Saturday, October 11, 2014

மௌனம் - Sri Maha Periva


Shared by our respected member Sri S Ramanathan 




எத்தனையோ காரியங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. அப்படி இருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார்.

"மௌனமாய் இருக்கக் கட்டுப்படி ஆகாது" என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள்.

ஜலத்தைக் கலக்குக் கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தால் அதற்குள்ளே இருக்கிற முத்து எப்படித் தெரியும்.

நாம் அநேக எண்ணங்களால் மனஸைக் கலக்கிக் கொண்டிருப்பதால் தான் உள்ளே இருக்கிற ஆத்மா என்ற முத்து தெரியவில்லை. எண்ண அலைகளை எல்லாம் நிறுத்தி விடுவது தான் நிஜ மௌனம். இதற்கு உபாயமாய் இருப்பது இப்போது நாம் அனுஷ்டிக்கவேண்டிய வாய் மௌனம்.

"யோக சாம்ராஜ்யத்துக்குள்ளே ப்ரவேஸிப்பதற்கு முதல் வாசலே மௌனம் தான்" என்று ஆசார்யாள் விவேக சூடாமணியில் சொல்லி இருக்கிறார்.

No comments:

Post a Comment