Thursday, November 27, 2014

காஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம்!


மஹா பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் மஹா பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர் தான்!
சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன்
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர்.
வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.
1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.
பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.
87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.
அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி, இன்று அதைச் செய்திருக்கிறேன்.
பிறப்பு விவரம்
பிறந்த தேதி: 20.5.1894
பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
பிறந்த ஊர்: விழுப்புரம்
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: சிம்ம லக்கினம்
ராசி: விருச்சிக ராசி
இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்
படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!
1. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.
2. சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.
3. அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு 6 பரல்கள்.
4. வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள் மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.
5. சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.
6. சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.
7. லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு
8. லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு
9. கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.
10. புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும். புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம், பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்
11. ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே சந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.
12. சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள்,
மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்
13. தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
மஹா சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.
14. ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.
15. விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்
16. ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்
17. ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்.
சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
1
முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள். இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
2.
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின்
வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது - மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
3.
லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக்காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத் துறவியாக்கிவிட்டான்
ஆயுள்
1.ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு அஷ்டகவர்க்கத்தில் 35 பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
2.மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு அவற்றிலிருந்து 12ம் வீடு - அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும்,
7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன் அதிபதிகள் தான்
மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது
(அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி
அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
3 சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக் கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. மஹா சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.
இத்தரையில் உதித்தெழுந்து இந்நிசியில எனையடைந்து
காதுதந்து குரல்கேட்டு குறைதீர்க்க வந்தீரோ
கற்பகமாய் கோமளமே!
எவ்வுறவும் குறையில்லா நிறைபெற்று நல்வாழ்வும்
சிறந்தோங்கி மனமகிழ திருவருளும் புரிவாயே
தாயுமான தீனதயாளா!
வேதம் நிலைபெற உலகம் உய்யும்" என்பதனை ஒரு நூறு வருடங்களுக்கும் மேலாக நமக்கு தெளிவுற உணர்த்தி நல்வாழ்வினை நாம் மட்டுமன்றி நமக்கு பின்னராய் வருன் சந்ததியினரும் அடையத் தான் வேதசம்ரக்ஷணராய் அவதாரம் எடுத்தாரோ அந்த வல்லபர்!!
முப்பத்திரண்டு அறங்களிலே மேலான அறம் பசுவுக்கு அருகம்புல்லை உண்ணத் தருவது என்றும், எப்படிப் பட்ட சாப தோஷங்களிலிருந்தும் கலியுகத்தில் நாம் விடுபடவேண்டுமாயின் கோசம்ரக்ஷணமும் தேவை என்பதையும் நமக்கெல்லாம் வரப்ரசாதமாய் அருளிய அந்தத் திருவடிகளில் அனுதினம் பணிவது தானே சிறப்ப

1 comment:

  1. ஐய்யா மகா பெரியவா ஜாதக கட்டம் கிடைத்தால் தரிசிக்க அனுப்பி வைக்க இயழுமா

    ReplyDelete