Friday, November 14, 2014

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் -

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் - ஒரு விளக்கம்
இந்த வாக்கியம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் ஒன்றாகும். கோபம் இருக்கும் இடத்தில்தாம்பா குணம் இருக்கும், அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா, நீ ஒண்ணும் மனசில வச்சுக்காதே என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். அதாவது யாரிடம் கோபம் இருக்கிறதோ அவரிடம் நல்ல குணம் இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் நாம் இதை பார்த்து வருகிறோம். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் இதுவல்ல.
கோபம் சண்டாளம் என்கிறது சாஸ்த்திரம். ஆகவே கோபம் கூடவே கூடாது.
குணம் நாடி குற்றமும் நாடி என்கிறார் வள்ளுவர். ஒருவருடைய குணத்தை அறிய பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் அவர் கோபமாக இருக்கும் சமயத்தில் அவர் பேசும் பேச்சு, நடவடிக்கை முதலியன.
ஒருவர் கோபப்படும்பொழுது அவருடைய சமநிலை புத்தி பாதிக்கப்படும், சிந்திக்கும் திறன் மங்கிவிடும். இருந்தாலும் நல்ல குணம் உடைய ஒருவர் அந்த நிலையிலும் சிறிதும் தடுமாறாமல், கடுஞ்சொல் கூறாமல் அமைதியாக அந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக (Diplomatic) கையாள்வார்.
அதே சமயத்தில் நற்குணம் இல்லாத ஒருவர் தீய வார்த்தைகளை அனாவசியமாக உபயோகித்தும் அடிதடிகளில் இறங்கியும் பிறரை அவமானப்படுத்தியும் மகிழ்ச்சி கொள்வர்.
அதாவது ஒருவர் கோபமாக இருக்கும் பொழுதுதான் அவரது உண்மையான குணம் வெளிப்படுகிறது.
இதைத்தான் நாம் கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கிறது என்று கூறுகிறோம்

No comments:

Post a Comment