Sunday, November 16, 2014

எங்க காலத்துல எப்படி இருந்து இருக்கும்னு யோசிச்சு பாரு....

அன்புள்ள ஷ்யாமளாவிற்கு
பட்டு பாட்டி அநேக ஆசீர்வாதம். உன்னாண்ட ஒரு விஷயம் சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிண்டு இருந்தேன்... மறந்தே போய்டுத்து.... அத்த சொல்ல தான் இந்த கடுதாசி. எங்க காலத்துல லாம் அன்யோன்யம் எப்படி இருக்கும் தெரியுமா?... ஆத்துல எப்படிப்பட்ட கொழப்பமா இருந்தாலும்.... உங்க தாத்தா, அதான் எங்காத்துக்காரர் என்ன பண்ணுவார் தெரியுமோ?... சத்தமே போடாம நைசா நழுவிடுவார்....சொல்றேன் கேளு....

நம்ம தஞ்சாவூர் பக்கம் புது கதம்பம்னு ஒண்ணு இருக்கும்...... அதுல, தாழம்பூ,
மருதாணிப்பூ,
ரோஜா,
சம்பங்கிப்பூ
அப்புறம் கொஞ்சம் மரிகொழுந்து...

இந்த அஞ்சு பூவையும் சேத்து வச்சு பிரமாதமா தொடுத்து வச்சு இருப்பா... அப்போவே அது ஒரு மொழம் பூ எட்டணான்னு சொல்லுவார். அது எட்டு ஊருக்கு வாசனை அடிக்கும்டி. அத்த ஒரு அஞ்சு மொழம் வாங்கிண்டு வருவாரா.... ஆத்துல நீ நான்னு சண்ட போட்டது லாம் silent ஆயிடும்.... நாதனார், மச்சினி எல்லாம் கப்சிப்.... அப்புறம் என்ன...எல்லாரும் பழ நிலைக்கு வந்துடுவா...

இன்னொன்னும் கேட்டுக்கோ......அன்னைக்கு மட்டும் எல்லாம் சீக்கிரம் சாப்டு அவா அவா ஜோடிஜோடியா படுக்க போய்டுவா... சிரிக்காதடீ... படிக்கும்போதே நோக்கு சிரிப்பு வருதே.... எங்க காலத்துல எப்படி இருந்து இருக்கும்னு யோசிச்சு பாரு....

அந்த பூ மொழம் வாசனை அவளவு ஒரு இது... அவளவுதான் சொல்லுவேன்.... ஹ்ம்ம்ம்ம்.... இப்போ லாம் அந்த பூ எங்க கிடைக்குது.... கதம்பம்னு சொல்லிண்டு எத எதையோ வச்சு தொடுத்து கொடுக்குறா... அதுல ஒரு மண்ணும் இருக்காது...

அதெல்லாம் அந்த காலத்தோட போச்சு... சரி... நா அப்புறம் எழுதுறேன்... நீ ஆபீஸ் கிளம்பு, நோக்கு நேரமாயிடுத்து....
இப்படிக்கு 
பட்டு பாட்டி. 

No comments:

Post a Comment