Saturday, October 11, 2014

என் (உண்மைக்) கதை : அதிகமான விலைக்குச் சுண்டல் வாங்கவும்.

என் (உண்மைக்) கதை :
எனது ஊரில் நடைபெற்ற ஒரு சம்பவம். ஒரு அழகான பையன் ஒருவன் நான் எங்குச் சென்றாலும் என் பின்னாலேயே வருவான். நான் ரேஷன் கடைக்குச் சென்றால் அவனும் அங்கு வருவான். நான் மளிகை கடைக்குச் சென்றாலும் அங்கும் வருவான். நான் கோவிலுக்குச் சென்றாலும் அவனும் அங்கு வருவான்.
தினமும் ஒரு முறையாவது என் கண்களில் அவன் தென்படுவான். தினமும் அவன் என்னைப் பார்த்துப் புன்னகைப்பான். ஆனால் என்னிடம் பேசியது மட்டும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை நம்மை விரும்புகிறானோ என்று! ஒரு நாள் அவனிடம் வாய்விட்டு கேட்டேவிட்டேன் " என்னை நீ விரும்புகிறாயா ?" என்று ! அவன் அதற்கு ஒன்றும் பேசாமல் நின்றான். பிறகு "ஒரு மாதம் கழித்துச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
எனக்கு ஒரு மாதம் என்பது ஒரு யுகம் போல் தெரிந்தது. என் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. சாப்பிட பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. ஒரு பதற்றம். அவன் காதலைச் சொல்லாமல் வேறெதுவும் சொல்லி விடுவானோ ? இல்லை...இல்லை... அப்படிச் சொல்லமாட்டான். நம்பிக்கை இருந்தது. ஒரு மாதமும் ஆனது.

நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஒரு நாள் கோவிலில் என்னைச் சந்தித்தான். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. என் முகத்தில் வெட்கம் நன்றாகத் தெரிந்தது. இருந்தும் நானே முன்வந்து அவனிடம் " சொல். என்ன சொல்ல போகிறாய்? " என்று கேட்டேன். மன்னிக்கவும் ! இந்தக் கதையை. என்னால் இதற்குமேல் தொடர முடியவில்லை. காரணம்... நான் இரண்டு ரூபாய்க்கு வாங்கி தின்ற சுண்டல் பேப்பரில் இவ்வளவுதான் இந்தக் கதை இருந்தது. படுபாவிப்பயச் சுண்டல்காரன். இக்கதையைப் பாதியாகக் கிழித்து எனக்குச் சுண்டல் மடித்துக் கொடுத்துவிட்டான். மீதிக் கதையை யார் படித்தார்கள் என்று தெரியவில்லையே ???
நீதி :- அதிகமான விலைக்குச் சுண்டல் வாங்கவும். 

No comments:

Post a Comment