Saturday, November 8, 2014

கடி ஜோக்ஸ் 117


அப்பா: ஏண்டா, வெக்கமா இல்லே..? ஹிஸ்டரி பேப்பர்லே சைபர் மார்க் வாங்கிட்டு வந்திருக்கியே?
மகன்: பழசையெல்லாம் மறக்கணும்னு, நீதானே அடிக்கடி சொல்வே..! -
...............

. ஒருவர்: நீதிபதிகள் ஏன் கையில சுத்தி வச்சிருக்காங்க? மற்றவர்: ஆணி அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லத்தான்...
.....................................
கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா? பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்! கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே? பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க.... கண்டக்டர்: பின்னாடியும் யாரும் எடுக்கலையேப்பா! பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல, பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா, நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்? -
.........................

 ஒருவர்: நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க? 

மற்றவர்: யார் அது மணி? அவனுக்கெல்லாம் நான் எதுக்கு கார் ஓட்டணும்? -
........................................................
 ராமு: டேய் சோமு... வரவர எதப் பாத்தாலும் மங்கலாவே தெரியுதுடா... சோமு: அப்படின்னா, டாக்டரைப் பார்க்கவேண்டியதுதான்? ராமு: அவரும் மங்கலாத்தாண்டா தெரியுறார்..! -

.............................................

. "நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை எப்படி வாசிப்பார்?' "எப்படி வாசிப்பார், தெரியலையே!' "வரி வரியாத்தான் வாசிப்பார்.

..............................................................

ஒருவர்: கடல்ல மூழ்கினவரைக் காப்பாத்துனது தப்பாப் போச்சு... மற்றவர்: ஏன்? ஒருவர்: இப்ப கடன்ல மூழ்கியிருக்கேன், காப்பாத்துங்கன்னு சொல்றாரு,,, -
....................

கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்? டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..! -
....................................................

ஆசிரியர்: டேய்! சுந்தர், ஏண்டா பரீட்சை ஹால்ல தூங்குற? 

சுந்தர்: நீங்கதானே சார், ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியலைன்னா சும்மா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க...

.................................................

 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது... இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்... 
அவர்: எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை... படின்னு சொன்னாப் போதும்... உடனே தூங்கிடுவான்.. 
...................................

. "ஏண்டா... ராமு! படம் பார்க்கும்போது அடிக்கடி தும்மறே..?'

 "இது மசாலாப் படமாச்சே அதான்..!' -
....................................

 அப்பா: ஏண்டா, டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டு காட்டுறேம்பா! 

அப்பா: தம்பி எங்கடா..?

 மகன்: டிரம்முக்கள்ள இருக்கான்பா
.............................................
வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை
கரண்ட் :

வரும் ஆனா வராது...

நதிநீர் பங்கீடு :
பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

விலைவாசி :
ரணகொடூரமா இருக்கு..!!

பெண்கள் :
வாம்மா மின்னலு.....

இந்திய பாகிஸ்தான் எல்லை :
இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக்
கூடாது.... நானும் வரமாட்டேன்..!!

பெட்ரோல் விலை :
நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!!

ஷேர் மார்க்கெட் :
எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ...
பிளான் பண்ணாம
பண்ணா இப்படித்தான்..!!

சினிமா :
அப்பா ....கண்ண கட்டுதே.......
..
அரசியல் :
கிளம்பிட்டாங்கையா ........கிளம்பிட்டாங்க..!!!!

..............................................
.டீச்சர் : ஒளியின் வேகம் சத்ததின் (ஒலி) வேகத்தை விட அதிகம். அதனால்தான் முதலில் நமக்கு மின்னல் தெரிகிறது. பின்னர் இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது.

மாணவன் : எங்க வீட்டுல கரண்ட் போயிட்டா ஜெனரேட்டர் போடுறோம்.....அப்போ சத்தம் முதல்ல வருது. அப்புறம்தான் வெளிச்சம் வருது. இதுக்கு என்னா விளக்கம் சொல்லுறீங்க?

No comments:

Post a Comment