Tuesday, November 18, 2014

ஆடி அமாவாசை

பூமியை காப்பாற்றிய பிறகு வராக அவதாரம் தனது கொம்புகளில் ஒட்டியிருந்த 3 மண் உருண்டைகளை எடுத்து பூமியில் வைத்து தனது வியர்வையிலிருந்து தோன்றிய எள் தானியத்தை அந்த மண்உருண்டைகளின் மீது வைத்து நானே பித்ருவாக இருப்பேன்”
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே இந்த கண் கொள்ளா காட்சியை காண நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று பாட தோன்றுகிறது. நம்முடைய இரண்டு கண்கள் மட்டும் இதை காண போதுமா. எத்தினை ஆயிரம் கண்கள் இருந்தாலும் போராது.காக்கும் கடவுள் திருமாலின் முதல் அவதாரம் மச்சாவதாரம் நிகழ்ந்தது லெமூரியா கண்டமாகிய தமிழகத்தின் சத்யவரதன் என்ற ராஜரிஷி மன்னனோடு தான் அந்த அவதாரத்தில் கடல்கோளால் பூமிஅழிந்தபிறகு உயிர்பிழைத்து மீண்டும் பூமியில் மனிதர்களை உருவாக்கியது பாண்டிய நாட்டு சத்தியவரதன் மன்னனே ஆவான்.


இரண்டாவது அவதாரம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தை பங்கிட்டு அளிக்க எடுத்த கூர்மாவாதாரம்.இப்படிதிருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால்
பூமியை கவர்ந்து சென்ற இரண்யாக்ஷனை வதைத்து பூமியை காக்க எடுத்தது வராக அவதாரம் என்ற பன்றி அவதாரம் ஆகும். இது இரண்டாம்கடல் கோள் முடிவுகாலம் ஆகும்.


பூமியை காப்பாற்றிய பிறகு தனது கொம்புகளில் ஒட்டியிருந்த 3 மண் உருண்டைகளை எடுத்து பூமியில் வைத்து தனது வியர்வையிலிருந்து தோன்றிய எள் தானியத்தை அந்த மண்உருண்டைகளின் மீது வைத்து நானே பித்ருவாக இருப்பேன் என்று கூறினார். அதன்படி பிதா,பிதாமஹர்,பிரபிதாமஹர் என்ற மூன்று தலைமுறை பிதுர்வடிவாக திருமாலே விளங்குகிறார்.


ஜோதிடக்கலையின் படி கடகம் என்ற நண்டு வடிவ இராசி திருமால் வாழும் திருப்பாற்கடலை குறிக்கும். இந்த கடக இராசியில் சூரியன் நுழையும் போது ஆடிமாதம் பிறக்கிறது.அந்த ஆடிமாதத்தில் மாதாகாரகன் சந்திரன் பிதுர்காரகன் சூரியன் இணையும் நாள் அமாவாசை ஆகும். பிதுர் வடிவாக விளங்கும் திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றிய எள் கர்மகாரகன் சனீஸ்வரனுக்கு உரியது ஆகும்.சனீஸ்வரனின் வாகனமாகிய காகத்தை நாம் முன்னோர்களின் தூதுவனாக கருதி பிதுர்களுக்கு உணவளிக்கிறோம். கடலில் பிதுர்களுக்கு எள்ளை இறைக்கும் போது நாம் அணிகின்ற தெய்வீக காந்தசக்தி கொண்ட புனிதமான தர்ப்பை புல்லுக்குரிய கிரகம்
கேது பகவான் ஆவார். கடல்காரகத்துவம் கொண்ட சந்திரனின் எதிர் மறைகிரகமான கடல்வாழ்சுறாமீன் வடிவம் கொண்ட  நெப்டியூன்(வருணன்) என்று கேது பகவான் அழைக்கப்படுகிறார் மழையை நாம் முன்னோர்களின் ஆசீர்வாதம் என்கிறோம் .
பிதுர்கள்வாழும் கடல்நீரே நீராவியாகி மழை யாக நமக்கு கிடைக்கிறது. இறந்தவர்களின் உடலை எரித்த அஸ்தி என்ற சாம்பலின் ஒரு பகுதியை நாம் கடலில் தான் கரைக்கிறோம். சனீஸ்வரனின் நவக்கிரகஸ்தலமாகிய தர்பாரண்யேஸ்வர் திருக்கோவில் தர்பை வனமாக (ஆரண்யம்=காடு=வனம்)இருந்ததால் தான்
தர்பாரண்யேஸ்வரர் என்று பெயர் பெற்றது.இத்தகைய பெருமைக்குரிய காரண காரியங்களை ஆடி அமாவாசை ஏன் பெற்றுள்ளது என்பது இப்போது பலருக்கும் விளங்கி இருக்கும்


நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! 5
வேகம் கொடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க.
தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

No comments:

Post a Comment