Sunday, November 16, 2014

நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு”


தகவல்-ரா.வேங்கடசாமி
நன்றி-பால ஹனுமான்.
ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்:”நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்” என்றார்.
மகானின் உத்தரவுக்கு மறுப்பேது ?
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மகானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:
“நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு” என்று சொல்லியபின் மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாததுஅளவிடமுடியாததுசக்தி அளவிடமுடியாததுஅளவிடமுடியாததுஎன்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்

No comments:

Post a Comment