Wednesday, October 1, 2014

சோவின் "சந்நியாசியான தாத்தா"

ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின் 

கட்டுரையில் ஒரு சில துளிகள்

சோவின் 

"சந்நியாசியான தாத்தா"

என்னுடைய தந்தை வழிப்பாட்டனார் ராமநாத அய்யர்.

அவர் ஒரு அட்வகேட்.'லா லெக்சிகன்' என்று ஒரு

சட்ட அகராதியை எழுதியவர்.

செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பினாயூர்தான்

எங்களுடைய ஊர். பெரிய நிலச்சுவாந்தர். வீடுகளும் பல.

உடம்பின் மேலே சட்டை போட்டுக் கொள்வதை

இடையில் விட்டுவிட்டார். 'நார்மடி' என்று சொல்வார்கள்.

அப்படித்தான் வேட்டி கட்டுவார். வீட்டில் யாருக்காவது

உடல் நலம் சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்குப்போவது

அவருக்குப் பிடிக்காது. அவரே ராம ஜெபம் பண்ணுவார்.

அதில் குணமாகும் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும்.

அதை மீறி டாக்டரிடம் போனது தெரிந்தால் கோபப்படுவார்.

அதனால் டாக்டரைப் பார்க்கப்போனால் வீட்டில்

அவருக்குத் தெரியாமல்தான் போவார்கள்.

திருப்பதிக்குப் போனால் சென்னையிலிருந்து நடந்தே

போவார். எந்தப் படாடோபமும் அவருக்குப் பிடிக்காது.

நான் சிறு குழந்தையாக இருந்த போது- அப்போது

வெல்வெட் துணியில் என்னைப் படுக்க

வைத்திருக்கிறார்கள்.அப்போது வெல்வெட்டின் விலை

அதிகம்.[இது பிடிக்காமல் முண்டகக் கண்ணியம்மன்

கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்]

இப்படி இருந்த அவருக்கு ஒரு நாள் சந்நியாசம்

வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்து

விட்டது. காஞ்சிப் பெரியவர் மஹாஸ்வாமிகளிடம்

அனுமதி கேட்டார்.அனுமதி கொடுத்ததும் சந்நியாசம்

வாங்கிவிட்டார். எல்லாச் சொத்தையும் மகன்களுக்குப்

பிரித்துக் கொடுத்துவிட்டு காஞ்சி மடத்திலேயே

தங்கிவிட்டார்

No comments:

Post a Comment