Saturday, October 18, 2014

கடி ஜோக்ஸ் 109


'வாட்ஸ் அப்' ல வந்தது.
நான் மட்டுமே சிரிச்சா எப்படி?

நீங்களும் சிரிங்க !

ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் 

நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி

மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் 

தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை 

உடையட்டும்

…..சுவாமி கல்லெறி சித்தர்


யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா 

,
இருங்க,
,
“குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய 

இருங்க,

கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா 

இருங்க,…இருங்க ஆனால்


நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது 

சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..

ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு 

லிமிட்டோடதான் இருக்கனும்…
.சுவாமி: தெனாலியானந்தா
——
நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்

நான் உன் பின்னால் இருப்பேன்…

ஏன் தெரியுமா?


அந்த கொடுமையை எவன் முன்னால நின்னு

பாக்கிறது …


..கவிக்குயில்: கரடி சித்தர்
—–
புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்…

ஆனால் brush பண்ணாம சிரிச்சால் நண்பனைக்

கூட எதிரியாக்கிவிடும்

எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க

ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க

……. சுவாமி:பல்லானந்தா
.................................................
சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது

மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே

தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர்

தண்ணியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பூமி

தினமும் சுற்றுவதில்என்ன அதிசயம் மகனே?
.........................
வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே

போகிறது. இரவில் இரண்டாவது காட்சி

சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில்

பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று

கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு

என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை

உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி

ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை.

மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு

தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும்.

அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த 

ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். 

வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். 

ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் 

கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்!

சில அடிதூரம் ஓடிவிட்ட அவனை என் பலம் 

முழுவதையும் திரட்டி ஓடிப்போய் பிடித்து நான்கு 

அடி கொடுக்கவும் பிரேஸ்லெட்டைக் 

கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
இந்த விஷயத்தை முதலில் மனைவியிடம் 

கூறவேண்டும் என்று நினைத்து அவளை எழுப்ப, 

நான் பேசும் முன்பு அவளே பேசத் தொடங்கினாள்.
“என்னங்க உங்களுக்கு வரவர ஞாபகமறதி 

அதிகமாயிட்டே போகுது. காலையில 

பிரேஸ்லெட்ட வீட்டிலேயே விட்டுட்டு 

போயிட்டீங்க” என்றாள்.
மேஜை மீதிருந்த பிரேஸ் லெட் என்னைப் பார்த்து 

சிரித்தது.
..........................................................

No comments:

Post a Comment