லோகத்தில் சாந்தம் பரவ வேண்டுமென்றால் நாம் சாந்தர்களாக வேண்டும். இதற்கு நம் வாழ்க்கை முறைகளே நம்மை ஸத்வ குணமுள்ளவர்களாகப் பண்ண வேண்டும்.
ஸாத்வீக உணவையே உண்ணவேண்டும். புலால் உணவாக இல்லாமல் மரக்கறி உணவாக இருக்கவேண்டும்.
தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை பண்ணித் தின்கிறவனிடம் அருள் எப்படி உண்டாகும்? என்று கேட்கிறார் திருவள்ளுவர்.
பரம ஸாத்வீக உணவானாலும் கூட அளவு முக்கியம்.
ஒரு சாப்பாடு, ஒரு பலகாரம் என்றிருப்பது நல்லது. இல்லாவிட்டால் இரண்டு சாப்பாடு, ஒரு டிஃபன் என்று இப்போது பெரும்பாலோர் வைத்துக் கொண்டிருக்கிற மாதிரியே இருந்தாலும் ஒவ்வொரு வேளையும் மிதமாகச் சாப்பிடவேண்டும்.
தினசரி இரண்டு சாப்பாடு, ஒரு சிற்றுண்டி என்று வைத்துக் கொண்டாலும், சனிக்கிழமை, குருவாரம், ஸோமவாரம் (மாதா, பிதா இல்லாதவரானால்) அமாவாஸ்யை, இன்னம் அவரவர் குல தெய்வத்தைப் பொறுத்து ஷஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி, பிரதோஷம் ஆகிய தினங்களில் ஒரு வேலை சாப்பாடு, ஒரு வேளை பலகாரம் என்று வைத்துக் கொள்ளவேண்டும்.
வைத்ய சாஸ்த்ரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிடணும். கால் வயிற்றுக்குத் தீர்த்தம் குடிக்கணும். மற்ற கால் வாயிறு வாயுவுக்கு விட்டு விடணும்.
வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும்.
அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆஹாரமே தவிர ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.
ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி,
இரண்டு வேளை சாப்பிடுகிறவன் போகி,
மூன்று வேளை சாப்பிடுகிறவன் ரோகி.
இரண்டு வேளை சாப்பிடுகிறவன் போகி,
மூன்று வேளை சாப்பிடுகிறவன் ரோகி.
No comments:
Post a Comment