Friday, November 21, 2014

சா ப்ட்வே ர் எஞ்சினியரின் டெய்லி வேலைகள்


8:30AM: எழுந்திருக் கறது
8:45AM: கடுமையான சிந்தனை குளிப்பதா/வேண்டாமா?.
8:50AM: சரி குளிச்சு வைக்கலாம் .
9:15AM: பஞ்சிங் இன் .
9:20AM: மெயில் செக்கிங் .
9:25AM:எதுக்கும் இன்னொருதடவை செக் பண்ணலாம்
9:30AM: ஓகே எப்படியும் 9-30AM ஆயாச்சு ஒரு டி குடிக்கலாம்
9:45AM: டி பார்ட்டி..(என்னனமோ நிறைய வேலை செய்தா மாதிரி) .
10:00AM: மறுபடியும் செக் மெயில் .
10:05AM: ... என்னாச்சு எல்லா நண்பர்களுக்கும் ? எல்லாரும் இருக்காங்களா இல்ல மண்டைய போட்டங்களா?
10:20AM: ஐயோ தனியா வேலை பாக்கறேனே!.யாரவது சாட்டிங் க்கு வர மாடங்கல்ல்ல்லல்ல்ல்ல் ?
10:30AM: அங்க இங்க சுத்தி பாக்கறது.... அதோ ஒருத்தன் ரொம்ப மும்மரமாக வேலை பாக்கறான்... பாவம்  ..
10:40AM: சரி!வெட்டியா பொழுது போக்கினது போதும் எதாவது வேலை பாக்கலாம் 
ஆனா என்ன பைல் அது? (ஐயோ பேரே ஞாபகம் வரலையே?)

11:00AM: அட கடவுளே பாஸ் ஆபீஸ் குள்ள வந்துட்டாரே...
சரி சரி வேலை பண்ணற மாதிரி  பிசியா கொடயலாம் .

11:30AM: நான் தான் எல்லாத்தியும் பாத்து பாத்து செய்யணுமா?
எதாவது தப்பு நடந்தா நானா பொறுப்பு?

11:45AM: ஓகே சல்லிசு ஒரு பிரயோஜனம் இல்லை....
யாரவது இளிச்சவாயன் இருக்கானா  பாக்கலாம்...

12:00AM: ச்சே மூடே அப்செட்டு ஆயாச்சு..
மத்யானம் லஞ்ச்க்கு அப்பறம் வேலைய பாக்கலாம் .

12:30AM: லஞ்ச்
1:00PM: லஞ்ச் முடிஞ்சாச்சு .
1:10PM: ஓகே ஒரு தம் அடிக்கலாம் காலைல இருந்து ஒரே டென்ஷன் .
1:35PM: அப்பாடா தம் அடிச்சப்பரம்தா ன் கொஞ்சம் இதமா இருக்கு..நல்ல வேள நா காசே குடுக்கல (எதோ ஜூனியர் போல சரி... கண்டுக்காதே) .. .
1:50PM: ஆஹா மூட் ரொம்ப நல்ல இருக்கு இப்போ.. வேற எதாவது வெப்சைட் பாக்கலாம் .
2:30PM: ச்சே இப்படி தூக்கம் தூக்கமா வரணுமா...
2:45PM: பரவா இல்ல ஒரு டி குடிக்கலாம் .
3:00PM: ப்ரென்ட்ஸ் கூட கம்பெனி பத்தி கொர சொல்லறது,நாட்டு நடப்ப பத்தி         கலந்து உரையாடறது( என்னமோ நாட்ட பத்தி இவங்களுக்கு தான்             அக்கறை இருக்கற மாதிரி)
4:00PM: அடடா இந்த டெஸ்டிங் பண்ணற ஆளுக்கு இப்பதான் வரணுமா?
4:11PM: சரி சரி பிஸியா இருக்கற மாதிரி சமாளிப்போம்
4:12PM: என்னடா இது.. இவன் நம்ப கிட்ட ஹெல்ப் கேக்கறான்..?
4:15PM: சரி விடாதே மச்சி இவன கெஞ்ச வை..
4:50PM: ஒன்னும் நடக்கல, இவனோட பேசினது தான் மிச்சம்..
4:55PM: திடீர்னு பாஸ் வரது தெரிஞ்சு, சத்தமா டெக்னிகல்தப்பு வந்தா மாதிரி                  நடிக்கலாம்... (என்னமோ முழு முச்சா வேலை பாத்த மாதிரியும் . இந்த 
டெக்னிகல் தப்புனால வேலை நின்ன மாதிரியும் பாவ்லா).
5:00PM: பாஸ் போயாச்சு போ நல்ல வேலை தப்பிச்சாச்சு...
5:05PM: தப்ப யார் மேல போடலாம்? .
5:10PM: சரி மெயில் பாக்கலாம்.. ஆஹா ஒரு மெயில் வந்திருக்கே..
5:13PM: .ஏதோ கடி ஜோக் பரவில்ல போ... பழைய ஜோக் .. ஆனாலும் ஓகே
5:14PM: ஆப்பிஸ் டைம் முடிஞ்சாச்சு ஓடலாம் ஹுர்ரே .
5:15PM: பஞ்சிங் அவுட் பண்ணியாச்சு...

5:25PM: ரூம்ல போய் கதவ சாத்தியாச்சு அப்பாடா ஆபீஸ் நா என்ன வேலை.... 
டா சாமி..

5:26PM: TV பாக்கலாம்! ச்சே ஒரு ப்ரோக்ராம் பார்க்கற மாதிரி இல்ல...
8:30PM: என்னடா உலகம் இது.. என்னடா ஆபீஸ் இது.. தினம் இதே ரோதன போ.. கடவுள் தான் எதாவது மந்திரம் , மாயம் செய்யணம்.. கவர்ன்மெண்டும்  ஆபிசும் ஒன்னும் பண்ணாது சாமி....
8:45PM: டின்னெர் வந்தாச்சு.. அய்யோ சகிக்கல.. என்ன பண்ண? வேற வழி? .
8:48PM: சாப்பிட்டு தொலைக்கலாம் ..
12:45AM: எப்படியோ இன்னிக்கு பொழுது போயாச்சு.
1:46AM: சரி தூங்கலாம் ..நாளைக்கு நிறைய வேலை இருக்கு ...


இது ஒரு பொழுதுபோக்கு மெயில்.. யாரையும் புண்படுத்த அல்ல

No comments:

Post a Comment