Saturday, October 18, 2014

பலகார விடுகதை

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான். 

02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது. 

03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம். 

04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.

05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.

06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.

07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.

08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.

09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.

10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.

11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.

12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.

13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.

14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.

15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.




பலகார விடுகதைக்கு விடைகள்:

1. அதிரசம்,
 2.போளி, 
3.பாதுஷா,
 4. சீடை,
 5.முறுக்கு,
 6.லட்டு,
 7.ரசகுல்லா,
 8.ஓலை பக்கோடா,
 9.பால் கோவா,
 10.குலோப் ஜாமூன், 
11.சோமாசா, 
12.சோன்பப்படி, 
13.மைசூர் பாகு,
 14.கெட்டி உருண்டை, 
15.அல்வா.





No comments:

Post a Comment