குருமூர்த்தியும் சிவராமனும் நல்ல நண்பர்கள்.
குருமூர்த்திக்கு, சங்கர குருவிடம் நிரம்ப பக்தி; சிவராமனுக்கு மடம், சுவாமிகளிடம் அக்கறையில்லை. இரண்டு பேர்களும் ஒரு நாள் தரிசனத்துக்கு வந்தார்கள். ‘நான் வரவில்லை’ என்ற நண்பரை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார், குருமூர்த்தி.
அன்றைக்கு காஷ்ட மௌனம் அனுசரித்தார்கள் பெரியவா. அதனால் வந்த பக்தர்களுக்கு தரிசனம் மட்டுமே பிராப்தம்; ஓர் அங்க அசைவு கூட இல்லை,
பெரியவாளிடம்.பெரியவாள் எதிரில் சிறிது நேரம் நின்ற பின் நமஸ்காரம் செய்தார் குருமூர்த்தி – ‘போய் வருகிறேன்’ என்பதற்கு அடையாளமாக சிவராமனும் நமஸ்கரித்தார்.
பெரியவாள் எதிரே தட்டு தட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, வாழைபழம், மாம்பழம், திராட்சை குலைகளை எடுத்து வைத்தார்கள் தொண்டர்கள் – எதாவது ஒன்றை பிரசாதமாக விடைபெற்று செல்லும் இருவருக்கும் கொடுக்கட்டுமே, என்று.
பெரியவா, ஒரு திராட்சை குலையை எடுத்து குருமூர்த்தியிடம் கொடுத்தார்; இரண்டே இரண்டு திராட்சையை சிவராமனிடம் கொடுத்தார்.
‘ஏன்? இப்படி?” என்று எல்லோர் மனதிலும் கேள்வி.
சிவராமன் சுவாமிகளிடம் பக்தி இல்லாதவர் என்பதால் குறைவான பிரசாதம?
ஏன், இந்த ஓரவஞ்சனை? குருபீடதிற்கு பொருத்தமாக இல்லையே?
ஆனால், குருமூர்த்தியும், சிவராமனும் இத்தகைய ஆராய்ச்சியில் இறங்கவில்லை. இருவருமே, உள்ளார்ந்த திருப்தியுடன் இருந்தார்கள்.
குருமூர்த்தியிடம கொடுக்கப்பட்ட குலையில் இருபத்தேழு திராட்சைகள் இருந்தன.
அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர்கள்; சம்சாரங்கள்; குழந்தைகள். மொத்தமாக இருபத்தேழு பேர்கள்!
சிவராமன் குடும்பத்தில் அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே! அதனால் இரண்டு திராட்சைகள்!
அது முதல், பெரியவா பக்தியில், குருமூர்த்தியை மிஞ்சிவிட்டார், சிவராமன்!
courtesy sri. mahesh krishnamoorthy
No comments:
Post a Comment