிறார்....
எனவே ஒருவருமே தனது பிள்ளை ஒரு ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பதில்லை என்பது உண்மை தான். ..
ஒரு விருந்து நடந்தபோது சில பிரமுகர்கள் வட்டமாக அமர்ந்து பேசினார்கள். ஒருவர் ஒரு பெரிய கம்பெனி தலைமை அதிகாரி. அவர் கல்வி முறை பற்றி பேசினார். ஒரு சாதாரண ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பவரிடம் படிக்கும் பையின் என்ன கற்றுக்கொள்ளபோகிறான்? அருகே சுப்ரமணிய அய்யர், உயர்நிலை கல்வி ஆசிரியர் அமர்ந்திருந்தார். அவரிடம் ஏன் சார் நீங்களே உண்மையை சொல்லுங்கள், உங்களால் ஒரு ஆசிரியராக என்ன பெரிதாக முடிந்தது?''
சுப்ரமணிய அய்யர் அமைதியானவர், எவரையுமே மதிப்பவர். ஒரு ஆசிரியராக என்ன சாதிக்க முடியும் என்கிறீர்களா? ஆமாம் முப்பது வருஷ ஆசிரியர் உத்தியோகத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக என்ன சாதனை புரிந்தீர்கள்?
''எனது அனுபவத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளை அவர்கள் தங்களால் முடியாது என நினைத்ததை விட அதிகமாக உழைக்க வைக்க முடிந்தது.
ஒரு குடியானவனின் பையன் மாநகரத்திலேயே அனைத்து பாடங்களிலும் முதல் மாணவனாக வரச்செய்ய முடிந்தது. மிக பிரபல கல்லூரி அவனை தத்து எடுத்துக்கொண்டு மிகப்பெரிய படிப்பு மேற்கொண்டான்.
குழந்தைகளை ஒரு மணி நேரம் ஒரு வகுப்பில் அமைதியாக சத்தம் போடாமல் படிபில் கவனத்தோடு உட்கார வைக்க முடிந்தது. வீட்டில் எந்த பெற்றோராலும் ஐந்து நிமிஷம் கூட I POD, டிவி , GAMES ல் ஈடுபடாமல் இருக்க சாதிக்க முடியாத சாதனை இது.
நீங்கள் எல்லோருமே ஆசிரியர் என்பவர் ஒரு சாதாரண முக்யமில்லாத பயனில்லாத உத்தியோகஸ்தர் என்ற எண்ணத்தில் உள்ளது தெரிகிறது. ஒரு ஆசிரியர் என்ன பெரிதாக செய்யமுடியும் என்று சந்தேகப்பட்டீர்களே கேளுங்கள்
குழந்தைகளை நாங்கள் ஆச்சர்யப்பட வைக்கிறோம். அவர்களை சிந்த்தித்து கேள்வி கேட்க வைக்கிறோம். தவறு செய்தபோது மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைக்கிறோம், அதன் அவசியத்தை உணரவைக்கிறோம். எல்லோரிடமும் மரியாதையாக பழக. மற்றவரை மதிக்க கற்பிக்கிறோம். சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக நடக்க வைக்கிறோம். எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறோம்.
நீங்கள் அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கும் கீ போர்டு இதை கற்றுக்கொடுக்காது.
நாங்கள் அவர்களை நிறைய படிக்க வைக்கிறோம். மேலும் நிறைய தெரிந்துகொள்ள அவர்களே இப்போது பல புத்தகங்களை படிக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்று புரிய வைக்கிறோம். கணிதங்களில் சிறக்க வைக்கிறோம். இயற்கையில் இறைவன் அனைவருக்கும் அளித்த மூளையை உபயோகிக்க கற்றுக்கொடுக்கிறோம். கால்குலேடர்களை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. பல மொழிகளில் அவர்களை பயிற்றுவித்து பல தேசங்களில் சுலபமாக வாழ கற்றுக்கொடுக்கிறோம். எங்கள் வகுப்பறை அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவுகிறது.
கடைசியாக அவர்களும் ஒன்று சொல்வேன் ''குழந்தைகளா, ஆசிரியர்கள் நாங்கள் உங்களுக்கு அளித்த இந்த பரிசுகளை நீங்கள்புரிந்து கொண்டு, மனதில் இருத்திக்கொண்டு,அதன் படி நடந்து, சரியானபடி உபயோகித்தால் நீங்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் அடைவீர்கள்.''
என் போன்ற ஆசிரியர்களை, நாங்கள் என்ன சாதித்தோம் என்று அறிந்துகொண்டு,பணம் தான் முக்கியம் என்று கருதாமல், அதால் எதையும் சாதிக்க முடியாது என்று உணர்ந்தால், நாங்கள் தலை நிமிர்ந்து சொல்வோம், பாவம் ஏதோ அறியாமல் சிலர் வேறுமாதிரி நினைத்தார்கள் என்று. இன்னும் சொல்லட்டுமா ஆசிரியர்கள் நா ங்கள் என்ன சாதிக்கிறோம் என்று ?
சாதாரண சிறுவர்களை யும் சிறுமிகளையும் நாங்கள் கடின உழைப்போடு, பெரிய கம்பனி அதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள் ஆக்குகிறோமே , ஒரு உயர்ந்த கம்பனி அதிகாரியாக நீங்கள் என்ன சார் சாதித்தீர்கள்.
கம்பனி அதிகாரி முந்திரிபருப்பு நிறைந்த ஸ்பூனை கீழே போட்டு விட்டு வாயைப் பிளந்தார்.
கமலாமா, உங்கள் மாதிரி,, ஒவ்வொரு வீட்டிலும் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, விளையாட்டு சொல்லிக்கொடுக்கும் கோச், மந்திரங்கள் ஸ்லோகங்கள் சொல்லிக்கொடுப்பவர் அனைவருமே மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர்கள் தான். கவலையே படாதீர்கள்.
சார் உங்கள் மாதிரி தாத்தாக்களும் சிறந்த ஆசிரியர்கள் தான் மறந்துவிட்டீர்களே. அழுதுகொண்டு வந்தவள் சிரித்தாள்.
No comments:
Post a Comment