Saturday, October 11, 2014

ரீல் VS ரியல் கோர்ட்! _ இது கோர்ட் தர்பார்


’’ஐ அப்ஜக்ஷன் யுவர் ஆனர்!...

மை லார்ட் ..குற்றம் சுமத்தப்பட்ட என் கட்சிக்காரர் சம்பவம் நடந்த நேரத்தில் ’பெங்களூர் டேஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதற்கான ஆதாரமாக அவர் ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டை உங்கள் முன் சமர்பிக்கிறேன் யுவர் ஆனர்...’’-என வெள்ளை வெளேர் என கோட் அணிந்து கொண்டு பூசினாற் போல் தொப்பையோடு பேசும் வக்கீலின் வீராவேசமான டையலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கும் பாருங்க...

ஆனா நிசத்துல அப்படியா நடக்கும்?.ஜட்ஜ்மெண்ட் வர வரைக்கும் காட்சிகள் எல்லாமே திக் திக் ரகங்கள் தானே!

ரைட்டு!

அப்படீனா சினிமா மற்றும் ரியல் கோர்ட் காட்சிகள் எப்படி மாறுதுன்னு ஒரு அலசு அலசுவோம் வாங்க!


ஜட்ஜ்க்கு முன்னால ரவுண்ட் டேபிள் போட்டிருக்கும். அதுக்குப் பின்னாடி ஒரு 20 பேருக்கும் மேல உக்காந்திருப்பாங்க. லாயரா நடிச்சிருக்கிற ஹீரோவோ.. அல்லது ஹீரோவோட லாயரோ  ‘ஐயாம்தான் இந்த கோர்ட்டு, கேசேலாம் கண்டுபிடிச்சது..‘ங்கற மாதிரி நீட்டி மொழக்கி வாதாடி.... தன்னோட சகலகலா தெறமைய காட்டுவாரு.அந்த இடத்துல ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிச்சிக்கும். .

திடீர்னு உள்ள பரபரப்பா வந்து ஆப்போசிட் லாயர்கிட்ட பேசாம நேரா ஜட்ஜ பாத்து கையில இருக்குற புக்குல இருக்குற தூசை தட்டிக்கிட்டே..

.‘அப்ஜக்ஷன் யுவர் ஆனர்‘ னு கத்துவாரு. ஜட்ஜுக்கு ஒரு நிமிஷம் பக்கு‘னு தூக்கி வாரிப்போட்டுடும்.  


அப்டியே ஆடிப்போய் உச்சி தலைமுடி இரண்டும் நட்டுக்கிட்டு நிக்கும். கோர்ட் அப்டியே ஸ்தம்பிச்சு நிக்கும். அதுக்கப்புறம் மெதுவா வாதாட ஆரம்பிப்பாரு நம்ம ஹீரோ.






















கோர்ட்டுக்குள்ள ஆடியன்ஸ் எல்லாம், ‘ஆஹா என்னமா புடிச்சார் பார்றா பாயிண்ட‘ என கைத்தட்டி விசிலடிப்பாங்க. 

யோவ் கிரிக்கெட் மேட்ச் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு‘ங்கற கணக்கா ஜட்ஜ் காண்டாயிருப்பாரு. இந்த இடைப்பட்ட நேரத்துல எல்லாரும் ஆச்சரியமா, கசமுசான்னு ஒருத்தருக்கொருத்தர்  என்னமோ அன்னிக்குத்தான் அவங்கள பார்க்கறமாதிரி பாத்து ஏதோதோ பேசிப்பாங்க. இதுதான் நமக்கு சரியான நேரம்னு, வெயிட்டிங்ல இருக்குற சுத்திய எடுத்து மேஜமேல ‘ஆர்டர்.. ஆர்டர்..ஆர்டர்‘னு மூணுவாட்டித் தட்டுவாரு. அப்பவும் அமைதியாவலனா..  தன்னோட வழுக்க மண்டையில் சின்ன புள்ளிப்புள்ளியா வேர்த்திருக்குற வேர்வைய கர்ச்சீப்பால் துடைச்சிக்கிட்டு , எதையோ சேராததை சாப்பிட்டது போல முக பாவனையையோட ‘இந்த வழக்கை வருகிற 31 ஆம் தேதி  ஒத்திவைக்கிறேன்‘னு சொல்லிட்டு எழுந்து போயிடுவார்.


நம்ம பட ஹீரோ லாயரு.... அரைமணி நேரம் தொண்டைத் தண்ணீ வற்ற வாதாடுவாப்ல. ‘ என்னா மனுஷன்யா இவரு.. இன்னா அழகா வாதாடியிருக்காருய்யா, இவரு எடுத்த எந்த கேசுதான் தோத்திருக்கு என ஒரு கேசுக்கே, மூக்குமேல விரலை வச்சு எல்லா ஆடியன்ஸூம் பேசுவாங்க.

