Sunday, November 30, 2014

திருமண / மறுமண சிக்கல்

தற்பொழுது விவாஹரத்து என்பது ஒரு பெரிய வியாதி போல பரவுகிறது . ஒரே மகன் ஒரே மகள் பாசம் கண்ணை மறைக்க நிறைய பொய்களை சொல்லி ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு கோர்ட் வாசலில் இரு குடும்பமும் சினிமா வில்லன் போல முறைத்துக்கொண்டு இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் போல ஒரே பந்தில் சிக்ஸர் ஆவலில் எல்லோரும் காத்திருக்கிறார்கள்
பிரிவுக்கு காரணம் ஐஞ்சு பைசா பிரயோஜனம் இல்லாத சமாச்சாரங்கள்
பெண்-
மாமியார் என்ன டெய்லி என்ன இம்ச பண்றா
அவர் என்கிட்டே சரியவே பேசறதில்லை
அவர் தங்கை வந்து எண்ணி தொந்தரவு பண்றா
இவன் ஆம்பளையே இல்லை
தனிக்குடித்தனம் போகறதுக்கு அவர் இஷ்ட படல
ஆண்
அவ என்ன மதிக்கல
அவ எனக்கு இதுவரை அன்பா ஒரு காபி கூட குடுததில்லை
எங்க அம்மா அப்பாவ மதிக்கறதே இல்ல
அவ சம்பளம் என்கிட்டே குடுக்கணுமா வேண்டாமா
என் அண்ணா தம்பி தங்கை யாரவது வந்தா மூஞ்சிய தூக்கி வைச்சுண்டு போவா
எப்ப பாத்தாலும் அவ வீடு புராணம்
போன எடுத்த வைக்கறதே இல்லை
நம்ப மாட்டேங்க மாப்பிளை அழைப்பு அன்னிக்கு கடைசி பந்திக்கு சாப்பாடே இல்லை , அப்புறம் எடுக்கு சார் கல்யாணம் பண்றோம் ???
மேற்கண்ட விஷயங்கள் எதையுமே நம்மால் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?
நிஜமான ப்ரோப்ளம் வெளியே சொல்ல முடியாது . நான் சொல்கிறேன்
இவனுக்கு ஆண்மை இல்லை
இவளுக்கு தாம்பத்யத்தில் விருப்பம் இல்ல
குடித்து விட்டு டெய்லி அடித்து துன்புறுத்துகிறார்
அவர் அம்மா எங்க ரூம்ல வந்துதான் படுத்துப்பா
டெய்லி யாரோடையோ நாலு மணி நேரம் பேசறான் அல்லது பேசறா
வயசான எங்க அப்பா அம்மாவுக்கு ஒன்னுமே பண்ண கூடாதாம்
இன்னும் மோசமான விஷயங்களை எழுத எனக்கு மனம் இல்லை
யார் எப்ப டிவோர்ஸ் பண்ணுவார்கள் என்பது இந்த காலத்தில் சத்தியமாக தெரியாத. ஆனால் டிவோர்ஸ் ஆரம்பிக்கும் முன்பு ஒருவரை ஒருவர் பலி / பழி வாங்கும நோக்குடன் கண்ணா பின்ன என்று போலீசிடம்
complaint.
இது எல்லாம் முடித்த பிறகு நாம் ஒரு செகண்ட் ஹான்ட் பொருளாகி விடுகிறோம். மார்க்கெட்டில் நமது விலை மோசமானது .இரெண்டாவது பஸ் எனவே எல்லாவறையும் அட்ஜஸ்ட் பண்ணி தொலையனும் என்ற இக்கட்டில் மாட்டிகொள்வோம் .அதற்குள் குழந்தை குட்டி என்று வேறு கடைமைகள்.
பழையதும் வெங்காயமும் சாப்பிட்டவர்கள் ,”’ நாங்க நூறு பவுன் போட்டோம் கல்யாணத்துக்கு சுளையா ஐம்பது லட்சம் செலவு பண்ணினோம் என்று பொய்களை அடுக்குவார்கள் , வக்கீலுக்கு கொண்டாட்டம் . நீங்க கவலையே படாதீங்க அவனை/அவளே தெருதெருவா ஓட விடறேன் என்று தூபம் .
ஒரு சின்ன ஐடியா – கல்யாணத்தின் போதே வரதட்சணை மற்றும் தங்க நகைகளை ஒரு வக்கீல் வைத்து document பண்ணுவதில் என்ன தவறு ?/
மாலையும் கையுமா register ஆபீஸ் வாசல்ல போய் நிக்கறோமே ? இத செய்ஞ்ச என்ன தப்பு ?? பின்னால உங்களை இதுதானே காப்பாற்றும்??
நிறய தவறுகள் பாசம் கண்ணை மறைப்பதாலும் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்பி களத்தில் இறங்குவதாலும் .
இன்றைய தலைமுறை டிவோர்ஸ் வாங்க கொஞ்சம் கூட யோசிப்பதில்லை
திருமணத்திற்கு முன் நிறைய யோசியுங்கள் –அனவச்யமாக கோர்ட் வாசலில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை

No comments:

Post a Comment