'ஐயம் ஸ்பீக்கிங் நோ கிராஸ் ஸ்பீக்கிங்..'னு சத்தமாக வக்கீல் வண்டு முருகன்கள் சில பேர் வாதாடுவாங்க. ‘மிஸ்டர் வண்டு கோர்ட்ல இப்டிலாம் கத்தக்கூடாது‘னு ஜட்ஜ் அய்யா கடுப்பேறி சொன்னதும், ‘கடுப்பேத்துறார் மைலார்ட்‘னு ஆசுவாசமா அதுக்கப்புறம் வாதாடுவாரு.


சாட்சியிடம்...நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என அரைமணிநேரம் பேசி சத்தியம் வாங்குவாங்க.



எசமான் இவன் என் வீட்ல இருந்து இரண்டு வெள்ளிக் குத்துவிளக்க திருடிட்டான்.. ஓட்டை பிரிச்சுக்குனு உள்ளறா குதிச்சுட்டான், முள்ளம்பன்றி   முனியாண்டியாண்ட ஒரு லட்ச ரூவா கடன வாங்கி ஏமாத்திப்பூட்டானு வரும் கேஸ்ஸுக்கெல்லாம் கைதிக் கூண்ட்ல கைக்கட்டி நிக்க வச்சு கேள்விமேல கேள்விக்கேப்பாங்க. அதே மாதிரி கொலை, பாலியல் பலாத்காரம்‘னு பெரிய கேஸூக்கும் அதே கோர்ட் கூண்டில நிக்க வச்சிருப்பாங்க.

ஆனா பாருங்க...நெசமான கோர்ட்ல என்ன நடக்கும்னு தெரியுமா?

அமர்வு நீதிமன்றம். ஃபேமிலி கோர்ட், பீனல் கோர்ட், கஞ்சா, கடத்தலுக்குனு ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான அமர்வும் இருக்கும்.

ஆடியன்ஸ் அவ்வளவு பேர் உள்ளே உட்கார முடியாது. அதேபோல அவங்கவங்க கேஸ்ஸூக்கு மட்டும் வந்து முன்னாடி உட்காருவாங்க யார் இந்த கேஸ்ஸிற்கு வாதாடுகிறார்கள் என்பதை முன்கூட்டியே கோர்ட்டில் ரிஜிஸ்டர் செய்யவேண்டியது அவசியம்.

 ‘அப்ஜக்ஷன் யுவர் ஆனர்‘ என யாரும் திடீரென உள்ளே நுழைந்து கத்த முடியாது. மீறி கத்தினால்.....

’மிஸ்டர் வண்டு இப்படியெல்லாம் கோர்ட்டுக்குள்ள வந்து கத்தக் கூடாது‘னு சொல்றதுக்கு முன்னாடி அவரே வெளியிலப் போயிடனும்.

அதேபோல நீதிபதியெல்லாம் ஆர்டர், சைலன்ஸ் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். அவர் பின்னால் நிற்கும் டவாலிதான் அமைதியாக இருக்கச் சொல்லுவார்.

ஐயாம் ஸ்பீக்கிங்க் நோ கிராஸ் ஸ்பீக்கிங் என்றெல்லாம் கராறாக சொல்லி கத்தமாட்டார்கள். இன்னொன்று வழக்காடிக் கொண்டிருக்கும் பொழுதுகூட நிறைய வக்கீல்களும் நின்றிருப்பார்கள் அல்லது இடம் இருந்தால் உட்கார்ந்திருப்பார்கள்.

நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்றெல்லாம் எல்லோரிடமும் மூச்சுக்கு முன்னூறுதடவை  சொல்லி சொல்லி சத்தியம் வாங்க மாட்டார்கள். பகவத் கீதையை நீட்டி, ‘நான்சொல்வதெல்லாம் உண்மை‘ என்று மட்டும் சத்தியம் வாங்கிக் கொள்வார்கள்.

எவ்வளவுப்பெரிய வழக்காக இருந்தாலும், பொது இடத்தில் அந்த சி.டி யையோ அல்லது கேசட்டையோ எல்லோரும் பார்க்கும் விதமாக போட்டுக் காண்பிக்கமாட்டார்கள். தேவைப்பட்டால் நீதிபதி அவருக்கென தனியே இருக்கும் சேம்பரில் போட்டுப் பார்ப்பார்.

எல்லா குற்றத்திற்கும் உடனே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்விமேல் கேள்விக்கேட்டு பிறகு தீர்ப்பு வழங்குதல் போன்ற செயல்கள்  உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதில்லை. மாவட்ட நீதிமன்றங்களில் கூண்டுகள் உண்டு.

எந்த வழக்கானது நீதிமன்றதுக்கு வருகிறதோ, அந்த வழக்கினை எடுத்து யார் வாதாடுகிறாரோ அவருடைய பெயர் மற்றும் இதரவிபரங்களை கோர்ட்டில் முன்னமே சமர்ப்பிக்க வேண்டும்.
ரியல் கோர்ட் பத்தி சொன்னதெல்லாம் இங்கே கொஞ்சம் தான்..!

அதனால ஐயம் அப்ஜக்ஷன் யுவர் ஆனர்னு கிளம்பிடாதீங்க மக்களே!

No comments:

Post a Comment